Friday, March 7, 2025

சனீஸ்வரன் நவக்கிரகங்களில் ஒருவன். நல்லது செய்பவன் என்று ஏனோ ஞாபகம் வருவதில்லை.

 சனிக்கிழமை சனீஸ்வர பகவான் -  நினைவு வருவது சகஜம் தானே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா என்றால் என்ன பதில்? பயம் தான். ஏன். அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம்.


இன்று சனிக்கிழமை சனீஸ்வர பகவான் நினைவு வருவது சகஜம் தானே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா என்றால் என்ன பதில்? பயம் தான். ஏன். அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம். சனீஸ்வரன் பெயர் உண்மையில் சனைச்சரன் மெதவாக நடப்பவன். மற்ற கிரஹங்கள் ஒரு ராசியில் இருக்கும் காலத்தை விட சனைஸ்சரன் வந்து தங்கி கிளம்பி போக ரொம்ப காலம் எடுத்துக் கொள்வான். ரெண்டரை வருஷம். ஒவ்வொருவருக்கும் மூன்று முறை இப்படி ரெண்டரை வருஷங்கள் வரும் என்பதால் அதனால் அவனுக்கு ஏழரை நாட்டான் என்று பெயர் பெயர். ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர் வந்து விட்டால், ''சனி வந்து தொலைந்து விட்டது. சரியான ஏழரை நாட்டான்'' என்று முணுமுணுக்கிறோம் அல்லது நெருங்கியவர்களிடம் சொல்கிறேன். அல்லது மனதிலேயே திட்டுகிறோம். சனைஸ்சரன் வந்து போவதை சனிப்பெயர்ச்சி என்று கொண்டாடுவதன் காரணம் என்ன? அவனைத் திருப்தி படுத்தினால் நம்மை ரொம்பப்படுத்த மாட்டான் என்பதற்காக. இது ஒரு வித ஆன்மீக லஞ்சம். அவன் பார்வையால் காரியங்கள் சரியாக நடக்காது, மனக்கிலேசம்,நிம்மதியின்மை, வியாதி, போன்ற பல துன்பங்கள் நேரும் என்று ஒரு பயம். பரிஹார ஸ்தலங்கள் என்று பல கோவில்கள் உள்ளன.எல்லா கோவில்களும் சைவர்கள் விஜயம் செய்பவை. சிவன் மூல விக்ரஹம். சனி நம்மை பிடிப்பதற்குள் நாம் அவனைப் பிடித்து அவன் நல்லது செய்ய வேண்டிக் கொள்ளவேண்டும் என்று தான் பரிகார ஸ்தலங்களுக்கு செல்கிறோம்.  

ஆனால் சனீஸ்வரனை நினைப்பதில் ஒரு சங்கடம். பக்தியை விட பயம் அதிகம் பலர் முகத்தில் தெரிகிறது. சனீஸ்வரன் நவக்கிரகங்களில் ஒருவன். நல்லது செய்பவன் என்று ஏனோ ஞாபகம் வருவதில்லை. சனிபெயர்ச்சி அன்று எல்லா கோவில்களிலும் அதிக கூட்டம் ஏன்? சனிதோஷம் விலக பரிஹாரம் தேடத்தானே . நமது தேசம் முழுதும் சனி பகவான் கோவில்கள் சில முக்கியமானவை. எனக்கு எல்லா சனி பகவான் கோவில்களுக்கும் செல்லும் வாய்ப்பு இது வரை கிடைக்க வில்லை. சனீஸ்வரன் நியாயவாதி. நேர்மையானவன். நல்லவன். நல்லதே செய்பவன். வீட்டில் அவன் படத்தை, விக் ரஹத்தை வைத்து வணங்குபவர்களை இதை எழுதும் வரை 85 வருஷங்களாக பார்க்கவில்லை.

சூர்ய பகவானுக்கு ரெண்டு பிள்ளைகள் பெரியவன் யமன். சின்னவன் சநைஸ் சரன். பெரியவன் ஆயுளை முடிப்பவன். சின்னவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பவன். எல்லா கோவில்களிலும் நவகிரஹ சந்நிதியில் சனி பகவான் இருந்தாலும் சில கோவில்களில் பிரதான தெய்வமாக இருக்கிறார். சனிபகவான் சந்நிதியில் யாரும் நேரே அவரை நின்று பார்ப்பதில்லை. நம் பார்வை தான் அவர் மேல் படவேண்டும். அவர் பார்வை படவேண்டாம் என்பார்கள்.

