Wednesday, October 30, 2024

பூதலூர் கோவில் பத்து ஆபத்சகாயேஸ்வரர் கோவில்...

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை அடுத்த கோவில்பத்து கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். 
 தஞ்சை பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட கி.பி. 1010 ஆம் ஆண்டிலேயே ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில் கட்டப்பட்டது இந்தக் கோயில்.
தஞ்சாவூர் மேற்கே 22 கிமீ தொலைவில் பூதலூர், கோவில் பத்து கிராமத்தில்உள்ள சோழர் காலக் கோயில்  ஆபத்சகாயேஸ்வரர் கோவிலின் 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூதலூரில் உள்ள சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மோசமான நிலையில் உள்ளது. ஒரு பாழடைந்த நுழைவாயில் மற்றும் மொட்டை கோபுரம் (மொட்டை கோபுரம்) மட்டுமே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இடிந்து விழுந்திருக்கக்கூடிய கோயிலின் வெளிப்புறச் சுவர் இருந்ததற்கான ஆதாரமாக உள்ளது. வெளிப்புறச் சுவரின் எச்சங்கள் ஒரு பக்கத்தில் காணப்படுகின்றன மற்றும் மாட்டு சாணத்தால் மூடப்பட்டிருக்கும். அம்பாள் சந்நிதி முற்றிலும் சேதமடைந்ததால், 40 ஆண்டுகளுக்கு முன்பு சிலை பிரதான கோவிலுக்கு மாற்றப்பட்டது . ஒரு காலத்தில் வி அசந்த மண்டபம் (கோயில் அமைப்பு) இருந்த இடத்தில் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

 கோயிலும் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு அதன் சுற்றுப்புறமும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்தக் கோயில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியை அடுத்த வளம்பக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த செம்பிய உத்தமரையன் என்ற குறுநில மன்னருக்காக, ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்தக் குறுநில மன்னர் ராஜராஜனுக்குப் பல வகைகளில் உதவியாக இருந்தவர்.

இதைக் கட்டப் பயன்பட்ட கல்கள், தற்போதைய திருச்சி மாவட்டம், துவாக்குடி, உறையூர், திருவானைக்கா, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.



இந்தக் கோயிலில் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர், ஆனந்தவல்லி, விநாயகர், வள்ளி தேவ சேனா உடனுறை முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், சூரியர்- பைரவர், துர்க்கை - விஷ்ணு, நந்தி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன.



சுமார் 3 ஏக்கரில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் சிறப்பம்சம் சூரிய பூஜை. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 17,18,19 ஆகிய நாள்களில் காலை 6 மணிக்கு சூரியக் கதிர்கள் ராஜகோபுரம் வழியாக ஸ்ரீ சகாயேஸ்வரர் மீது படுவது சிறப்பு.

ராஜகுரு தெட்சிணாமூர்த்தி யின்
கால் மற்ற கோவிலில் உள்ளது போல் அல்லாமல்  உள்ளது தனி சிறப்பு. 
ஆபத்சகாயேஸ்வரர் கோவிலின் 
நவகிரகம் அனைத்தும் சூரியனைப் பார்த்து உள்ளது சிறப்பு


தற்போது, இந்து சமய அறநிலையத் துறையால் இந்தக் கோயிலில் இரு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் தற்போது கட்டடங்கள் சிதிலமடைந்தும், சிலைகள் உடைந்தும், கல்வெட்டுகள் அழிந்த நிலையிலும் உள்ளன. தனி சன்னதியில் இருக்க வேண்டிய ஆனந்தவல்லி தாயார், கோயிலின் பழுது காரணமாக சகாயேஸ்வரர் சன்னதியின் அருகே வைக்கப்பட்டுள்ளார்.

பிரதோஷம், மஹா சிவராத்திரி, அன்னாபிஷேகம் மற்றும் மாதாந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. 

40 வருடங்கள் முன்னால் திருவிழாவாக உச்சவர் சுவாமி அம்மன் அலங்காரத்துடன் வான வேடிக்கைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வுடன் அம்மன் கோவில் சென்று மாடவீதிவழியாக கோவில் வந்தடையும். 

எனவே, இந்து சமய அறநிலையத் துறை இந்தக் கோயிலை ஆய்வு செய்து, திருப்பணிகள் நடைபெற உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்..

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...