Wednesday, October 11, 2023

சபரிமலை கோவில் நீங்கள் அறியாத வரலாறு

🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️

_*🪷ஸ்ரீ சுவாமி ஐயப்பன் பிறப்பு,*_
_*சபரிமலை கோவில் நீங்கள் அறியாத வரலாறு மற்றும் சன்னதிகளின் பெருமை;🪷*_
_*🪷அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடியவை;*_
_*உங்களுக்காக மிக ரத்ன சுருக்கம்...🪷*_

_*🪷சபரிமலை அகராதி :-🪷*_

_*1)  🪷 சொரிமுத்தைய்யன் கோவில் -  சாஸ்தாவின் முதல் அவதாரம் மூலாதார சக்ர கோவில்*_

_*2)  🪷 அச்சன்கோவில் - சாஸ்தாவின் ஸ்வாதிஷ்டான சக்ர கோவில்*_

_*3)   🪷 ஆரியங்காவு - சாஸ்தாவின் மணிபூரக சக்ர கோவில்*_

_*4) 🪷 குளத்துப்புழை - சாஸ்தாவின் அநாகத சக்ர கோவில்*_

_*5) 🪷 எருமேலி -  சாஸ்தாவின் விசுக்தி சக்ர கோவில்*_

_*6)🪷  சபரிமலை - சாஸ்தாவின் ஆக்ஞா சக்ர கோவில்*_

_*7) 🪷 காந்தமலை ( பொன்னம்பல மேடு ) -*_ _*சாஸ்தாவின் ஸஹஸ்ரார*_ _*( பிரம்மாந்திரம் )  சக்ர கோவில்*_

_*8)  🪷 இருமுடிக்கட்டு -  பாவ புண்ணியங்களை*_ _*இருமுடிக்கட்டாக எடுத்து செல்லும் புனிதமான*_ _*வழிபாடு முன் முடியில் ஐயப்பனின் நைவேத்ய*_ _*பொருட்களும்பின் முடியில்*_ _*வழித்தேவைக்கான பொருட்களும் இருக்கும்.*_

_*9) 🪷புத்தன் வீடு - எருமேலியில் உள்ளது மகிஷியை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாறிய இடம் மகிஷியை வதம் செய்த ஐயப்பனின் வாள் இன்றும் புத்தன் வீட்டில் தரிசிக்கலாம்*_

_*10) 🪷 பேட்டைத் துள்ளல் - முதன்முறை சபரி செல்லும் கன்னிச்சாமிகள் உடல் முழுவதும் பல வண்ணங்கள் பூசி (சாமி திந்தக்கதோம் தோம்! ஐயப்ப திந்தக்கதோம் தோம் என்று) பக்தியுடன் ஆடும் ஆட்டம்*_

_*11) 🪷 பேரூர் தோடு - இரும்பொன்னி கரையில் உள்ள சிவன் கோவில் இங்கு குளத்தில் வசிக்கும் மீன்களுக்கு பொரி செலுத்தி பிரார்த்திக்கும் இடம்*_

_*13)  🪷‌காளைகட்டி ஆசிரமம் - மகிஷி வதத்தை சிவபெருமான் காளையை இந்த இடத்தில் கட்டி பார்த்த இடம்*_

_*14)  🪷 இஞ்சிப்பாறைக் கோட்டை -  பெருவழியில் உள்ள ஒரு பாறையின் பெயர்*_

_*15) 🪷 இடைத்தாவளம் -  இளைப்பாறும் இடம்*_

_*16) 🪷 அழுதா நதி -  பம்பை நதியின் கிளை நதி*_

_*17)  🪷 கல்லிடங்குன்று - கன்னிசாமிகள் அழுதாநதியில் மூழ்கி கல் எடுத்து கல்லிடங்குன்றில் சேர்க்கும் பிரார்த்தனை செய்யும் இடம்*_