சனீஸ்வரன் பிறந்த நாள் புராட்டாசி சனிக்கிழமை ரோஹிணி நக்ஷத்ரம். காஸ்யப கோத்ரம். அம்மா சாயா தேவி.அப்பா சூர்யன். காக்கை வாஹனம். கருப்பு நிறம். ரொம்ப நீதி நியாயவான்.

வடக்கே மஹாராஷ்டிராவில் சனி சிங்கணாப்பூர் என்ற இடத்தில் ரொம்ப பெரிய கோவில். அஹ்மத் நகரில் தேவாஸா எங்கிற கிராமத்தில் 5 1/2 அடி உயர கருப்பு கல் ரூபத்தில் அருள் பாலிக்கிறார். மேலே கூரை இல்லாத கோவில். உலகப்ரஸித்த சனி பகவான் கோவில். ஏக்கர் கணக்கான பரப்பளவு கொண்ட கோவில். சென்று பார்த்து அதிசயித்தேன்.

பம்பாயில் தியோனார் அருகே ஒரு சனீஸ்வரன் கோவில். 7 அடி உயர சனி பகவான் கருப்பாக நிற்கிறார். சனிக்கிழமைகளில் பூஜை முடிந்து அர்ச்சகருக்கு சாமி வந்து சனீஸ்வரன் அருள் வாக்கு சொல்கிறாராம்.

மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் தித்வாலா எனும் ஊரிலும் ஒரு சனி பகவான் இருக்கிறார். புராதன கோவில்.

தெற்கே தமிழ்நாட்டின் அருகே புதுச்சேரி காரைக்கால் பக்கம் திருநள்ளாறு க்ஷேத்ரத்தில் அற்புதமான தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் தனி சந்நிதியோடு இருக்கிறார். தரிசிக்காத ஹிந்துக்களே இல்லை எனலாம். அங்கே நள தீர்த்தத்தில் நீராடியோ அல்லது ஜலத்தை ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டூ சனீஸ்வர பகவானை வணங்கினால், ஏழரை சனி போன்ற பிரச்னைகள் தீரும். திருஞான சம்மந்தர், சுந்தரர், அப்பர் என மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம், காவிரி தென்கரையில் 52-வது சிவ ஸ்தலம்.

டில்லியில் சனி தாம் என்று சந்தர்பூர் சாலையில் ஒரு சனீஸ்வரன் கோவில் இருக்கிறது. நான் இன்னும் சென்று தரிசிக்கவில்லை. பதேபூர் பெரி அருகே அசோலோ பக்கமாம். சக்தி பீடமாக சனீஸ்வர ஆலயம் திகழ்கிறது. உலகத்திலேயே ரொம்ப பெரிய சனி பகவான் இங்கே தான். பக்தர்களே சனிபகவானை தொட்டு பூஜை பண்ணுகிறார்கள். கடுகு எண்ணெய் அபிஷேகம். நம் ஊரில் நல்லெண்ணெய் தான் பிரதானம்.  
மத்திய பிரதேசத்தில் சனி சாரா கோவில் ஒன்று சனி பர்வதம் என்ற பகுதியில் இருக்கிறது. குவாலியரிலிருந்து 25 கி.மீ. ஹனுமான் லங்கையை வாலால் எரித்த பின் சனி பகவான் அவரை சந்தித்த இடம். விக்ரமாதித்யன் கட்டிய கோயில் என்கிறார்கள்.
இந்தூரில் ஒரு சனி பகவான் இருக்கிறார். மராத்தி ராணி ஹோல்கர் வம்சத்தவள் அஹல்யா பாய் கட்டிய கோவில். அதற்கு முன்னாலே யும் புராண காலத்து கோவில் தான். கோபால் தாஸ் திவாரி என்ற கண் தெரியாதவர் கனவில் சனி பகவான் வந்து மலையில் ஒரு இடத்தில் தோண்டி எடுத்த கோவில் என்று சொல்கிறார்கள்.  

''எனக்கு கண் தெரியாதே நான் எப்படி உன்னை கண்டுபிடிப்பேன்?''
"கண்ணை திறந்து பார் தெரியும்'' என்றான் சனீஸ்வரன்.
 திவாரிக்கு கண் திறந்து மலையைத் தோண்டி சனீஸ்வரன் சிலை அகப்பட்டது என்று கதை செல்கிறது. சனைஸ்சரன் சனீஸ்வரன் ஆகி நவகிரஹங்களில் சனி ஒருவருக்கே ஈஸ்வரன் பட்டம் தானாகவே கிடைத்துவிட்டது.

ஆந்திர தேசத்தில் தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் எர்டானுர் என்ற கிராமத்தில் ஒரு சனீஸ்வரன் கோவில் இல்லிறது. சனிபகவான் 20 அடி உயரம். அண்ணாந்து பார்த்து வேண்டிக்கொள்ள வசதி. யார் தலையும் மறைக்காது.
ஆந்திராவிலேயே இன்னொரு இடத்தில் மண்டபள்ளி என்கிற ஊரில் மாண்டேஸ்வர சுவாமி கோயில் சனி பகவான் சந்நிதி ரொம்ப விசேஷம்..
கர்நாடகாவில் உடுப்பிக்கு பக்கத்திலேயே பன்னஞ்சே என்ற ஊரில் ஒரு சனி க்ஷேத்திரம் உள்ளது. 23 அடி உயர சனி பகவான் பக்தர்களை ரக்ஷிக்கிறார்.
நம் தமிழகத்தில் தேனீ பக்கத்தில் குச்சனுரில் உள்ள ஸ்வயம்பு சனீஸ்வரன் பிரபலமானவர். சனிப் பெயற்சியின் போது நிற்க இடம் தேடவேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் கோரி மெட்டுக்கு அருகே மொரட்டாண்டி என்ற கிராமம். அங்கே வெட்டவெளியில் 27 அடி உயரத்தில் சனி பகவான் நிற்கிறார். நான் பார்த்திருக்கிறேன். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ என நீளமான பெயர். பஞ்சலோக விக்ரஹம். பீடத்தையும் சேர்த்தால் 33 அடி . ரொம்ப பெரியவர். இங்கே அவர் வாஹனம் காக்கை இல்லை கழுகு. ஆகமம் அப்படி தான் சொல்கிறதாம். நான்கு கரங்கள். மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்.கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரத ஹஸ்தங்கள். நல்ல கூட்டம் எப்போதும்
சனியை பொங்கு சனி மங்கு சனி என்று அழைப்பது வழக்கம். சனி தசையின் பொது கஷ்டங்கள் மேலேமேலே வந்தால் மங்குசனி. அதிர்ஷ்டங்கள் நிறைய அடித்து எதிர்பார்க்காத நன்மை,சுகம் கிடைத்தால் அந்த சனிதசை பொங்கு சனி. வாரியும் கொடுப்பான், வாரியும் விடுபவன் சனி.
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம் 🌺🌺🌺 🙏🙏
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம் 🌺🌺🌺 🙏🙏
ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம் 🌺🌺🌺 🙏🙏
திருவருள் புரியும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம் 🌺🌺🌺 🙏🙏
சனி பகவான் 108 போற்றி
ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி
ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் சுடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி
.ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரக மூர்த்தியே நின் திருவடிகளே சரணம்
சனி பகவானுக்கு உரிய பரிகாரங்கள்
...
வன்னி மரத்தடி விநாயகருக்கு பச்சரிசி மாவை அல்லது பச்சரிசியை அவரை சுற்றிலும் தூவி வருவது. எறும்புகள் அதை எவ்வளவு காலம் வரை பத்திரமாக எடுத்து வைத்து இருக்கிறதோ, அத்தனை காலம் தேவர்களின் ஆசி நமக்கு தொடர்ந்து
சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம்.
இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிக நன்று. சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும்.
விநாயக பெருமானை வழிபடுவதும், ஆஞ்சனேயரை சனிக் கிழமைகளில் துளசி மாலை அல்லது வடை மாலை அணிவித்து, அர்ச்சித்து 27 முறை வலம் வருவதும் அஷ்டமச் சனி தோஷ நிவர்த்தி தரும்.
காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.
தசரத மஹாராஜா அருளிய, சிவனை போற்றும் "தாரித்ரிய தஹன ஸ்தோத்திரம்" பாராயணம் செய்வதன் மூலம் சனி தோஷத்தால் உண்டான பணக் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து சனி பகவானின் கடாட்சம் கிடைக்கும்.
தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம் (கடன் நிவாரண ஸ்தோத்ரம்)
1. விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய
2. கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
3. பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
4. சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய
5. பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
6. கெளரி விலாஸ புவனாய, மஹேஷ்வராய
பஞ்சானனாய சரணாகத கல்பகாய
ஷர்வாய, சர்வ ஜகதா மதிபாய - தஸ்மை
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
7. பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
8. ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
9. முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
வசிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம்
சர்வ தாரித்ரிய நாசனம்
சர்வ சம்பத்கரம் ஷீக்ரம்
புத்ர பெளத்ராபி வர்தனம்
...
சனீஸ்வர பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கிட, தசரத சக்கரவர்த்தி நமக்கு அருளிய " புத்திர ப்ராப்தி ஸ்தோத்திரத்தினை " பாராயணம் செய்திடலாம்.
ஸ்ரீ கணேசாய நமஹ
அஸ்ய ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்திர மந்த்ரஸ்ய
தசரதரிஷி : சனைச்சர தேவதா
த்ரிஷ்டுப் சந்த : சனைச்சர
ப்ர்த்யர்த்தே ஜபே வினியோக
தசரத உவாச :
1. கோணோந்த்தகோ ரௌத்ரயமோநத பப்ரு:
க்க்ஷ்ருண : சநி : பிங்களமந்தஸெளர
நித்யம் ஸம்ரு தோமு யோ ஹராதக பீடாம்
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
2. ஸூரா ஸூரா : கிம்புருஷோர கேந்த்ரா
கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
3. நரா நரேந்திரா : பசவோ ம்ருகேந்திரா
வன்யாச்ச யோ கீட பதங்க்கப்ப்ருங்கா
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
4. தேசாச்ச துர்காணி வனானி யுத்ர
ஸேனான நிவேசா : புரபத்தனானி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதென
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
5. திலைர்யவைர்மாஷ குடான்ன தானை:
லோஹேன நீலாம்பர தானதோவா
ப்ரீணாதி மந்த்ரைர் நிஜ வாஸரே ச
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
6. ப்ரயாக கூலே யமுனாதடே ச
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
யோயோகினாம் த்யான கதோநபி ஸூஷ்ம
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
7. அந்த்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட
ஸ்திதீய வாரே ஸ நர : ஸூகி ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந பு ந : ப்ரயாதி
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
8. ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர்வனத்ரயஸ்ய
ந்ராதா ஹரிசோ ஹரதே பிநாகீ
ஏகஸ்த்ரிதா ருக்யஜூ சாம மூர்த்தி :
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
9. சன்யஷ்டகம் ய : ப்ரயத : ப்ரபாதே :
நித்யம் ஸூபத்ரை : பசுபாந்த வைச்ச
படேத்து ஸௌக்யம் புவி போக யுக்த :
தஸ்மை நம : ஸ்ரீ ரவிநந்தனாய
10. கோணஸ்த : பிங்களோ பப்ரு :
க்ருஷ்ணோ ரௌத்ரோ பிந்தகோயம
ஸெளரி : சனைச்சரோ மந்த :
பிப்பலா தேன ஸம்ஸ்துத :
11. ஏதானி தச நாமகநி ப்ராதருத்தாய ய : படேத்
சனைச்சரக்ருதா பீடாத கதாஷித் பவிஷ்யதி
இதி ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

பாரிஜாதவனேஸ்வரர் திிருக்களர் திருவாரூர்

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர் - 614 720.  திருவாரூர் மாவட்டம்      *தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்: தி...