நைவேத்தியங்கள் எவை?
சுத்தான்னம், சிக்திரான்ன வகைகள், நெய், காய்ச்சிய பால், தயிர், முப்பழம், தேங்காய்க்கீறு, சர்க்கரை, கறியமுதுகள், அபூப வகைகள், பானகம், பானயம், வெற்றிலைபாக்கு, முகவாசம் என்பவைகளாம். (அபூபம்-பணிகாரம்)
சித்திரான்ன வகைகள் எவை? பருப்புப்பொங்கல், சர்க்கரைப்பொங்கல், மிளகோதனம், புளியோதனம், தத்தியோதனம், கடுகோதனம், எள்ளோதனம், உளூந்தோதனம், பாயசம் என்பவைகளாம்.
பணிகார வகைகள் எவை?
மோதகம், பிட்டு, அப்பம், வடை, தேன்குழல், அதிரசம், தோசை, இட்டலி என்பவைகளாம்.
பானீயம் என்பது என்ன?
ஏலம், சந்தனம், பச்சைக்கர்ப்பூரம், பாதிரிப்பூ, செங்கழுநீர்ப்பு என்பவைகள் இடப்பெற்ற ஜலம்.
முகவாசம் என்பது என்ன?
ஏலம், இலவங்கம், பச்சைக்கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பவற்றின் பொடியைப் பனிநீரோடு கூட்டி ச்செய்த குளிகை.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் இயற்றிய சைவவினாவிடை என்னும் நூலில் இருந்து...
No comments:
Post a Comment