மணிகண்டன் ஐயப்பன் ஆன கதை
மணிகண்டனுக்கு குருவாக இருப்பது எந்த ஜென்மத்தில் தான் செய்த புண்ணி யமோ என்று எண்ணும் அளவிற்கு முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தன் பிறவி பலனை அடைந்ததாக எண்ணி ஆனந்தம் கொண்டார்.
கல்வி பயின்ற காலமும் முடிவுற்று, அரண் மனை அடையும் நேரமும் மணிகண்டனை நெருங்கியது. மணிகண்டன் தனது குரு வானவரை கண்டு குருதட்சணை அளித்து அவரிடம் ஆசிப்பெற்று தன் இல்லத்திற்கு செல்ல, தன்குருவை காண அவர் இல்லம் நோக்கி சென்றார்.
🌹குருவுக்கு குருவாதல் :
மணிகண்டனின் நோக்கத்தை அறிந்த குருவும், அவர் அளித்த தட்சணையையும் மனதார பெற்றுக்கொண்டு. ஆனால், முக த்தில் மகிழ்ச்சி இல்லாமல் வாங்கிக்கொ ண்டார்.
குருவின்முகத்தில் காணப்பட்ட நிலையை க் கண்ட மணிகண்டனும் தங்களுக்கு என் ன வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலா ம் என்று குருவிடம் பணிந்து நின்றார்.
சில நொடிகள் யோசித்த குருவும் மனதில் தைரியத்துடன் மணிகண்டனிடம் தன் மனதில் இருந்து வந்த பல நாள் கவலை களை அவரிடம் கூறினார்.
அதாவது தனக் கென்று இருக்கக்கூடிய மகனும் பேச இயலாமல் இருப்பதை மணி கண்டனிடம் கூறி... என் மகனுக்கு பேச்சு அளிக்க முடியுமா? என்று கேட்டார்.
குருநாதரின் விருப்பத்திற்கேற்ப அவ்வித மே ஆகட்டும் கவலைக்கொள்ள வேண் டாம் என்றுரைத்து குருநாதரின் மகனை அழைத்து தான் கொடுத்த தட்டில் இருந்த கனியை எடுத்து குருவின் மகனிடம் கொடுத்தார்.
பின்பு அவ்விடமே அக்கனியை உண்ண சொன்னார். மணிகண்டனின் கூற்றுக் கிணங்கி அப்பாலகனும் அக்கனியை உண்டார்.
பாலகன் கனியை உண்டு முடித்ததும், மணிகண்டன் பாலகனை கண்டு என் மீது நம்பிக்கை கொண்டு என்னை கவனத்து டன் பார். இப்பொழுது நான் உன்னிடம் என்ன உரைக்கின்றேனோ அதை மீண்டும் என்னிடம் உரைக்க வேண்டும் என்று, அவ னை தன் அருகில் அழைத்து கொண்டு, பஞ்சாட்சர மந்திரமான 'நமசிவாய" என்று ம் அஷ்டாக்ஷர மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய" என்னும் மந்திரத்தை கூறி இப்பொழுது என்னிடம் உரை என்று கூறினார்.
பாலகன் சொல்ல முயலுகையில் அவன் கண்டப்பகுதியில் தன் கரங்களால் மென் மையாக அழுத்தியதில் நிகழ்ந்தது ஒரு அற்புதம்.
அதாவது, மணிகண்டன் கூறிய பஞ்சாட்ச ர மற்றும் அஷ்டாட்சர மந்திரத்தை கூற, அவனும் அம்மந்திரங்களை மெதுவாக அனைவரும் கேட்கும் வண்ணம் உரைக்க தொடங்கினார். அதை கண்டதும் குருவா ன முனிவர் மிகவும் மகிழ்ந்து எல்லையற் ற ஆனந்தம் கொண்டார்.
இவை யாவற்றையும் கண்டு கொண்டிரு ந்த பாலகனின் தாயானவள் அவ்விடம் வந்து தன் மகனின் பேச்சுக்களைக் கேட்டு பிரபஞ்சத்தில் என்னைவிட எவராலும் இவ்வளவு ஆனந்தம் கொள்ள முடியாது என்ற நிலையில் கண்களில் நீர்வழிய மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கொண் டு தனது மகனுக்கு பேசும் சக்தி அளித்த மணிகண்டனை அணைத்த வண்ணம் பிறவிப் பெருங்கடலை அடைந்தார்கள்.
🌹யாரென்று உணர்தல் :
ஆனந்த நிலையில் இருந்து இவ்வுலகிற் கு வந்த முனிவரும் மணிகண்டனிடம் யார ப்பா நீ?. உன்னை நான் காணும் போதே கண்டு கொண்டேன். நீ சாதாரணமானவ ன் அல்ல என்பதை யார்நீ? என்று கேட்டார்.
🌹ரகசியம் வெளிப்படுதல் :
தனக்கு பல கலைகளைப் பயின்று கொடு த்து தன்னை ஒரு வீரனாகவும், ஒரு கல்வி யில் சிறந்தவனாகவும் உருவாக்கிய குரு விடம் தனக்குத் தெரிந்த ரகசியங்களை மறைப்பது என்பது பாவச் செயலாகும் என்பதை உணர்ந்த மணிகண்டன் தனக்கு த் தெரிந்த ரகசியங்களை தனது குருவிடம் வெளிப்படுத்தினார்.
குருவே நான் தங்களிடம் உரைக்கும் செய் திகள் யாவற்றையும் தங்களுடனேயே ரகசியமாக வைத்துக்கொள்ளுதல் வேண் டும் என்றும், இதை எவரிடமும் பகிர்தல் கூடாது என்றும் வேண்டி தனது பிறப்பின் ரகசியங்கள் யாவற்றையும் தனக்கு தெரி ந்த அளவில் தனது குருவிடம் எடுத்துரைக் கத் தொடங்கினார்.
அதாவதுதான் ஒருஅசுரனை வதம் செய்வ தற்காக மட்டுமே இப்பிறப்பு எடுத்துள்ளதா க கூறினார். இச்செய்தியை இந்திரதேவ ன் தன்னிடம் உரைத்ததாகவும் இதை எவரிடமும் பகிர்தல் கூடாது என்பதையும் எடுத்துரைத்தார். காலம் வரும் போது எனது அவதார நோக்கம் ஈடேறும் என்றும் கூறினார்.
🌹ஜோதி ரூபம் :
தனது பிறப்பின் ரகசியங்களை எடுத்து ரைத்து குருவிடம் ஆசிப்பெற்று அவ்விடம் விட்டு பிறந்த இடமான அரண்மனையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார் மணிகண்டன்.
மணிகண்டன் செல்வதை பார்த்த குருவா னவர் தன் ஆசிரமத்தை விட்டு ஒரு ஜோதி ரூபமாக செல்வதாக தனது அககண்களில் கண்டு யான் என்ன பாக்கியம் செய்தேன்? என்று தனது மனம் பூரிப்படையும் வகையி ல் மிகவும் ஆனந்த நிலையில் மகிழ்ச்சி கொண்டார்.
🌹மணிகண்டனின் வருகை :
குருகுலத்தில் தனது கல்வியை முடித்து ராஜ்ஜியத்திற்கு மணிகண்டனின் வரு கை தரும் செய்தியை அறிந்த மன்னரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு ராஜ்ஜியம் முழுவதும் அலங்காரங்களுடனும், பலவி தமான இசை முழக்கங்களுடனும் அவரை வரவேற்க காத்துக்கொண்டு இருந்தார்.
ராஜ்ஜியம் எங்கும்... அவர் வருகையை ஒட்டி அழகிய மலர் அலங்காரங்களுடன் அலங்கரிக்கப்பட்டு கொண்டிருந்தன. மணிகண்டன் வரும்பொழுது பெண்களு ம், பெரியவர்களும் வரவேற்று கொண்டிரு ந்தன.
படை வீரர்கள் சூழ மணிகண்டன் அரண் மனையின் நுழைவாயிலை அடைந்து அரண்மனைக்குள் நுழைய முற்படுகை யில், அரண்மனையில் இருந்த பெண்கள் அவரை மிகுந்த அன்போடும், பாசத்தோடு ம் வரவேற்றனர். வயதில் மூத்த பெண்கள் ஆரத்திஎடுத்து பொட்டிட்டு அவரை மிகுந்த அன்போடு வரவேற்றனர்.
மகாராஜாவும், மகாராணியும் மணிகண்ட னை மிகுந்த அன்போடு வரவேற்று அவரிடம் தனது சகோதரனையும் காட்டி மிகுந்த ஆனந்தம் கொண்டனர்.
சிறுவயதில் கண்ட மணிகண்டன் இப்பொ ழுது மிகுந்த அழகுடனும், தெளிவுடனும் விளங்குவதாக தன் தாய் கூற தந்தையோ தனது தாய்க்கு தன் குழந்தை எப்பொழு தும் அழகானவன் தான் என்று சொல்ல கலகலப்பான சூழலில் நிகழ்ச்சியானது அனைவருக்கும் ஆனந்தம் அளிக்கும் வகையில் நிறைவுற்றது. ஆனால், ஒருவரைத் தவிர.
🌹அமைச்சரின் சூழ்ச்சி :
அரண்மனையில் இருந்த அனைவரும் மணிகண்டனின் வருகையையும், அவரது கல்வி ஞானத்தையும் கண்டு மிகவும் அலாதி மகிழ்ச்சி கொண்டிருந்தனர்.
ஆனால், முதலமைச்சர் மணிகண்டனை காணும் போதெல்லாம் தனது பதவியான து பறிபோனதே என்ற எண்ணமே அவருக் கு மேலோங்கத் தொடங்கியது.
தான் அரி யணை ஏறா விட்டாலும், மணிக ண்டன் அரியணை ஏறக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். இந்த எண்ணமே அவரை மாபெரும் பாவச்செயலை செய்ய காரணமாக அமைந்தது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment