Friday, October 13, 2023

நந்தீஸ்வரர் திருக்கோயில் – ஆதம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வேந்தன்பட்டி

நந்தீஸ்வரர் திருக்கோயில் – ஆதம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வேந்தன்பட்டி
சென்னையில் ஆதம்பாக்கத்தில் (கருணேகர் தெருவுக்கு வெளியே) அமைந்துள்ளது. இது செயின்ட் தாமஸ் மவுண்ட் புறநகர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று கிழக்கிலும், மற்றொன்று தெற்கிலும் உள்ளன. பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் தெற்கு நுழைவாயிலுக்கு வெளியே ஒரு தொட்டி உள்ளது.
உள்ளூர் மக்களால் இக்கோயில், சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் பிரதான தெய்வம் ஸ்ரீ நந்தீஸ்வரர் மற்றும் தேவி ஸ்ரீ அவுதாய் நாயகி (சமஸ்கிருதத்தில் கோமதி).
இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, இக்கோயிலின் பிரதான தெய்வம் நந்தி. தனது பக்தரான பிருங்கி முனிவரின் முன் நிற்கும் வடிவத்தில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர்,  நாகதேவதாய், விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், பிரம்மா,துர்கா, சண்டிகேஸ்வரர் மற்றும் நவகிரகங்களுக்கு தனி வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. நந்தீஸ்வரர் (சிவலிங்கம்) சிலை கிழக்கு நோக்கியும், அவுதாயநாயகி தெய்வம் தெற்கேயும் உள்ளது. வில்வமரம் இக்கோயிலின் தலவிருட்சமாகும்.
பிரதோசம், சிவராத்திரி மற்றும் சோமவார (திங்கள்) நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இங்கே ஆருத்ர தரிசனம் மற்றொரு பிரபலமான மத நிகழ்வாகும். மற்ற சிறப்பு பூஜைகள் சுப்பிரமணியர் மற்றும் விநாயகருக்கு குறிப்பிடத்தக்க நாட்களில் நடைபெறும்.
இந்த கோயிலுக்கு ஏராளமான புராணங்களும் உள்ளன. உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் இந்த கோயிலை அதானி எனும் (எனவே ஆதம்பாக்கம் என்று பெயர்) சோழனால் கட்டப்பட்டதாக கூறுகின்றனர், ஆனால் இந்த கோவில் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. நந்தி (புனித காளை) வடிவத்தில், சிவன் பிரிங்கி மகரிஷி முன் தோன்றினார். (எனவே மற்ற கோவில்களில் போல் அல்லாமல், சிவபெருமானுக்கு பூஜை செய்த பின்னே நந்திக்கு பூஜை செய்யப்படுகிறது).எனவே சிவபெருமானின் பெயர் நந்தீஸ்வரர்.பிருங்கி முனிவர் தனது கலசத்தை சில இடங்களில் வைத்திருந்து பூஜை செய்தார், எனவே அருகிலுள்ள இடம் கிண்டி என்று அழைக்கப்படுகிறது 
நெய் நந்தீஸ்வரர் ஆலயம், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் :

தஞ்சாவூரில் மிகப்பெரிதாக நந்தி அமைந்து பக்தர்களை கவர்ந்தது போல, இங்குள்ள நெய் நந்தியும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
கோயிஒ அமைந்துள்ள வேப்பம்பட்டியில் ஒரு சிவ பக்தர் சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆனால் நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார்.
நந்தியின் புனிதம் கருதி அதை தீர்த்த குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருநாள் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது. அப்போது மானசீகமாக சிவனை வேண்டிக்கொண்டார். தொடர்ந்து அவரின் கனவில் மாடுகள் விரட்டுவது போல காட்சிகள் கண்டு திடுக்கிட்டார். உடனே நந்தியை பிரதிஷ்டை செய்வதாகவும், அதற்கு நெய் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே அந்த பக்தரின் உடல் பிணி தீர்ந்தது. அவர் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டது போல பலரும் நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
தல சிறப்பு :

இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை.
இதற்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாக அமைந்த அமைப்பாக உள்ளது. இந்த சக்கரம் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தான் நந்தி மீது அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈயும், எறும்பும் மொய்ப்பதில்லை.
இந்த பகுதியில் சுமார் 90 வருடங்களாக ஒரு வேப்ப மரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றியுள்ளார். இதன் காரணமாக இதற்கு வேப்பமரத்து நந்தி என பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.
நெய் கிணறு :

ஒரு முறை நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் எடுத்து தீபம் ஏற்றினர். ஆனால் சில நிமிடங்களில் அந்த நெய் ரத்தம் போல சிவப்பாக மாறியது. இதன் காரணத்தால் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய் வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை. அதனை கோயில் வளாகத்திற்குள் இருக்கும் கிணற்றில் கொட்டி விடுகின்றனர். இதன் காரனமாக அந்த கிணறு தற்போது நெய் நிறைந்த நிலையில் காட்சி தருகின்றது.
நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும் ஒரு ஈ, எறும்பு வராதது கலியுகத்தில் நாம் காணும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

திருவிழாக்கள் :

இந்த கோயிலில் மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை, சோம வாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட தினங்களில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ரிஷப ராசிக்கு உகந்த கோயில் :

பொதுவாக ரிஷப ராசியை குறிக்க காளை உருவம் பயன்படுத்தப்படுகிறது. நந்திக்கு ரிஷபம் என்ற பெயருண்டு. இதன் காரணமாக ரிஷப ராசியினர் அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ, கிரகப் பெயர்ச்சியால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ, அவர்கள் பரிகாரம் செய்ய சிறந்த தலமாக இந்த நெய் நந்தீஸ்வரர் கோயில் பரிந்துரைக்கப்படுகிறது.

கால் நடைப் பண்ணை வைத்துள்ளவர்கள், பால், தயிர், வெண்ணெய் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக இந்த கோயிலில் வந்து வழிபட்டு செல்கின்றனர். கால்நடைகளுக்கு ஏதேனும் உடல் நல பிரச்னை ஏற்பட்டாலும் அவைகள் குணமாக இங்குவந்து நந்திக்கு நெய் அபிஷேகம் செய்து, அந்த நெய் தீர்த்தமாகப் பெற்று சென்று அவற்றுக்கு புகட்டுகின்றனர்.

கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் திருக்கோயில் :

பல்லவர்  காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிவாலயம் பின்னர் சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.. இக்கோயிலில் உள்ள ஒரு கல்வட்டில்  சோழமன்னன் ராஜராஜன் வழங்கிய கொடைகள் பற்றிய செய்திகள் உள்ளன. இந்த பழமை வாய்ந்த ஆலயம் சென்னைக்கு அருகில் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் ஸ்ரீ நந்தீஸ்வரர்  அம்பாள் ஸ்ரீ சௌந்தர்யநாயகி. சுயம்பு மூர்த்தியான ஈசன் சதுர வடிவ பீடத்தில் காட்சி அளிக்கிறார் /சிவ கோஷ்டத்தில் அமைந்துள்ள தெய்வ வடிவங்கள் எல்லாம் எழில் கொஞ்சும் அழகுடன் பண்டைய சிற்ப கலையின் சிறப்பை  பறைசாற்றுகின்றன.

சித்தர்கள் பூஜித்ததாக கருதப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திரு ஞானகுரு ஸ்வாமிகள் எனும் ஒரு மஹான்  பூஜை செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அன்னாரது ஜீவசமாதி அருகியேயே அமைந்துள்ளது. ஆதியில் அமிர்தம்வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டு அதன் வீரியத்தை தாங்கமுடியாமல் தேவர்களும் அசுரர்களும் பயந்து ஓடுகின்றனர். சிவபெருமான் அவர்களுக்கு அபயமளித்து விஷத்தை சுவீகரித்து காத்தருள்கிறார். பிறகு வெளிவந்த அமிர்தத்தை  அடைந்த தேவர்கள் சிவபெருமானை துதித்து வழிபடுகின்றனர். இறைவனும் மகிழ்ந்து நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையில் ஆனந்த நடனமாடுகிறார். இவ்வாறு தேவர்கள் பூஜையை ஏற்று அருளாசி வழங்கி நந்தீஸ்வரர் என்ற நாமம் கொண்டு  விளங்கும் தலமே நந்திவரம்/

இங்குள்ள திருக்குளம் நந்தி தீர்த்தம் என்று, அழைக்கப்படுகிறது. தல விருட்சம் நாகலிங்கம். இரண்டு வேளை பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு சுரேஷ் சிவாச்சாரியார்-8940569644 திரு தர்மலிங்கம்-893 9651148

நந்தி தேவர் வரலாறு

நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான்.  அந்தப்புரத்தில் பார்வதி தேவி சிவனை தியானித்து கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்து கொண்டிருந்தார்.  சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான்.  அவளை கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான்.  பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததை கண்டவள், "ஏ நந்தீசா!  யாரை கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.  அவளிடம் வந்த நந்தி,""தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார்.  அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார்.  

இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர்.  அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்னம் பரிமாற சென்ற போது "குழந்தையில்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி, அங்கு தங்களால் உண்ண இயலாது என சொல்லி சென்று விட்டனர்.   இதனால் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர்.  இந்த வேளையில் தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார்.  நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோகத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகே வைத்தார்.  சிலாதர் கண்களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலுடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார்.  தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், ""இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்க கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார்.  அந்த நேரத்தில்,""சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன்.  அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே.   அவன் ஒரு சாபத்தால் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,'' என அசரீரி ஒலித்தது.  12 ஆண்டு தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத்துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார்.  தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அந்த குழந்தை சிவலோக பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது.  சிலர் அவனை கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர்.

