Friday, September 15, 2023

திருநீற்றின் பெருமையை உணர்த்த உயிர்த் தியாகம் செய்த ஏனாதி நாயனார்"

🌹ஏனாதிநாத நாயனார் - குருபூஜை நாள் : புரட்டாசி - உத்திராடம் 👉🏽 
"திருநீற்றின் பெருமையை உணர்த்த உயிர்த் தியாகம் செய்த ஏனாதி நாயனார்"

🌷அரசர்க்கு வாள் பயிற்றும் தொழில் செய்து அதனால்வரும் ஊதியத்தைச் சிவனடியார்க்கு ஆக்குவார். 

இவரைப்போலவே, வாள் பயிற்சி அளித்து வரும் அதிசூரன் என்பவருக்கு, ஏனாதிநாத நாயனாரால் வருமானம் இழப்பு ஏற்பட்டது. தன்னைவிட அதிக வருமானம் ஈட்டும் ஏனாதி நாதரை வென்றுவிட்டால், தனக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற பொறாமை குணம் குடியேறியது. இதனால் தன்னுடம் துணைக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டுச் சென்று ஏனாதிநாயனாரை போருக்கு அழைத்தார்.

போரிட்டு வெற்றிபெற முடியாமல், அதிசூரன் தோற்று ஓடினான்.

"ஈனமிகு வஞ்சனையால் வெல்வன்" என எண்ணினான் அதிசூரன்.

👉🏽"திருநீறிட்டார்க்கு எவ்விடத்தும் இவர் தீங்கு செய்யமாட்டார்" என்பதனை அவன் அறிந்தானாய், 

அதிசூரன், நெற்றி நிறைய திருநீறு அணிந்து கொண்டு, அதை தன்னுடைய கேடயத்தால் மறைத்துக்கொண்டு,அதிசூரன் வாளை வீச, போர் ஆரம்பித்தது.அதிசூரனின் தாக்குதலை தடுக்க முயன்ற போது, அதுவரை கேடயத்தால் மறைத்திருந்த திருநீற்றை ஏனாதிநாத நாயனார் பார்த்தார். 

🌼இதுவரை திருநீற்றை அணியாத அதிசூரன், இன்று திருநீற்றை அணிந்துள்ளார். சிவபெரு மானுடைய திருத்தொண்டராக ஆயினார் போலும், இனி இவர் குறிப்பின் வழிநிற்பேன் என நிச்சயித்துத் தமதுவாளும் பலகையும் போக்கக் கருதினார். 

பின்னர், நிராயுதரைக் கொன்றார் என்னும்பழி இவர்பாற் சாரலாகாதென்று எண்ணி அவற்றை யேந்திப் போர் செய்வார் போலக்காட்டி நேர் நின்றார். அந்தப் பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான். 

     💐சிவபெருமான் வெளிவந்து, பகைவன் கைவாளால் இவரது பாசமறுத்து,இவர்க்கு என்றும் பிரியாது உடனிருக்கும் அன்புநிலையினை அருளிச் செய்து எழுந்தருளினார். 

அவதாரத் தலம் & முக்தி தலம்: ஏனநல்லூர் ( எயினனூர் )

#இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர்
#இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கற்பகாம்பாள்

வழிபாடு : சங்கம வழிபாடு.

ஏனாதிநாத நாயனார் அதிசூரனுடன் போர் புரிந்த இடம் தற்போது ஏனநல்லூ (எயினனூர்)ரிலிருந்து மேற்கே சிறிது தொலைவில் உள்ள மேலத்தெருவாகும். போர் புரிந்த திடல் சிறுகச் சிறுகச் சுருங்கி தற்போது இல்லையெனும் அளவுக்கு உள்ளது

"ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்"   🌺 திருத்தொண்டத்தொகை
 படித்து வெளியிடும் 
இறை பணியில் இரா. இளங்கோவன்

No comments:

Post a Comment

Followers

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் : இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்...