மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள யானை மலையில் யாராலும் அறியப்படாத ஒரு அதிசியம் !
யானைமலை இந்தியாவின்
தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும்.
மதுரைக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த யானை மலை அமைந்துள்ளது
மதுரை புதூரில் இருந்து அழகர் கோவில் செல்லும் சாலையில்.. கடச்சனேந்தல் TO நரசிங்கம்.(கம்மாக்கரையில்) ஒத்தக்கடை செல்லும் ரோடு வழியாக இங்கு செல்லலாம்.
இந்த யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம்,400 மீட்டர் உயரம் கொண்டது.
இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என பெயர் பெற்றுள்ளது.
இந்த யானை மலையை
நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.
இணையத்தில் இந்த யானை மலையை பற்றி விபரம் தேடியதில் ஆஸ்திரேலியாவில் உள்ள உலகப் பிரச்சித்தி வாய்ந்த ஆயிர்ஸ் மலைக்கு அடுத்தபடியாக யானை மலைதான் ஒரே பாறையில் (monolithic rock) அமைந்த இரண்டாவது பெரிய மலை என்று தெரிய வந்தது,
ஒத்தகடையில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த யானை மலை படம் இருப்பதும், ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கு ஆயிர்ஸ் மலை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதே போல இவர்களுக்கும் இந்த யானை மலை புனிதம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது.
தயவு செய்து
நாம் அடிக்கடி பார்த்த யானை மலைதானே என்று நினைத்து இந்த யானை மலையை முழுவதையும் பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.
இந்த யானை மலையில் இதுவரை யாராலும் அறியப்படாத ஒரு அதிசியம் இருக்கிறது.
அது இந்த யானை மலையில் இயற்கையாகவே அமைந்த சிவலிங்கம் மற்றும் நந்தி உருவங்கள் ஆகும் (புகைப்படங்கள் கீழே!)👇👇
இந்த புகைப்படங்கள் வரையபட்டதும் இல்லை. கிராபி்ஃக்ஸும் இல்லை.
உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் நீங்களே நேரில் சென்று பாருங்கள்.
இறையருளினை பெறுங்கள்.
மற்றவர்களிடமும் இதைப்பற்றி சொல்லுங்கள்!
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment