Tuesday, December 12, 2023

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலேஸ்வரர் கோயில், சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து, காவேரி நதியைக் கடந்து செல்கையில், அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர், ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது, ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

தேவாரம் பாடல் பெற்ற
திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):
திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை
அமைவிடம்
ஊர்:
திருஈங்கோய்மலை
மாவட்டம்:
திருச்சிராப்பள்ளி
மாநிலம்:
தமிழ்நாடு
நாடு:
இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:
மரகதாசலேஸ்வரர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர், மரகத நாதர்
தாயார்:
மரகதாம்பிகை, லலிதா
தல விருட்சம்:
புளியமரம்
தீர்த்தம்:
அமிர்த தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்

திருஈங்கோய்மலை

மலையில் ஏறல்

மலையிலிருந்து இறங்கல்
இந்த மலையை மரகதமலை என்பர். காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும், ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது, சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.

நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர், இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்.

ஓம் நமசிவாய

 படித்து பகிர்ந்தது இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

மஹா சிவராத்திரியும் வில்வ இலை அர்ச்சனையும்..

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் வில்வ இலை அர்ச்சனை பற்றிய பகிர்வுகள் : உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ...