Tuesday, September 12, 2023

ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது

#விநாயகர்_சதுர்த்தி_ஸ்பெஷல் 
                  

விநாயகர் முழுமுதற் கடவுள். 

ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி, மோதகம், கொழுக்கட்டை, கரும்பு, விளாம்பழம் படையல் போட்டு அவரை வணங்குவோம். கணபதிக்கு படைக்கும் படையல் பொருட்களுக்கு என சில தத்துவங்கள் உள்ளன. 

நம் துன்பங்களை தும்பிக்கையில் ஊதி ஒன்றுமில்லா மல் செய்துவிடுவார் கணபதி. வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்தாலும் கணபதியை வணங்கிட அவற்றை களைந்து இனிப்பாக மாற்றிவிடுவார் என்பதை உணர்த்துகிறது நாம் அவருக்கு படைக்கும் நிவேதனங்கள்.

மோதகத்தை கையில் ஏந்தியிருப்பார் விநாயகர். மெத்து மெத்தென்று வென்மையாக இருக்கும் மோதகம் உள்ளே பூரணம் இருக்கும். வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கும் மோதகம் போல மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு கடிப்பதற்கு கடினமானாலும் அதன் சுவை இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அதே போல அவல், பொரி படையலின் தத்துவம், அவை இரண்டும் ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...