Sunday, July 16, 2023

_அக்னி தத்துவமும் அன்னதானமும்_

_அக்னி தத்துவமும் அன்னதானமும்_

அக்னியில் தயாரான உணவுப் பதார்த்தங்களை சாதி, மத, இன பேதமின்றி இறைவனை நம்பி வாழும் ஏழைகளுக்கும், இறைவனை வழிபடும் அடியார்களுக்கும் அளித்தல் அற்புதமான அக்னி தத்துவ வழிபாடாகும். 

சிறப்பாக இறைவன் அக்னி வடிவமாக எழுந்தருளிய திருவண்ணாமலையில் அக்னியில் தயாரான ரொட்டி கலந்த பிரிஞ்சி போன்ற உணவு வகைகளையும், திருக்கோயில் தெப்பக் குளங்களில் உள்ள மீன்களுக்கு ரொட்டி தானமும் அளித்தல் நலம்.

நெருப்பு, மின்னல், தீபம், மின்சார விளக்குகள் போன்றவை கண்களால் காணக் கூடிய அக்னி சக்தி வெளிப்பாட்டுப் பொருட்களாக உள்ளன. 

ஆனால், கண்களால் காண முடியாத அக்னி ஒன்று உண்டு. அதுவே ஏழைகளின் வயிற்றில் குடிகொண்டுள்ள பசி என்னும் கொடிய தீயாகும். 

மற்ற அக்னிகளை விட இந்தக் காணா அக்னித் தீயை காணக் கூடிய உணவால் அணைப்பதே அற்புதமான வழிபாடு என்று சித்தர்கள் போற்றுகின்றனர்.

பார்க்க முடியாத அக்னியை, பார்க்கக் கூடிய உணவால் தீர்த்து, தீர்க்க முடியாத கர்ம வினைகளைக் களையலாம் என்பது சித்தர்கள் கலியுக மக்களுக்கு அளிக்கும் நல்லுரை, 

அதாவது, கண்களுக்குத் தெரியாத பசி என்னும் கொடிய தீயை, நிறைய உணவை வாரி வழங்கி அன்னதானத் தரையால் அணைப்பதால் இனந் தெரியாத கர்மங்களும் களையப் பெறும் என்பது பெரியோர்கள் காட்டும் அறப் பாதை.

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...