Wednesday, January 25, 2023

சிவனை வழிபாட்டால் சோதனை துயரம் மட்டுமே வருமா?

சிவனை வழிபாட்டால் சோதனை துயரம் மட்டுமே வருமா?
இரண்டு உதாரணங்கள். தங்களுக்கு எது பிடித்தமானதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.
1. ஒருவரிடம் அவரின் பாட்டனார் காலத்திற்கும் முந்தைய தங்கக் காசு ஒன்று இருந்தது. அது தங்க காசு என்றே தெரியாத அளவிற்கு அழுக்கு ஏறி இருந்தது. அதன் விலைமதிப்புத் தெரியாமல் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார் அந்த உரிமையாளர். இதைக் கண்ட பொற்கொல்லர் ஒருவர் அந்த காசை அவரிடமிருந்து வாங்கி, தீயிலிட்டு உருக்கினார். அப்பொழுது அந்த உரிமையாளர், "ஐயோ! எனது காசு தீயில் எரிகிறதே" என்றாராம். சற்று நேரம் பொறுத்து, புடம்போட்ட தங்கம் ஜொலிக்கும் பொழுது அந்த உரிமையாளர் அதை தீயிலிட்ட காரணத்தை புரிந்து கொண்டாராம்.
📷
தங்கக்காசு - ஆன்மா
தீ - அதிலுள்ள மாசை அகற்றும் பொருட்டு இறைவன் நமக்களிக்கும் சில நிகழ்வுகள்
பொற்கொல்லர் - சிவபெருமான்
2. ஒருவன் விஷத்தை பருகிவிட்டான். அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். உடனே மருத்துவர் வேறொரு மருந்தை புகட்ட, விஷத்தை பருகியவன் வாந்தி எடுக்கத் தொடங்கினான். இதைக்கண்ட அவன் 'விஷத்தை அகற்ற மருந்து கேட்டால், இப்படி வாந்தி எடுக்கும் மருந்தைக் கொடுத்து எனது துன்பத்தை அதிகரிக்கிறீர்களே!' என்று கூறினானாம். முடிவில் விஷம் வெளியேறிய பின்னர், அதற்கான காரணத்தை புரிந்து கொண்டானாம்.
விஷம் - நமது வினைப்பயன்கள்
வாந்தி/அதை உருவாக்கும் மருந்து - இறைவன் நமக்களிக்கும் சில நிகழ்வுகள்
வைத்தியர் - சிவபெருமான் என்பதை சொல்லவும் வேண்டுமா?
சிவனை (எந்த கடவுளையும்) வழிபடும் முன்னரும் நமக்கு துன்பங்கள் இருந்திருக்கும். வழிபட்ட பின்னரும் கர்மா வினைகளால் அவை தொடரக்கூடும். ஆனால், உண்மையான பக்தி, மன அமைதியையும், துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், முடிவில் மாறா இன்பத்தையும் அளிக்கும்.
நமசிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...