_*18)  🪷 கரிவலந்தோடு - பெருவழியில் உள்ள இடம்*_

_*19) 🪷 கரிமலை - பெருவழியில் உள்ள உயர்ந்த மலை*_

_*20)  🪷 உடும்பாறைக் கோட்டை -  கரிமலை தொடக்கத்தில் உள்ள கோட்டை*_

_*23) 🪷 பெரியானை வட்டம் - ஒரு காலத்தில்  யானைகள் தங்குமிடம்*_

_*24) 🪷  சிறியானை வட்டம் - ஒரு காலத்தில்  யானைகள் தங்குமிடம்*_

_*25) 🪷  பம்பா நதி -  சபரிமலை அடிவாரத்தில் ஓடும் புண்ணிய நதி ஸ்வாமி ஐயப்பன் அவதரித்த திருத்தலம்*_

_*26) 🪷  பம்பா சத்யா - பம்பைக்கரையில் நடத்தப்படும் அன்னதானம்*_

_*27) 🪷  அம்பலப்புழா - எருமேலி பேட்டை துள்ளலில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய குழு*_

_*28) 🪷 பந்தளம் -  ஐயப்பன் வளர்ந்த ஊர்*_

_*29) 🪷  அம்பலப்புழா கோவில் - பந்தள அரண்மனைக்குள் உள்ள கோவில்*_

_*30) 🪷  ஆலங்காட்டு சங்கம் -  எருமேலியில் பேட்டை துள்ளி மலையேறும் சங்கம் இச்சங்கம் ஆனது ஆலங்காட்டு யோகம் என்றும் அழைக்கப்படுகிறது*_

_*31) 🪷  இரும்பூன்னிக்கர -  பெருவழியில் உள்ள ஊர்*_

_*32) 🪷 உதயணன் - உடும்பாறைக் கோட்டையில் வாழ்ந்து வந்த ஒரு கொள்ளைக்காரன்*_

_*33) 🪷  இலவந்தோடு - உடும்பாறைக் கோட்டைக்கு அடுத்த இடம்*_

_*34) 🪷  எலவந்தாவளம் - புதுச்சேரி ஆற்றின் ஓரம் அமைந்த இடம்*_

_*35) 🪷 ஐயப்பன் குரு கோவில் - ஐயப்பன் குருகுலவாசம் செய்த இடம் பந்தளத்தில் இருந்து 4கிமீ தூரத்தில் உள்ளது*_

_*36) 🪷  கன்னிச்சாமி - முதல்முறை சபரியாத்திரை செல்லும் பக்தர்*_

_*37) 🪷 குருசாமி - சபரியாத்திரைக்கு வழிநடத்தி செல்பவர்*_

_*38) 🪷 குருநாதன் முகடு -  ஐயப்பனுக்கு ஆயுதபயிற்சி அளித்த குரு சமாதியடைந்த மலை*_

_*39) 🪷  சீரப்பஞ்சிரா மூக்கன் - ஐயப்பனுக்கு ஆயுதப்பயிற்சியும் மல்யுத்தமும் அளித்தவர்*_

_*40) 🪷  புலிக்குன்னு  -   தாயின் தலைவலிக்கு புலிப்பால் கொண்டு வரும் வழியில் ஐயப்பன் புலிகளோடு தங்கிய மலை*_

_*41) 🪷  பூரணை புஷ்களை -  சாஸ்தாவின் இரு தேவியர்*_

_*42) 🪷  பூதநாத கீதை -  ஐயப்பன் பந்தள மன்னனுக்கு உபதேசித்த ஆன்மீக தத்துவங்கள்*_

_*43)  🪷 நீலிமலை -  பம்பையை தாண்டியவுடன் ஏறும் முதல் மலை*_

_*44)  🪷 முக்கால் வட்டம் - சீரப்பஞ்சிராவிற்கு அருகில் உள்ள கோவில்*_

_*45)  🪷 முக்குழி -  பகவதி கோவில் உள்ள இடம்*_

_*46) 🪷  வாபூரன் -  சாஸ்தாவின் சிவகண தலைவன்*_

_*47) 🪷  வலியம்பலம் -  பெரிய கோவில்*_

_*48) 🪷  வலியக்கோவில் கல் -  பந்தளராஜா தான் வணங்குவதற்காக பந்தள அரண்மனைக்கு அடுத்து கட்டிய கோவில்*_

_*49) 🪷 ராஜசேகர பாண்டியன் -  பந்தள ராஜா ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை*_

_*50) 🪷 அப்பாச்சி மேடு - நீலிமலைக்கு அடுத்த மலை*_

_*51) 🪷  அம்பலப்புழா வேலகழி -  தாள லயத்துடன் கற்றுத்தரப்படும் ஆயுத பயிற்சி*_

_*52) 🪷  ஆறாட்டு - ஐயப்பன் பம்பை நதியில் நீராடி செல்லும் விழா*_

_*53)  🪷 சபரி பீடம் - பெண் துறவியான அன்னை சபரி வாழ்ந்த இடம்*_

_*54)  🪷 சரங்குத்தி ஆல் - எருமேலியில் இருந்து எடுத்து வந்த அம்பு சரங்களை சமர்ப்பிக்கும் இடம்*_

_*55) 🪷  காணிப்பொன் - ஐயப்பனுக்கு செலுத்தும் குருதட்சணை*_

_*56) 🪷  உஷபூஜை - காலை நேர பூஜை*_

_*57)  🪷 ஐயப்பன் விளக்கு - முதன்முறை சபரியாத்திரை செல்லும் கன்னிசாமிகள் பம்பையில் நடத்தும் வழிபாடு*_

_*58) 🪷  களபாபிஷேகம் - தைமாதம் 5ம்தேதி பந்தள மன்னர் முன்னிலையில் சாஸ்தாவுக்கு செய்யப்படும் சந்தனாபிஷேகம்*_

_*59) 🪷  திருவாபரண பெட்டகம் - சங்கராந்தி தினத்தன்று ஐயப்பனுக்கு சாற்றப்படும் நகைகள் உள்ள பெட்டகம்*_

_*60) 🪷 ஐயப்பன் மந்திரம் - ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பதவி ஏற்கும் மேல்சாந்திக்கு தந்திரி சொல்லிக் கொடுக்கும் மந்திரம்*_

_*61) 🪷 கல்பாத்தி கோவில் - ஐயப்பனுக்கு தேரோட்டம் நடைபெறும் முக்கியமான கோவில்*_

_*62) 🪷  குருதிபூஜை - மாளிகைபுறத்தில் நடத்தப்படும் பூஜை*_

_*63) 🪷 கொச்சுக் கடுத்தன் - ஐயப்பனின் போர்வீரன்*_

_*64) 🪷  கொச்சம்பலம் - சிறிய கோவில்*_

_*65) 🪷 கோப்தா - சாஸ்தாவின் பரிவார தேவதை*_

_*66) 🪷  பூங்காவனம் - சபரிமலை கோவிலையும் அதை சுற்றியுள்ள இடத்தையும் அழைக்கும் சொல்*_

_*67) 🪷  கோட்டைப்படி - தர்மசாஸ்தாவின் பூங்காவன நுழைவாயில்*_

_*68) 🪷  நந்தவனம் - சபரிமலை ஐயப்பனின் பூங்காவனம்*_

_*69) 🪷  கொச்சுவேலன் - ஐயப்பனுடன் வனப்பயணத்தில் உடன் சென்றவர்*_

_*70) 🪷  சரப்ப்பாட்டு - பக்தர்களின் சர்ப்பதோஷம் நீங்க மாளிகைபுறத்தம்மன் சன்னதியில் பாடும் பாட்டு*_

_*71) 🪷  சகஸ்ர கலசாபிஷேகம் -  1008 கலசங்கள் வைத்து பூஜித்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் வழிபாடு*_

_*72)  🪷 சரணம் அய்யப்பா -  ஐயப்பனை வழிபடும் மந்திரம்*_

_*73) 🪷 ஸ்வாமி சரணம் -  எதிர்ப்படும் அய்யப்பமார்களை ஐயப்பனாக கருதி வழிபடும் சரணம்*_

_*74) 🪷  சாஸ்தா பாட்டு - ஐயப்பனின் அருட்சரித்ரம் மலையாளத்தில் ஏழு பாகங்களாக உள்ளது*_

_*75) 🪷  சிரம்பிக்கல் மாளிகை - பந்தளத்தில் ஐயப்பனின் திருவாபரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அரண்மனை*_

_*76) 🪷  ஐயப்பனின் சின்முத்திரை - ஐயப்பனின் வலதுகரம் காட்டுவது இரண்டு மற்றும் விரல்களை ( ஆட்காட்டி விரலை பெருவிரலோடு ) மடக்கி மூன்று விரல்களை ( சுண்டுவிரல் ; மோதிரவிரல் ; நடுவிரல் ) நிமிர்த்தி காட்டும் முத்திரை ( ஆணவம் ; கண்மம் ; மாயை அகற்றி ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது )*_

_*77) 🪷  சீனித்தாவளம் -  பெருவழியில் இரண்டு பெரிய சீனிமரங்கள் உள்ள இடம்*_

_*78)  🪷 சீவேலி -  சன்னதியை சுற்றி வரும் ஸ்வாமியின் ஊர்வலம்*_

_*79) 🪷  சுக்குப்பாலம் - பெருவழியில் உள்ள ஒரு பாலத்தின் பெயர்*_

_*80) தலப்பாற மலா - பெருவழியில் உள்ள கோவில் இதற்கு அரசு முடிக்கோட்டை என்ற பெயரும் உண்டு*_

_*81)  🪷 தாழமண் குடும்பம் - ஐயப்பனுக்கு செய்யும் பூஜைகளுக்கு தலைமை பொறுப்பேற்கும் நபர்*_

_*82) 🪷  திரிவேணி சங்கமம் - பம்பையில் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்*_

_*83) 🪷  திருவெள்ளக்காவு ; சாமரவட்டம் ; நெட்டிசேரி - கேரளாவில் சாஸ்தா கோவில் உள்ள இடங்கள்*_

_*84) 🪷  பறைக்கொட்டி பாட்டு - பக்தர்களின் தோஷம் விலக மாளிகைபுறத்தம்மன் சன்னதியில் செய்யப்படும் வழிபாடு*_

_*85) 🪷  பாண்டித்தாவளம் - மாளிகைபுறம் சன்னதி அருகே மதுரை நாட்டில் இருந்து வரும் பக்தர்கள் தங்கும் இடம்*_

_*86) 🪷  பஸ்மக்குளம் - சபரிமலை அடிவாரத்தில் இருக்கும் புண்ய தீர்த்த குளம்*_

_*87)  🪷 உரல்குழி தீர்த்தம் - சன்னிதானத்தில் இருந்து 1கி.மீ தொலைவில் கும்பளம்தோட்டில் உள்ள அருவி*_

_*88)  🪷 நடை -  சன்னிதானம்*_

_*89) 🪷 பிரதிஷ்டை தினம் - வைகாசி மாதத்தில் ஹஸ்த நட்சத்திரத்தில் சபரிமலை ஐயப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம் அன்று ஒருநாள் மட்டும் நடை திறக்கப்பட்டு தரிசனம் கிடைக்கும்*_

_*90) 🪷  பெரிய கருப்பர் -  ஐயப்பனின் பாதுகாவலர்*_

_*91) 🪷 பெருநாடு ஐயப்பன் கோவில் - பத்தனந்திட்டாவில் இருந்து சபரிமலை செல்லும் வழியில் மடத்துக்குழி என்ற இடத்தில் இருந்து 2கி.மீ தொலைவில் உள்ள ஐயப்பன் கோவில் இங்கு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்யலாம் ஐயப்பனுக்கு திருவாபரணம் இங்கும் அணிவிக்கப்படுகிறது*_

_*92) 🪷  பொன்னம்பல மேடு - தை சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தரும் மகரஜோதி தெரியும் மலை*_

_*93) 🪷 நாயாட்டு விளி - பதினெட்டாம்படியின் கீழ் நடத்தப்படும் சாஸ்தாவின் கதையை பாடும் ஒரு சடங்கு*_

_*94) 🪷 மகரஜோதி - ஐயப்ப தரிசனத்தின் சிகர நிகழ்ச்சி பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி*_

