Sunday, July 16, 2023

● 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கின்ற ஒரு அபூர்வ நிகழ்வாகும்.

●● 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கின்ற ஒரு அபூர்வ நிகழ்வாகும். 
ஆடி மாதம் என்பது மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகப்படியாக குலதெய்வ வழிபாடும் அம்மன் கோவில் திருவிழாக்களும் பண்டிகைகளும் நடைபெறும்.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இருக்கும் காலம் தட்சணாயன காலமாகும்

இந்த காலகட்டத்தில் பலரும் புண்ணிய நதிகளில் நீராடி தெய்வங்களை தரிசிப்பது வழக்கம். இதன் மூலம் நிறைய நன்மைகளை பெற முடியும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக ஆடி மாதம் பீடை மாதம் என்று பலரும் கூறுவது வழக்கம். இது மிகவும் தவறான கருத்து.

பீடமாதம் என்பதுதான் காலப்போக்கில் மருவி பீடை மாதம் என்று பெயர் வாங்கியது. மனம் எனும் பீடத்தில் இறைவனை நிலை நிறுத்தி நன்மை பெற வேண்டும் என்பதை தான் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை பலரும் தவறாக புரிந்து கொண்டு ஆடி மாதம் பீடை மாதம் என்று கூறி வருகின்றனர். இந்த வருட ஆடி மாதத்தில் ஒரு சிறப்பான நிகழ்வு நடக்க இருக்கிறது. அதாவது ஒரே ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வர உள்ளன.

இவ்வாறு, ஒரே மாதத்தில் இரு அமாவாசை மற்றும் பௌர்ணமி வருவது 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கின்ற ஒரு அபூர்வ நிகழ்வாகும். வரும் ஜூலை 17ஆம் தேதி ஆடி அமாவாசை நிகழ உள்ளது. அதுபோல ஆகஸ்ட் 16ஆம் தேதி இரண்டாவது அமாவாசை வருகின்றது.

ஆடி அமாவாசை ஆனது மற்ற மாதங்களில் வருகின்ற அமாவாசைகளை விட மிகவும் சிறப்பானது. இந்த ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பித்ரு பூஜை செய்வது வழக்கம்.

வருடத்திற்கு ஒருமுறை பித்ரு பூஜை மேற்கொள்வது வருடம் முழுவதும் முன்னோர்களை வணங்கும் போது ஏற்படும் நன்மைகளுக்கு ஈடானதாகும். இந்த வருடத்தில் இரு அமாவாசை வருவதால் எந்த அமாவாசையில் பித்ரு பூஜை செய்வது என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது வரும் அமாவாசையில் திதி கொடுப்பது நல்லது என்று ஆன்மீகவாதிகள் தெரிவிக்கின்றனர். ஜூலை 17 ஏற்படும் முதல் அமாவாசை சூனிய திதியில் வருவதாகவும் அந்த நாளில் திதி கொடுத்து முன்னோர்களை வழிபடுவது சரியானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.

●எனவே ஆடி 31ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்தில் வரும் அமாவாசை விரதம் இருந்து பூஜை செய்ய சிறப்பான நாள் என்று கூறப்படுகிறது. இது பெரிய அமாவாசை என்பதால் இந்த நாளில் பித்ரு பூஜை செய்வது சிறப்பானதாகும்.

வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...