Sunday, July 16, 2023

உலக நன்மைக்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்ட குறுமுனியே அகஸ்தியர்.(

_தமிழுக்கு இலக்கணம்வகுத்த அகத்தியர்_


உலக நன்மைக்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்ட  குறுமுனியே  அகஸ்தியர்.( சிவபெருமானின் அகத்தில் (உள்ளிருந்து) இருந்து உருவானவரே அகஸ்தியர் . 
அகத்து +ஈசர்  =  அகஸ்தீசர்  என்றாகி அகஸ்தியர் ஆனார்.  (தமிழில் அகத்தியர்  என்பர்)
         
தாரகன் முதலிய அரக்கர்கள்,   தேவர்களை வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர்.  தேவேந்திரனின்  வேண்டுகோளுக்கிணங்க  அகத்தியர்    சமுத்திர நீர் முழுவதையும்    குடித்து விட,  அசுரர்களை அழித்தான்  இந்திரன். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
    அகத்தியர்   நீரின் மேல் படுத்தபடியே   பன்னிரெண்டு  ஆண்டுகள்    கடுந்தவமியற்றி   அரிய சக்திகளைப்   பெற்றார்.  சிவபெருமான்,  பார்வதி திருமணத்தின் போது அனைவரும்  கைலாயத்தில்  கூடியதால்   வடதிசை தாழ்ந்து, தென்திசை   உயர்ந்தது. அதனால் அகத்தியரைத்   தென்திசைக்குச்  செல்லுமாறு சிவபெருமான்   கட்டளையிட,  அத்தியர்,  தென்திசைக்கு  வந்து உலகைச்   சமன்படுத்தினார்.
         அகத்தியரின்   வல்லமைக்கு  எல்லையே  இல்லை.  தென்னகத்தில்  மிக உயரமாக  வளர்ந்து அனைவருக்கும்  இடைஞ்சலாக இருந்த   விந்தியமலையின் ஆணவத்தை அடக்கினார் அகத்தியர்.   தன்னைப் பணிந்து நின்ற  விந்தியமலைய,    மீண்டும் வடதிசைக்கு   வரும் வரையில் பணிந்து இருப்பாயாக!  என்று கூறிச் சென்ற அகத்தியர் ,  மீண்டும் வடதிசைக்குச்   செல்லாததால் விந்திய மலையும்   உயராமல்   நின்றது.
      இராவண   வதத்திற்கு முன்னர்,  இராமர்,  போரில் வெற்றி பெற  #ஆதித்யஹிருதயம் (சூரியன்  துதி) என்ற   மந்திரத்தைப் போதித்தார் அகத்தியர்.     தென் திசைக்கு   வந்த அகத்தியர், #பொதிகை_மலையில் தங்கி,   முருகக் கடவுளின் ஆணைப்படி  தமிழுக்கு இலக்கணத்தை   வகுத்தார்.  “அகத்தியம்” என்னும் அந்நூலே  தமிழின் முதல் இலக்கண நூலாகும். இவரது மாணவரே #தொல்காப்பியர். 
கால வெள்ளத்தில்   "அகத்தியம்" கிடைக்காமல் போய்விட, 
 தொல்காப்பியமே    முழுமையாகக் கிடைத்தது.
         அகத்தியர்   ஒருமுறை   இந்திரனின்  சபைக்குச்    சென்றபோது,  ஊர்வசியை நடனமாட சொன்னான்   இந்திரன். இந்திரனின்  மகன்   ஜயந்தனிடம்   கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள் ஊர்வசி. அதனால்   அகத்தியர் ஜயந்தனையும்,   ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படிச்  சபித்தார்.  
வாதாபி,  இவ்வல்லவன் என்னும்  இரு அரக்கர்கள்,   நினைத்த உருவை எடுக்கும் வரத்தைப் பெற்றிருந்தனர்.  அதில் வாதாபியை  வெட்டி சமைத்தாலும்,  மீண்டும்  உயிரோடு  வரும் வரத்தை அவன்  பெற்றிருந்தான். 
            இவ்வல்லவன்,  வேதியரின் உருக்கொண்டு  முனிவர்களை ஏமாற்றி  விருந்திற்கு அழைப்பான்.  வாதாபி ஆடாக   மாறிவிட, வாதாபியைக்   கறி சமைத்து படைப்பான்   இவ்வல்லவன்.  முனிவர்கள்    உண்டதும்  வாதாபியைத்    திரும்ப அழைக்க; அவன்,  அவர்களின்   வயிற்றைக் கிழித்துக்கொண்டு   வெளியே வருவான். இவ்வாறு  எண்ணற்ற முனாவர்களைச் சகோதர்கள் இருவரும் கொன்று  குவித்தனர்.
        இதனை அறிந்த  அகத்தியர், விருந்து   உண்ண,  இவ்வல்லவனின் அழைப்பின்படி  சென்றார். வழக்கம் போல வாதாபியைக் கறிசமைத்து படைத்துவிட்டு  அழைத்தான் இவ்வல்லவன்.  அகத்தியர் “வாதாபே ஜீர்ணோபவ” என்று வயிற்றைத் தடவிவிட,   வாதாபி  வயிற்றிலேயே  அழிந்துப் போனான். இவ்வல்லவன் கோபம்கொண்டு அகத்தியரைத்  தாக்க முற்பட, அவனை எரித்தழித்தார் அகத்தியர்.
           சுவேதன்   என்ற   மன்னன் சொர்க்கம்   சென்ற பின்பும்,  தன் வாழ்நாளில்   அன்னதானம் செய்யாதக்    காரணத்தால், ஆண்டுக்கு   ஒருமுறை   பிணத்தைத் தின்னுமாறு சாபம் பெற்றிருந்தான். அவனது   சாபத்தைப் போக்கியருளினார்  அகத்தியர்.
இவரது  மனைவி   #லோபாமுத்ராவை நீராக்கிக்    கமண்டலத்தில் அடைத்துக் கொண்டு  தென்திசைக்கு வந்தார் அகத்தியர். 
      விநாயகர்  காகமாக  வடிவெடுத்து  கமண்டலத்தைத்  தட்டிவிட, அதுவே  #காவிரி_நதியானது. காகத்தால் விரிந்த நதி எனக் காவிரி என்றும், #பொன்னி_நதி எனவும் அந்நதி பெயர் பெற்றது.
இலங்கை மன்னான   இராட்சதன்  இராவணனை,  இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரையில்' ஆசிரமம் அமைத்து, தமிழைப் போதித்தார் அகத்தியர். அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு ,  அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டுள்ளது. அதனை #அகத்தீஸ்வரமுடையார்_ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
           அகத்திய மாமுனி   சித்த வைத்தியத்திற்குச்   செய்த  பணி அளவிடற்கரியது.   அகத்தியர் பெயரில்   வெளியாகியுள்ள "சமரச நிலை ஞானம்"  என்னும் நூலில்   உடம்பில் உள்ள முக்கியமான   நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம்   காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருகிறது..
       அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு   ஏற்படும் தோஷங்கள்   பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம்  30. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூல்
___    முதலியன  அகத்தியரால்  ஆக்கப்பட்டனவாகும்.  
           அகத்தியர்  குமரிப் பகுதிக்கும் வந்துள்ளதாகக்  கூறுகின்றனர். *குமரி மாவட்டத்திலும் இவர் பெயரில் #அகஸ்தீஸ்வரர்_கோயில் என உள்ளது.
அருகே அகஸ்தியர்  சுனையும் உள்ளது. இதையடுத்த  ஊர் , இவர் பெயரால் #அகஸ்தீஸ்வரம்  என்றே இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது. இது கன்னியாகுமரிக்குச் சமீபத்திய ஊராகும்.      சிவபெருமானால் உருவாக்கப்பட்ட     அகத்தியரின் பெருமையை    முழுவதுமாகச்  சொல்வதென்பது யாருக்கும்    சிரமமான செயலாகும்.

  ஓம்நமசிவாய....

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...