Wednesday, September 13, 2023

ஆவணி அமாவாசை பித்ருக்களை வணங்கினால் அற்புதம் நிகழும்..!

ஆவணி அமாவாசை 
பித்ருக்களை வணங்கினால் அற்புதம் நிகழும்..!

மாதந்தோறும் அமாவாசையின் போது, பித்ருக்களை நினைத்து அவர்களுக்கு ஆராதனைகள் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம். வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

பித்ரு தோஷம்
சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆவணி மாதம் என கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே தான் இம்மாதத்தை சிங்க மாதம் எனவும் அழைக்கின்றனர். ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க தினங்கள் வருகின்றன. அது போன்றே இம்மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அந்த வகையில் நாளை வருகின்ற ஆவணி மாத அமாவாசை தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் எத்தகையது என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அமாவாசையில் முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல்வேறு சிறப்புகளை பெறலாம். பித்ரு லோகத்தில் இருந்து ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள் அமாவாசையின் போது பூமிக்கு வருவதாக நம்பிக்கை உள்ளது. இந்தநாளில், முன்னோரை வழிபடவேண்டும். அவர்களின் அருளையும் ஆசியையும் பெறவேண்டும்.

நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

வழிபடும் முறை

ஆவணி மாத அமாவாசை தினமான இன்று , காலையிலேயே குளித்து முடித்து, விரதத்தை தொடங்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

மேலும் இந்த இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...