Thiruvathiramangalam Shiva Temple
The temple is said to be 1400 years old as Thirunavukkara sang Thiruvathirai Mangalam as a deposit in Thevaram. Adhiraiyan may have been named as Adhiraiyan Mangalam which means Lord Shiva and later became Thiruvathirai Mangalam as the epithet of Thiru.
The event of the formation of the constellation Thiruvathira in the cosmic sky is called the 'Adhirai Festival'. Considered by Chandor to be the constellation of the incomparable lineage of Eisen, he became known as Thiruvathira. It is said that we call it 'Thiruvathiraimangalam' as it was the town where the Aadirai festival was held
The Ganesha, Sivaloganathar, Sankara Nayaki and Chandikeswarar located in this temple are believed to date back to the late 12th and 13th centuries AD. So the temple here can be said to be the brick floor of the Cholas before. .
The former temple was a fine example of the art of the later Cholas. The sanctum sanctorum was built of marble and brick. Jagati, Padmam, Kumutham, Vedic, semi-pillars, with kapotakam, the plane above the sanctum, with number bars, was a Dravidian type temple. The vestibule of the temple was in the shape of a brick cone built during the Maratha rule.
The temple was isolated for many years without visitors, as it was a bit secluded without being in the middle of town. The bushes were bent.
Rtd RMS-Radhakrishnan, an 82-year-old Sivanadiyar from the town, who had witnessed this many times, told his son about his intention to renovate the temple and the family got themselves involved in the temple work. Renovated and consecrated from 2013-2016.
While digging the earth for the restoration of this temple, Natarajar and Sivagami Amma's revered saints were found. These were to confirm the period of the later Cholas. Assuming security, the Treasury is in the vault. Two inscriptions were found.
When the whole of this inscription is not available, one of the inscriptions found mentions the place as ‘Thiruvathiraimangalam’ and the goddess as ‘Sankaranayaki’. This inscription is believed to be about 600 years old. Thiruvathiramangalam was a town located in the Panaiyur kingdom during the reign of the Chola kings.
Thiruvathiramangalam is a small village located on the Thiruvarur-Nagore road. The temple is located on the bank of a large pond in front of the village.
The present temple, built in a state of complete disrepair, has been completely remodeled without the semblance of an ancient temple, although the originals inside are ancient. It could have done the same as the tribe if there had been government assistance.
The entrance gate with a semi-circular arch, with a perimeter wall on all four sides, has a sanctum facing east with Lord Sivaloganathar having a circular avadiyar, while Goddess Sankara Nayaki has a sanctum facing south. The high porch hall connects the two sanctuaries and outside, there is the Nandi altar. Ganesha is on the left side of the front hall and Valli / Deivanai Sametha Murugan is on the right side.
. The sanctum sanctorum is surrounded by Dakshinamoorthy on the south, Durga on the north and Navagraha on the northeast. Inside, flowering plants bloom.
The Sivagangai Theertham opposite the Tala Maram Chengali Maram Theertham is dedicated to Lord Sivaloganathar.
The Sivaloganathar Temple is said to have various glories as a temple of marriage blessings and healing powers.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், திருவாதிரைமங்கலம் சிவன் கோயில்
Thiruvathiraimangalam sivan temple
விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
என சாய்காட்டில் இருந்து இத்தலம் பற்றி பாடியவர் அப்பர் சுவாமிகள்
திருநாவுக்கரசர் திருவாதிரை மங்கலத்தை தேவாரத்தில் வைப்புத்தலமாக வைத்து பாடியிருப்பதால் இக்கோயிலும் ஊரும் 1400 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என கூறலாம். ஆதிரையான்என்பது சிவனை குறிக்கும் ஆதிரையான் மங்கலம் என பெயர் பெற்று பின்னர் திரு அடைமொழியாகி திருவாதிரைமங்கலம் என ஆகியிருக்கலாம்.
அண்ட வான்வெளியில் திருவாதிரை விண்மீன் குழுவின் தோன்றல் நிகழ்வையே ‘ஆதிரை விழா’ என்கிறோம். நிகரற்ற பரம்பொருளான ஈசனின் பெருஞ்சுடருக்கு உரிய விண்மீன் என சான்றோரால் கருதப்பட்டு, திரு என்ற அடைமொழி கொண்டு திருவாதிரை ஆனது. ஆதிரை விழா சிறப்பாக நடைபெற்று வந்த ஊராக இருந்ததால், ‘திருவாதிரைமங்கலம்’ என அழைக்கிறோம் என்கின்றனர்
இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் விநாயகர், சிவலோகநாதர், சங்கர நாயகி, சண்டிகேசுவரர், ஆகியவை பிற்காலச்சோழர் காலமான கி.பி.12, 13-ம் நூற்றாண்டினை சேர்ந்தது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்பு இங்கிருந்த கோயில் சோழர்களின் செங்கல்தளி என கூறலாம்.
முன்பிருந்த ஆலயம் பிற்காலச் சோழர்களின் கலைநயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.இறைவன் வாழும் கருவறையானது, கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு கட்டப்பட்டிருந்தது. ஜகதி, பத்மம், குமுதம், வேதிகை, அரைத்தூண்கள், காபோதகம் கொண்டு,கருவறைக்கு மேல் உள்ள விமானம், எண்பட்டைகளைக் கொண்டு, திராவிட வகையைச் சார்ந்த கோவிலாக இருந்தது. இவ்வாலயத்தின் முன்மண்டபம், மராட்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட செங்கல் கூம்பு வடிவம் கொண்டிருந்தது.
ஊரின் மத்தியில் இல்லாமல் கோயில் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளதால், பல ஆண்டுகளாக வருவோர் போவோர் இன்றி கோயில் தனித்து விடப்பட்டது. முட்புதர்கள் மண்டிப்போய் கிடந்தது.
இதனை பல முறை கண்டு வருந்திய இந்த ஊரை சேர்ந்த Rtd RMS-ராதாகிருஷ்ணன் என்ற 82 வயது சிவனடியார், தன் மகனிடம் ஆலயத்தை திருப்பணி செய்யும் தன்னுடைய எண்ணம் பற்றி கூற குடும்பமே கோயில் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது. 2013- 2016 வரை திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்தக் கோவிலின் திருப்பணிக்காக பூமியைத் தோண்டியபோது, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையின் உற்சவத் திருமேனிகள் கிடைத்தன. இவை பிற்காலச் சோழர்களின் காலத்தை உறுதி செய்வதாக இருந்தது. பாதுகாப்பு கருதி, அறநிலையத்துறை பாதுகாப்பறையில் உள்ளது. இரண்டு கல்வெட்டுக்களும் கிடைத்தன,
இக்கல்வெட்டின் முழுப்பகுதிகள் கிடைக்காத நிலையில்,
கிடைத்த துண்டு கல்வெட்டுகளில் ஒன்று, இத்தலம் ‘திருவாதிரைமங்கலம்’ என்பதையும், இறைவி ‘சங்கரநாயகி’ என்பதையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. திருவாதிரைமங்கலம் சோழமன்னர்கள் ஆட்சியில், பனையூர் நாட்டில் அமைந்த ஊராக இருந்துள்ளது.
திருவாதிரைமங்கலம் சற்று உள்ளடங்கிய கிராமம்தான், திருவாரூர்- நாகூர் சாலையில் உள்ள சூரனூர் வந்து அங்கிருந்து தெற்கில் 1½ கிமி தூரத்தில் வெட்டாற்றின் கரையோர பகுதியில் உள்ள இவ்வூரை அடையலாம். கிராமத்தின் முகப்பில் பெரிய குளத்தின் கரையோரம் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
தற்போது காணும் கோயில், பழம் கோயிலிலை முற்றிலும் அப்புறப்படுத்திய நிலையில் கட்டப்பட்ட கோயில் பழம்கோயிலின் சாயல் இன்றி, முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கும் விஷயம் என்றாலும் உள்ளே இருக்கும் மூலமூர்த்திகள் பழமையானவர்களே. அரசின் உதவி இருந்திருந்தால் பழங்கோயில் போலவே செய்திருக்கலாம்.
அரைவட்ட வளைவு கொண்ட நுழைவு வாசல், நான்கு புறமும் சுற்றுசுவர், இறைவன் சிவலோகநாதர் வட்ட வடிவ ஆவுடையார் கொண்டு கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி சங்கர நாயகி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். உயர்ந்த முகப்பு மண்டபம் இரு கருவறைகளையும் இணைக்கிறது அதன் வெளியில் , நந்தி பலிபீடம் உள்ளது. முகப்பு மண்டபத்தில் இடதுபுறம் விநாயகர் வலது புறம் வள்ளி/தெய்வானை சமேத முருகன் உள்ளனர்.
. கருவறைச் சுற்றில் தெற்கே தக்ஷணமூர்த்தி, வடக்கே துர்க்கை, , வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. உட்புறத்தில் அரளிப் பூச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன.
தல மரம் செங்காலி மரம் தீர்த்தம் எதிரே உள்ள சிவகங்கை தீர்த்தம் இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் மீது, பங்குனி மாதத்தில் முதல் 20 நாட்களில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் படுவது சிறப்பு.
திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சிவலோகநாதர் கோயில்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment