திருக்கடையூர் அமிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்களின் சிறப்பும். அதன் பயன்களும் :
உக்ரரத சாந்தி பூஜைகள். 59 முடிந்து 60 வயது ஆரம்பம்.
ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுள் 120 ஆகும். இதில் பாதிவயதான 60 வயதில் தான் பல்வேறு கண்டங்கள் வந்து ஒரு மனிதனுடைய ஆயுளை குறைக்கும் என்பதால் அந்த கண்டங்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி இக்கோயிலுக்கு வந்து உக்ரரத சாந்தி செய்து தங்களுடைய ஆயுளை நீண்ட காலங்களுக்கு தொடர செய்வார்கள்.
இதை நாட்டு கோட்டை செட்டியார் வம்சத்தினர் 59 வயது முடிவில் இக்கோவிலுக்கு வந்து உக்ரரத சாந்தி செய்து. 60 வயது ஆரம்ப முதல் நாளில் அவர்கள் ஊர்களில் அனைவருக்கும் உணவு விருந்து அளிப்பார்கள்.
சஷ்டியப் பூர்த்தி :
60 வயது முடிந்து 61 வது வயது முதல் நாளில் திருமணம். அதாவது குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து செய்யக்கூடியவை . தாய், தந்தையருடைய திருமணங்களை பிள்ளைகள் பார்த்து இருக்கமாட்டார்கள், அவர்களுடைய மகள், மகன்கள் சேர்ந்து பெற்றோர்களுக்கு இந்த 60- வது திருமணம் செய்துவைப்பார்கள். இதனால் சகல செல்வங்களும் கிடைக்கக்கூடிய பலன்கள் உண்டாகும்.
பீமரத சாந்தி : 69 முடிந்து 70 வயது ஆரம்பம். விஜயரத சாந்தி : 75 வயது.
ஆரோக்கியம், திடமான உடல் கட்டமைப்பு, பீமனை போல் ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதால் இந்த பீமரத சாந்தி செய்யப்படுகிறது.
சதாபிஷேகம் : 80 வயது ஆரம்பம்85 வயது முடிய.
இந்த திருமனம் பேரன்கள், பேத்திகள், கொள்ளுபேரன்கள், கொள்ளுபேத்திகள். சேர்ந்து 80 வது வயதில் சதாபிஷேகம் (திருமணம்) செய்துவைக்கப்படுகிறது. இது குடும்ப விருத்திக்கு செய்யப்படுகிறது.
சதாபிஷேகத்திற்கு முதல் நாள் காலையில் ஏதாதச ருத்ரர்களாகிய மஹாதேவம், சிவம், ருத்ரன், சங்கரன், நீல லோகிதம், ஈசானம், விஜயம், பீமன், தேவதேவம், பவோத்பவம், ஆதித்யாகம் ஸ்ரீ ருத்ரன் என்று இவைகளை 11 கலசங்களில் ஆவானம் செய்து, விநாயக பூஜை செய்து மஹான்யாஸ ஜபத்துடன் பூர்வமாகத்த தொடங்கி 11 முறை ருத்ரத்ஸத் பாராணயம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறை ருத்ரம் முடிந்தவுடன் ஒவ்வொரு ஏகாதசருத்ரர்களுக்கு தைலம், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பாயஸான்னம், தயிர், தேன், எலுமிச்சை, நார்த்தை பழங்கள், இளநீர், சந்தனம், பன்னீர் இப்படியாக 11 ருத்ரர்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதே போல் மிளகுசாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், கல்கண்டு பொங்கல், பால்சாதம், தேங்காய் சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், பாயசம், தயிர்சாதம், அதிரசம் முதலியன அபிஷேகம் ஆனபிறகு நைவேதயம் செய்ய வேண்டும். ஒருமுறை ருத்ரத்தினால் ஹோமம், பூர்ணாஹதி செய்து, தீபாராதனை செய்து தம்பதிகளுக்கு அந்த 11 கலச புனிதமான நீரை அபிஷேகம் செய்து அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
ருத்ர ஏகாதசினி மஹன்யாஸம் ஆரம்பித்து 11 முறை ஜெபம் செய்து ஸ்ரீ ருத்ரத்தினால் ஒருமுறை ஹோமம் செய்து, பிறகு வஸோர்த்தாரை சமகப் பிரச்னத்தினால் செய்ய வேண்டும். ஒரு ருத்ரஹோமம் செய்த பலன் 10 ஆயிரம் அஸ்வமேதமயாக பலனை கொடுக்கும். வியாதி நிவர்த்தியாகும். ஜீவனம் மேலோங்கும், சிந்தனை வளரும், மனச்சாந்தி உண்டாகும். நல்ல வாக்கு சாதுர்மும், ஆயுள் விருத்தியும், குழந்தை செல்வமும் உண்டாகும்.
ஜென்ம நட்சத்திர ஹோமம் :
இது ஒவ்வொரு மனிதர்களும் அன்றைய தினத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறார்களோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரத்தை தெரிந்துக்கொண்டு அன்றைய நாளில் பூஜைகள் செய்வதால் நன்மை உண்டாகும்.
ஆயுள் ஹோமம் : ஒரு வயது முதல் 100 வயது வரை.
ஆயுள் விருத்திக்கு செய்யப்படும் பூஜைக்கு ஆயுள் ஹோமம் என்று பெயர்.
கனகா அபிஷேகம் 90 வயதில் செய்யப்படுகிறது.
பூர்ணா அபிஷேகம் 100 வயதில் செய்யப்படுகிறது.
ஆயிரம் பிறை கண்டவர்கள்
ஒரு பெரியவர் 80 வயதை கடந்து விட்டால், அவர் பூரண வாழ்வு வாழ்ந்தாக கருதுகிறோம். அதாவது அவர் ஆயிரம் பிறை கண்டவர் என்று கூறி அவரை வணங்குகிறோம். இத்தகைய சிறப்புப் பெற்றவர்கள் இத்தலத்துக்கு வந்து சதாபிஷேகம் செய்து கொள்கிறார்கள். 80 வயது கடந்தவர்கள் வணங்கத் தக்கவர்கள் என்று பரமாத்மா கண்ணபிரான் கூறியுள்ளார்.
கிருஷ்ணர் தன் வாழ்நாளில், 80 வயதை கடந்தவர்களை கண்ட போதெல்லாம் வணங்கி வழிபட்டுள்ளார். அதை பிரதிபலிப்பது போல திருக்கடையூர் தலத்திலும் சதாபிஷேகம் செய்து கொள்ளும் பெரியவர்கள் காலில் எல்லாரும் விழுந்து ஆசி பெற்றுக் கொள்கிறார்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment