Monday, July 17, 2023

கேட்ட வரம் தரும் மரகத லிங்கம்!

கேட்ட வரம் தரும் மரகத லிங்கம்! 
நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷன் சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந்த மரகத லிங்கத்தை நாம் வணங்கி வர நம் மனக்குறைகள் நீங்கி நாம் நினைத்த வரத்தைப் பெறலாம்.

மரக லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, பெரிய பதவி, அரசருக்கு அடுத்த பதவியைத் தரக்கூடிய யோகத்தைப் பெறலாம். 

அதோடு நம்முடைய தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த உயரத்தை அடையலாம். 

அத்துடன் நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறலாம். மேலும் இந்த மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை.

மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். 

இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கின்றது. 

இந்த மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வாழிபாடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன.

பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன. 

விலை உயர்ந்த ரத்தினங்களில் மரகதம் ஒன்று. அப்படிப்பட்ட மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் உள்ள சில கோயில்கள் உள்ளன.

7 மரகத லிங்கம் அமைந்துள்ள திருக்கோயில்கள் :..

சோழ சக்கரவர்த்தி முசுகுந்தா (12 ஆம் நூற்றாண்டு) கடும் தவம் செய்து ஏழு மரகத சிவலிங்கங்களை, தேவர்களின் அரசன் இந்திரனிடமிருந்து பெற்றான். 

அந்த விலைமதிக்க முடியாத மரகதலிங்கங்களை வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் மக்கள் வழிபாட்டிற்காக சிவ ஆலயங்களில் (சப்த விடங்க தலங்கள்) அமைத்து திருக்கோயில் எழுப்பினார்.

மரகத லிங்க அபிஷேக பலன்கள்:...

மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதனை அருந்தினால் மிகச்சிறந்த மருத்துவ சக்தியாக இருக்கும். 

அதே போல மரகத லிங்கத்தின் மேல் சாற்றப்படும் சந்தனத்தைப் பூசிக்கொள்வதால் நல்ல மருத்துவ பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.

சிவாய நம...

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...