*இன்றைய கோபுர தரிசனம்🙏🏻🙏🏻*
*அருள்மிகு நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்*
*மூலவர்:* நெல்லுக்கடை மாரியம்மன்
*ஊர்:* நாகப்பட்டினம்
*மாவட்டம்:* நாகப்பட்டினம்
*திருவிழா:* விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, மார்கழி திருவாதிரை, சித்திரை பெருவிழா, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி.
*தல சிறப்பு:* வருடத்திற்கு ஒரு முறை அம்மனுக்கு தைலக்காப்பு சாற்றப்படுவது சிறப்பு.
*பொது தகவல்:*
இங்கு நடராஜர், எல்லையம்மன், காத்தவராயர், பெரியாச்சி அம்மன், பூரணை புஷ்கலை சமேத அய்யனார், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், செல்வப்பிள்ளையார், கப்பல் பிள்ளையார், துர்க்கை என தனிச்சன்னதிகளில் அருள் புரிகின்றனர்.
*பிரார்த்தனை:*
நெல்லுக்கடை மாரியம்மனிடம் நெல்மணிகளையும் விதை நெல்லையும் வைத்துப் பிரார்த்திக்கின்றனர் விவசாயிகள் இதனால் விளைச்சல் செழிக்கும் லாபம் கொழிக்கும்.
*நேர்த்திக்கடன்:*
மாவிளக்கு ஏற்றுதல், வேப்பிலைக் காவடி, சிலை வாங்கி வைத்தல், இளநீர்க் காவடி எடுத்தல், செடல் சுற்றி வருதல், பால்குடம் எடுந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
No comments:
Post a Comment