அவன் பிரதோஷ வேளையில் (மாலை4.30-6.00) சிவ தியானத்தில் ஈடுபடுவான்.  அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியின் நடுவில் சிவதரிசனம் காட்டினான்.  இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடைத்ததாக மக்கள் எண்ணினர்.  பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர், 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார்.  தன் தவறுக்கு வருந்தி, முழங்காலிட்டு இன்றும் சிவன் பார்வதி முன்னால் பணிவுடன் அமர்ந்துள்ளார்.

பிரதோஷ நாளான இன்று, நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

நந்தீஸ்வரர் திருத்தலங்கள்

 சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும்.
 கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.
 சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்தியை அடுத்த படியாக ஒரு நந்தி காட்சி தரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணு நந்தி.
 திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்பது புராணம். கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிராகார நந்தி என்பர்.
 சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார்.
 இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லும். பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும்.
 அவை பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருட நந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்பனவாகும். இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.
 சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியானவர் சிலதிருத்தலங்களில் சிவபெருமானை நோக்காமல், கோவில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.
 அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.
 நந்தனார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவராததால் அவரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. நந்தனார் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். அதற்கு நந்தி இடையூறாக இருந்தது. நந்தனார் சிவபெருமானை வேண்டிட, இறைவனின் திருவருளால் நந்தனார் ஈசனைத் தரிசிப்பதற்கு ஏதுவாக நந்தி இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தார். திருப்புள்ளார் என்னும் இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம்.
 இதேபோல் பட்டீஸ்வரம் சிவாலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப்பெறாத இறைவன் தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பினார்.
 ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதேபோல் நந்தி விலகியிருக்கும் தலங்கள் திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.
 சற்று வித்தியாசமான கோலத்தில் புறமுதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நந்தியையும் சில தலங்களில் தரிசிக்கலாம். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் திருத்தலத்தில் இறைவன் வில்வநாதேஸ்வரர், இறைவி தனுமத்யாம்பாள் அருள் புரிகிறார்கள். இங்குள்ள நந்தி சுவாமியை நோக்கி இல்லாமல் நின்ற நிலையில் புறமுதுகு காட்டி காட்சிதருகிறார்.
 இதற்குக் காரணம், ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார்.
 நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், “இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும் தொந்தரவு கொடுக்காமலிருக்க கோவிலின் வாயிலை நோக்கிய வண்ணம் இறைவனுக்கு புறமுதுகுகாட்டிய நிலையில் உள்ளார்.
 கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தலம் சிவராத்திரித் தலமாகக் கருதப்படுகிறது. இத்தல இறைவன் வில்வவனேஸ்வரர்;
 அம்பாள் சர்வஜனரட்சகி. சிவபக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான். சிவாலயத்திற்குள் யமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும் தடுக்க, யமன் திரும்பிச் சென்று விட்டான். மீண்டும் யமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமான் இங்கு வாயிலை நோக்கி உள்ளார்.
 விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி சுடர் கொழுந்தீசர்; அம்பாள் கடந்தை நாயகி. ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்துபெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர்மக்கள் இறைவனை வேண்டவே, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார்.
 உடனே நந்தியெம்பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார்.அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்கு புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலைநோக்கி உள்ளார்.
 சென்னைக்கு அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில் திருத்தலத்தின் இறைவன் மாசிலா மணீஸ்வரர்; இறைவி கொடியிடை நாயகி. இத்தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம் பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்தி காட்சி தருகிறார்.
 காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் செய்யாறு அருகில் திருவோத்தூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்து இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில் இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமலிருக்கவும் வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி.
 ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி சிவராத்திரித் தலம் என்று போற்றப்படுகிறது. இங்கு அருள்புரியும் சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியெம்பெருமான் எதிரில் இல்லாமல் தலைப்பக்கம் உள்ளார்.
 கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நந்தியானவர் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனசுத்தி உள்ளவர்களாக மாற்றி, முகர்ந்து அனுப்புவதாக ஐதீகம்.
 குடந்தை நாகேஸ்வரம் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி கோவிலில் உள்ள நந்திக்கு வலது காது இருக்காது.காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடிவந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனது. எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார்.
 இதுபோல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.
 சிவராத்திரியின் போதும் பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர்.

No comments:

Post a Comment

Followers

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றிய பதிவுகள்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில், ...