Wednesday, October 11, 2023

பிதுர் தோஷமும்....................... புரட்டாசி அமாவாசையும்

பிதுர் தோஷமும்.......................    
புரட்டாசி அமாவாசையும் 
      நம் முன்னோர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் பல அசுப பலன்களை தருவதைப் போல

      முன்னோர்கள்  இறந்த திதி அன்று 
ஆண்டு தோறும் உங்களுக்கு அவர்களை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு உரிய  முன்னோர் சிரார்த்தத்தை செய்ய வேண்டும்.
 
      ஆண்டு தோறும்  அவர்களுக்கு உரிய உணவை நாம் அளிக்காமல்  இறந்த முன்னோர்கள்  ஏமாற்றம் அடைந்தால் 

திருமணத்தடை,

தொழில் தடை அல்லது வேலையின்மை,

குழந்தை பாக்கிய தடை,

நீங்கா வறுமை,

அகால மரணம்,

தீரா நோய்,

எண்ணிய காரியம் நிறைவேறாமை,

  போன்ற அசுப பலன்கள் தருகிறது.

    
    இறந்த திதி அன்று  சிரார்த்தம் கொடுக்க இயலாதவர்கள் ஆடி,புரட்டாசி,தை மாதங்களில் வரும் அம்மாவாசையில் ஏதேனும் ஓரு அம்மாவாசையில்  சிரார்த்தம் செய்யலாம்.

       தாய்,தந்தையை குறிக்கும் சூரியன்,சந்திரன் இணைந்த நாளே அம்மாவாசை ஆகும்.

     ராகு பாட்டனாரையும், 
கேது பாட்டியையும் குறிக்கும் கிரகம்.

🌹பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றும் நமது முன்னோர்களை  குறிக்கும் 
5 அல்லது 9ம் இடங்களில் பாவ கிரங்கள் இருப்பது,

🌹  5 (அ) 9 ம் இடத்து அதிபதிகளுடன் பாவ கிரகங்கள் இணைந்து இருப்பது,

🌹5 (அ) 9ம் அதிபதி நீசம் அடைவது,

🌹5 (அ)9ம் அதிபதி அஸ்தமணம் அடைவது,

🌹5 (அ) 9 ம் அதிபதி லக்கனத்துக்கு 6,8,12ல் மறைவது,

🌹சூரியன்,சந்திரன் உடன் ராகு அல்லது கேது இணைவது,

      போன்ற காரணங்களினால் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு அசுப பலன்களை தருகிறது.

      அகல மரணம் அடைந்தவருக்கு தில ஹோமம் ராமேஸ்வரத்தில் செய்து அவர்களை சாந்தி செய்து நற்பலனை பெறலாம்.

        நதிக் கரைகளிலும், கடற்கரையிலும் மூத்தோர் காரியங்களை செய்து முழுக்கு செய்வது  சிறப்பு.

               இயலாதவர்கள் அவர்களின் இல்லத்திலும் செய்யலாம்.

      திருவள்ளுவர் மூத்தோர் கடன் பற்றி  அன்றே திருக்குறளில் தெளிவாக  தெரிவித்துள்ளார்.
   
      காஞ்சி பெரியவர்  வாழ்வில் முன்னேற மூத்தோர் கடனும்,குலதெய்வ வழிபாடும் இரண்டு கண்கள்  போன்றது என்று தெரிவித்து உள்ளார்.

       மாதம் தோறும் அம்மாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து வீட்டில்  கோலமிடாமல் வழிபட வேண்டும்.

    சாமிப் படத்துடன் இறந்த முன்னோர் படங்களை வைத்து வழிபட கூடாது.
    
   திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அம்மாவாசையை பெளர்ணமி ஆக மாற்றி நிகழ்வும் தை அம்மாவாசை அன்று நிகழ்ந்தது அதை தனி பதிவு செய்கிறேன்.

       பிதுர் காரியத்தை செய்யாமல் விட்ட அனைவரும் எதிர் வரும் தை அம்மாவாசை தினத்தில் பிதுர் சிரார்த்தத்தை செய்து வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.
நன்றி.

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...