Saturday, March 8, 2025

பாரிஜாதவனேஸ்வரர் திிருக்களர் திருவாரூர்

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,
திருக்களர் - 614 720. 
திருவாரூர் மாவட்டம்     
*தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்:
திருஞானசம்பந்தர்                       

*மூலவர்:
பாரிஜாதவனேசுவரர், 
களர் முளை நாதர்

*தாயார்:
 அமுதவல்லியம்மை

*தல விருட்சம்:
பாரிஜாதம் (பவளமல்லி)

*தீர்த்தம்:
துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், (சிந்தாமணி தீர்த்தம்) ருத்திர தீர்த்தம், ஞானதீர்த்தம்

*இத்தலத்தில் வழிபட்டோர்: பராசர முனிவர், கால பைரவர், துர்வாசர்.          

*களரி என்பதற்குக் கூட்டம், சபை, அரங்கம் எனப் பல பொருள் உண்டு. துர்வாசருக்குச் சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனம் தந்தருளியமையால் 'களரி' என்னும் இத்தலப்பெயர் பின்பு 'களர்' என்றாயிற்று.     

*இது களர் நிலத்தில் உள்ள கோயிலாததால், திருக்களர் என்ற பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது. 

*பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும், சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர், தானும் அந்தப் பாக்கியத்தைப் பெற விரும்பினார். துர்வாச முனிவர் தேவலோக  பாரிஜாதத்தை இங்கு கொண்டுவந்து வைத்து வளர்த்தார். பிறகு ஒரு சிவலிங்கம் அமைத்து, அதை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து, தேவதச்சன் மூலமாக இக்கோயிலை எழுப்பினார் என்று தல வரலாறு கூறுகிறது. 

*இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளினார்.  துர்வாசர் எப்போதும் நடராஜ பெருமானின் பிரமதாண்டவத்தை தரிசித்துக்கொண்டிருக்கும் வகையில்   இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளன. 

*நடராஜப் பெருமானின் 8 தாண்டவத் தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது.                   

*மூலவர் பாரிஜாதவனேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக அருள்புரிகிறார்.                   *கல்வெட்டில் சுவாமியின் பெயர் - களர் முளைத்த நாயனார், அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார் - என்று குறிக்கப்படுகின்றது.       

*இத்தல இறைவன் பாரிஜாதவனேஸ்வரரை வணங்கி வழிபாடு செய்தால், கேது பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வளம் பெறலாம். 
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் என்பதும் இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். 

*அம்பாள்  கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் அருள்புரிகிறார். 
அம்பாள் சந்நிதி வெளி மண்டபத்தின் கீழ்க்கோடியில் அஷ்டபுஜதுர்க்கை சந்நிதி உள்ளது.       

*முருகப்பெருமான் தனியே குரு மூர்த்தமாக இத்தலத்தில் அருள் புரிகிறார். இந்த முருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில்தான்.  கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு.          

*இங்குள்ள தீர்த்தங்களுள்  கோயில் எதிரே உள்ளது துர்வாச தீர்த்தம். மற்றையவை - 1) பிரமதீர்த்தம்  (தெற்கு வீதியில் உள்ளது)
2) ருத்ரதீர்த்தம் (மேல வீதியில் உள்ளது)
3) ஞானதீர்த்தம் (வடக்கு வீதியில் உள்ளது) 

*கோவிலூர் மடாலயத்தில் அதிபராக இருந்த வீரசேகர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அவருக்குத் திருக்களர் ஆண்டவர் என்று பெயர்.     

*சோழர்கள் கால எட்டு கல்வெட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜய நகரத்தாரது மூன்றும் படி எடுக்கப் பட்டுள்ளன. 

*திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது திருக்களர்.                     
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பாரிஜாதவனேஸ்வரர் திிருக்களர் திருவாரூர்

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர் - 614 720.  திருவாரூர் மாவட்டம்      *தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்: தி...