Tuesday, September 12, 2023

இந்து சனாதன சிறப்புகள்


இந்து சனாதன சிறப்புகள்
1.  உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை

*   மீனவர் ஆன வ்யாசரை மா முனிவர் என்றும் அவர் படைத்த மஹா பாரதத்தை சிறந்த வழிபாட்டு நூலாகப் போற்றிப் பேணுவது.

**  வேடுவர் ஆன வால்மீகியை பெருந்தவத்தவர் என்றும் அவர் அளித்த இராமாயணத்தை நெறிநூலாகக் கொள்வது.

*** க்ஷத்ரீயராம் விஸ்வாமித்ரரை குருவாகவும், அவர் அளித்த காயத்ரீ மந்திரத்தை தினமும் ஜெபிப்பது. 

2.  இறைவனுக்கு ஜாதி கிடையாது.

*  இடையனாம் கண்ணனின் கீதையை மதித்து ஒழுகுவது.

**  க்ஷத்ரீயரான இராமனின் பெயரை இடைவிடாது ஜெயிப்பது.

***  இறந்தவர் மேனி சாம்பலை மேனி முழுதும் பூசித் திரியும் சிவனாரை அம்மையப்பனாக வணங்குவது.

3. சாதி மதம் பாராது  நல்ல குணத்தவரை,  தொண்டர்களை வணங்குவது.

அறுபத்த  மூவரில், ஆழ்வார்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளவரே அந்தணர்கள். அறுபத்தி மூவரையும், ஆழ்வார்களையும் சாதி இன பாகுபாடின்றி ஒரு வரிசையில் ஆலயத்தில் வைத்து அவர்களை குருமார்களாக வணங்குவது.  ஒவ்வொருவருக்கும் குரு பூஜை செய்து பணிவது.

4.  அனைத்துயிரிலும் ஆண்டவன் இருக்கிறான்

பன்றியில் தொடங்கி  மாடு, ஆமை,  மீன், காளை, பசு,  மயில், எலி, ஆடு, குரங்கு வரை அனைத்துயிர்களிலும் ஆண்டவனைக் காண்பது.

5.  தாய், தந்தை,  ஆசிரியர், குருமார்களைத் தெய்வமாக வணங்குவது.

6. நதி, கடல், ஆகாயம், மரம், செடி போன்ற இயற்கை அம்சங்களை வணங்குவது.

7.  இராவணன் போன்றவர்கள் அந்தண குலத்தவர் ஆயினும் நன்னெறி தவறியதால் குணமில்லா அரக்கராக பாவிப்பது.

8.  இறையன்பு மிகுந்த மார்க்கண்டேயன், ப்ரஹ்லாதன் போன்றோரை அனைத்து பக்தர்களுக்கும், முனிவர்களுக்கும்
மேலாக, முதல்வர்களாக போற்றுவது.

9. வள்ளலார், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோரின் அருந்தமிழ் மலர்களை நாளும் பாராயணம் செய்வது. வறியோர்க்கு உதவுவது.   

10. தாயினும் பேரன்பு 
கொண்டு நம்மைப் பேணும் மாடுகளை,  காவல் காக்கும் நன்றி மிகுந்த நாய் போன்ற ஜீவன்களைப் பேணுவது. 

குணத்தளவே ஆகும் குலம், அன்பே சிவம் என்ற உயர்ந்த பண்பாட்டு முறையே சனாதனம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...