Sunday, December 10, 2023

மார்கழித் திருவாதிரை எல்லோருக்கும் ஆனந்தம் அருளும் ஆனந்தக் கூத்தன்



*மார்கழித் திருவாதிரை  எல்லோருக்கும் ஆனந்தம் அருளும் ஆனந்தக் கூத்தன்  மற்றும்  மூவுருவத் தியாக ராஜர் திருநாள்* .  
 சிதம்பரத்தில் பூஜையும் வேள்வியும் செய்து  நடராஜரது   *திருச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து பொன்னம்பலம் ஆக்கி வழிபட்டுத் தொழுதுத் துதித்துப் போற்றிய அரி அயன் அம்மன் முதலிய தெய்வங்கள் அனைவருக்கும்*  சிவலோக ஆனந்தக் கூத்தன் *திருநடனக் காட்சி அருளிய திருநாளே  ஆருத்ரா தரிசனம்* எனப்படும்  மார்கழித் திருவாதிரைத் திருநாள்.  

*தெய்வங்கள் அனைத்தும்  திருவாரூரில் தாய்  தந்தை சேய் ஆகிய* *மூவுருவத்   தியாக ராஜரைப் பூஜித்து*  *தரிசனம் பெற்ற திருநாள்*  
*திருவாதிரை*  
 
ஈசனுக்கு *ஆதிரையான்* என்று அருள் நாமம் .   

திருவாதிரை நட்சத்திரத்திற்கு  சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று பெயர்.      
                                                                                                                                    ஐந்து தொழில் ஓசையொலி இயக்க நாதர் நடராஜர் இல்லாத கோயில் இல்லை. 

திருச்சேறை சார பரமேஸ்வரர் கோயில்   உள்ளிட்ட சிறு கோயில்களிலும் *கருவறைச் சுவற்றில் கல் மேனி நாடராஜர் அருள் புரிவார்*. 

  தனிச் சந்நிதி  உள்ள  ஆதி அண்ணா மலையார் கோயில் போன்ற பழைய  கோயில்களில்  *நடராஜர் சந்நிதி  தனி நுழை வாசலுடன் இருக்கும்*.

திருவுத்தர கோச மங்கை மங்களேஸ்வரர் கோயிலில் *மரகத நடராஜர் சந்நிதி தனிக் கோயில் போல் சிறப்புறுகிறது*.     

  கார்த்திகை தீபம் போல் பழங் காலத்திலிருந்து *இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும்  *தூய தமிழர்த் திருவிழா ஆருத்ரா தரிசனம்* .    

*திருவாதிரைத் திருநாள்  திருவெம்பாவைத் திருவிழாவோடு சேர்ந்து அமையும் இரட்டைத் திருவிழா*.   

நடராஜருக்குப் படைக்கப்படும் எளிய உணவு களி. 

 திருவாதிரைக் களி ஒரு வாயாகிலும் உண்ண வேண்டும் என்பது பழமொழி.  

 சேந்தனார் படைத்து வழிபட்டு நடராசரது  அருள் பெற்றக் களி உண்டு களித்திருக்கும் திருநாளான  *திருவாதிரைத் திருவிழாவிற்கு  *சிதம்பரம் நடராஜர் கோயில்,  திருவாரூர் தியாக ராஜர் கோயில்,  திருவுத்தர கோச மங்கை  மங்களேஸ்வரர் கோயில், திருப்பெருந்துறை  ஆளுடையார் கோயில் ஆகிய நான்கு தலங்கள்*  மிக்க சிறப்புடன்  புகழ் பெற்றவை.

*தெய்வங்கள் வானவர்கள் எல்லோரும் பூஜை செய்து   தியாக ராஜரைக்  கண்டு களித்த*
*திருவாரூர்* *திருவாதிரைத் திருவிழாவை* ஒரு பதிகம் முழுவதும்  திருநாவுக்கரசர் விளக்குகிறார். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம் ....

இருதய கமலநாதேஸ்வரர் கோவில் திருவலிவலம் ! வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்ப...