சிவசக்தி சங்கமமான
#அர்த்தநாரீஸ்வரரும்:
முனிவர்களும் மனிதர்கள்தான் என்பதால், உருவத்தில் பெரிதான எந்த வேற்றுமையும் அவர்களிடம் இருப்பதில்லை. ஆனால், அவர்களுடைய சக்தியோ அதீதமானது. எதையும் சித்திக்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள் என்பதால், அவர்களை சித்தர்கள் என்றும் அழைக்கிறோம். அப்படி மனிதர்களை விட வித்தியாசமாக ஒரு முனிவர் இருந்திருக்கிறார். அவர் தான் பிருங்கி முனிவர். 3கால்களுடன் இருந்த இந்த முனிவரால்தான், சிவனும் பார்வதியும் ஒரே உடலாய் அர்த்தநாரீஸ்வரராக மாறினார்கள் என்கிறது புராணம்.
சென்னையில் உள்ள பரங்கிமலைதான் இவர் தவம் செய்த இடம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. பிருங்கி தவம் செய்த மலை என்பதால் அது பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டதாகவும், விஜயநகர மன்னர்கள் காலத்துக்குப் பிறகு அது, பரங்கிமலையாக திரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு ஆதாரமாக அங்கிருக்கும் சிவன் கோயிலையும், அங்கு இருந்த சோழர்கள் காலத்திய கல்வெட்டையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர்.
இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள்.
நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர்உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார்.
இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் .
அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார்.
பிரிங்கியும் அப்பனே. என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார்.
அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார்.
(திருச்சி மாவட்டம் திருவானைக்காவல்
ஜம்புகேஸ்வரர் கோவிலில் சிவலிங்க சன்னதிக்கு இடது புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்த சிற்பம் உள்ளது)
#பிருங்கி_மலை:
சிவபெருமான் பிருங்கி முனிவரை பூலோகத்தில் தவமிருக்கும் படி கூறினார். அதன் படி பிருங்கி முனிவர் தவமிருந்த மலையானது பிருங்கி மலையென்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் பரங்கிமலை என்றழைக்கப்படும் இம்மலையானது இன்றைய சென்னையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் நந்தி வடிவில் காட்சி தருகிறார். பரங்கிமலை இரயிலடியில் நந்தீசுவரர் கோயில் அமைக்கப்படுகிறது.
#திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பிருங்கி முனிவருக்கென சிறப்பு வழிபாடு உள்ளது. அர்த்தநாரீசுவரர் தொன்மத்துடன் பிருங்கி முனிவருக்கு தொடர்பு உள்ளாதால், இச்சிவாலயத்தில் பிருங்கி முனிவரின் உற்சவர் சிலை வழிபாடு செய்யப்படுகிறது.
#திருஞானசம்பந்தர் பாடிய #திருச்செங்கோடு என்ற #திருக்கொடிமாடச்செங்குன்றூர்
தேவாரப் பதிகம்:
"அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண்டிரை நீர்த்தடம் பொன்னித் தென்கரையாம் கொங்கினிடை
வண்டலையும் புனல் சடையார் மகிழ்விடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும்புரிசை கொடிமாடச் செங்குன்றூர்
__திருஞானசம்பந்தர்
ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம்
மூன்று காலெனக் கொண்டான் முகத்திள முறுவல்
தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப்
போன்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன்.
ஊன்று – உறுதியாகத் தாங்கப்பெற்ற.
வயிராகம் – வைராக்கியம், உறுதி.
முறுவல் – புன்னகை.
புனிதன் – தூயோன்.
ஞானம், வைராக்கியம், நல்லொழுக்கம் இவை மூன்றும் கால்களாகக் கொண்டு, முகத்தில் இளஞ் சிரிப்பு தோன்றும்படி, இருளை அழித்துக் கதிரவன் வருவதுபோல் மாயையை அழித்து ஆங்கே நின்று ஆடினன் பிருங்கி முனிவன். அ·து அரனுக்கு முறுவலை விளைத்ததாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன் 9443548747 நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment