Wednesday, September 13, 2023

வள்ளலார் 7 திரை விளக்கங்கள் யாவும் ஆன்ம தரிசனம் குறித்துத் தான்.

பேருபதேசம் – சில விளக்கங்கள்
பேருபதேசம் முழுமையுமே வள்ளலார் ஆன்ம நிலையைப் பற்றியும் , அந்நிலைக்கு வாருங்கள் என்று எல்லோரையும் அழைப்பதுத் தான்

1. சாலைக்கு செல்ல கொஞ்ச நாட்களாகிய 10 தினம் இருக்கிறது என்கின்றார் வள்ளலார் .
இதில் 10 தினம் என்பது நாட்களைக் குறிக்கவில்லை

எட்டிரண்டு கூட்டினால் வரும் 10 பத்தைக் குறிக்கின்றார்.
10 என்பது ஆன்மாவைக் குறிக்கும்.

2. திரை விளக்கங்கள் யாவும் ஆன்ம தரிசனம் குறித்துத் தான்.

3. என்னை ஏறாநிலை மிசை யாதெனில் – தயவு – அந்த தயவுக்கு ஒருமை வர வேண்டும்

இங்கு ஏறாநிலை என்பது – 36 தத்துவங்களைக் கடந்த நிலை – அது ஆன்ம நிலையே – ஏன் எனில் ஆன்மா தான் 36 தத்துவங்களைக் கடந்து தனித்து நிற்கிறது

மேலும் , இங்கு தயவு, ஒருமை என்பதெல்லாம் ஆன்மாவைக் குறிக்க வந்ததாகும்

4. சமயம் , மதம் சடங்குகளையெல்லாம் கடந்தது ஆன்மா என்பதால் , அவைகளில் சிறிதும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றார்.

5. எல்லோர்க்கும் தாய் , தந்தை முதலான ஆப்தர்களால் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ , அதற்கு கோடிக் கோடிப் பங்கு அதிகமான உதவி கொடுக்கும்படியான இடம் இது என்று சித்தி வளாகத்தைக் குறிப்பிடுகின்றார்.

இதில் சித்தி வளாகம் என்பது ஆன்ம நிலையையும் – ஆன்ம அனுபவத்தையும் குறிப்பதாகும்

6. கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக என்று கூறுவதில் ,
கருணை – ஆன்மா என்பதாகும்

7. ஞானத்தில் யோகமாகிய ” நிராசை ” என்னும் 15 ஆம் படி வரும் என்று கூறுவதும் ஆன்ம நிலையைத் தான். ஏன் எனில் ஆன்ம நிலையை அடைந்தால் நிராசை தானாகவே வந்துவிடும்.

8. முதலில் ஆண்டவர் தெரிவிக்க வேண்டியதை கண்டமாகத் தெரிவிப்பார் – உரிமை வந்தப் பின் அகண்டமாகத் தெரிவிப்பார் – இதில் ” உரிமை ” என்பது ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையைத் தான் – அதாவது ஆன்ம நிலையைத் தான்

கண்டம் என்பது – துண்டு துண்டாக – சிறிது சிறிதாக
அகண்டம் என்பது – முழுமையாக

ஜீவ நிலையில் சிறிது சிறிதாகத் தெரிவிப்பார்
ஆன்ம நிலையில் முழுமையாகத் தெரிவிப்பார்

ஜீவ நிலையில் நம் அறிவு அற்ப அறிவானதாக விளங்கும்
ஆன்ம நிலையில் அறிவு முழுமையாகையால் , அண்டங்களைக் கடந்து விளங்கும்

இதைத் தான் முதலில் எனக்கு அற்ப அறிவு இருந்தது – இப்பொழுது என்னறிவு அண்டங்களைக் கடந்து விளங்குகின்றது என்று கூறுகின்றார்.

மேற்கூறியவைகளைப் பார்க்கும் போது, பேருபதேசம் முழுமையுமே வள்ளலார் ஆன்ம நிலையைப் பற்றியும் , ஆன்ம அனுபவங்களைப் பற்றியுமே எடுத்துக் கூறி, அன்னிலைக்கு நம்மை அழைக்கின்றார்.

வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் சுருங்கக் கூற வேண்டும் என்றால்

1. ஜீவ நிலையிலிருந்து ஆன்ம நிலைக்கு ஏறு

2. ஆன்ம நிலையிலிருந்து சிவ நிலைக்கு ஏறு – சிவமாகவே மாறு – அவ்வளவே

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெரும் கருண
அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...