_*95)  🪷 மகர நட்சத்திரம் -  மகர ஜோதிக்கு சில நிமிடத்திற்கு முன்பு வானில் தெரியும் நட்சத்திரம்*_

_*96) 🪷 கிருஷ்ண பருந்து - ஐயப்பனின் ஆபரணபெட்டியோடு சேர்ந்து வானில் வட்டமிட்டு பறந்து வரும் கருடன்*_

_*97) 🪷  மகர சங்கரம பூஜை - தைமாதம் முதல் தேதி சூரியபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் நடத்தப்படும் பூஜை*_

_*98) 🪷  மகாகாளன் ; பீமரூபன் -  சாஸ்தாவின் முக்கிய பரிவாரங்கள்*_

_*99)  🪷 மேல்சாந்தி - முக்கிய அர்ச்சகர் புறப்படா சாந்தி என்ற பெயரும் இவருக்கு உண்டு பதவி ஏற்றதில் இருந்து வீட்டிற்கு செல்லாமல் சபரிமலையில் இருப்பதால் இவருக்கு இந்த பெயர்*_

_*100) 🪷  மண்டல காலம் - கார்த்திகை முதல்தேதி முதல் மார்கழி 11ம்தேதி வரை உள்ள நாட்கள்*_

_*101) 🪷  மரக்கூட்டம் - சபரிபீடத்திற்கு அடுத்த இடம்*_

_*102) 🪷 விரி - தங்கும் இடம்*_

_*103) 🪷 சுப்ரபாதம் - ஐயப்பனின் திருப்பள்ளியெழுச்சி பாடல்*_

_*104) 🪷  ஹோமகுண்டம் ( அக்னிகுண்டம் ) - நெய்யபிஷேகம் செய்த பிறகு தேங்காய் மூடிகளை அர்ப்பணம் செய்யும் ஆழி*_

_*105) 🪷  நெய்யபிஷேகம் - ஐயப்பனுக்கு செய்யப்படும் முக்கிய அபிஷேகம்*_

_*106) 🪷  நெய்த்தேங்காய் - ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் அடைத்து செல்லும் காய்*_

_*107) 🪷  நெரபுத்திரி - அறுவடைத் திருநாள் பூஜை*_

_*108) 🪷 விஷூ -  மலையாள வருடப்பிறப்பு*_

_*109)  🪷 விஷூ கைநீட்டம் - ஆண்டுதோறும் நல்லது நடக்க ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜித்த காசுகளை அர்ச்சகர் கையால் பெறும் சடங்கு*_

_*110) 🪷  அஷ்டாபிஷேகம் - ஐயப்பனுக்கு செய்யும் எட்டு வகை அபிஷேகங்கள்*_

_*111)  🪷 படி பூஜை - சபரிமலையில் உள்ள சத்யமான பொன்னு பதினெட்டு படிகளுக்கு நடத்தப்படும் பூஜை*_

_*112) 🪷  ஸ்ரீபூதநாத சரிதம் -  ஸ்ரீ கூ.மு. முத்துஸ்வாமி சாஸ்திரிகள் எழுதிய ஐயப்பனை பற்றிய சமஸ்க்ருத நூல்*_

_*113) 🪷  ஹரிஹராத்மஜாஷ்டகம் - அர்த்தசாம பூஜைக்கு முன் நடைசாத்தும் முன் பாடப்படும் பாடல்*_

_*🪷தொடரும்.....🪷*_

*அனைத்து குருசாமி மார்கள்*
*திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன்...* 
*என்றென்றும் உங்கள் ஆசி வேண்டும்.*

*கலியுகவரதன் கண்கண்ட தெய்வம் ஸ்ரீதர்ம சாஸ்தா ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் அருள் வழங்கும் ஐயப்பனின் புகழ், மகிமை, பெருமை, பக்தி, சக்தி உலகமெங்கும் பரப்ப வேண்டும் அதுவே எங்களது எண்ணமும் கொள்கையும்!*

*சுவாமியே சரணம் ஐயப்பா 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...