திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் கோவில்
இறைவன் சுயம்பு லிங்கமாவார்.
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்.
ராகு கேது பரிகாரத் தலம்.
திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, நாகூர்
ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் இங்கு தரிசித்தாலே போதும்.
ராகுவும் கேதுவும் ஓருடலாக நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது.
விநாயகர் கைலாயத்தில் சிவபெருமானை வணங்கும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது.
இதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார்.
உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்தன.
சாப விமோசனம் வேண்டி சிவபெருமானை துதிக்க இறைவனும் பூவுலகில் திருப்பாம்புரம் தலத்தில் மஹாசிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.
அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் மஹாசிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும்,
இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும்,
மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரையும்,
நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
இத்தலத்தில் பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன.
ஆதிசேஷன் வழிபட்ட கோயிலாதலால் இன்றும் இக்கோயிலில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது
No comments:
Post a Comment