Friday, July 14, 2023

சிவனை தரிசனம் செய்ய உகந்த காலம் எது...?*

*சிவனை தரிசனம் செய்ய உகந்த காலம் எது...?*
*சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர். பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர்.*

அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை. பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்;

சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; *பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.*

பிரதோஷ காலத்தில் சிவன் கோவில் வழியாகப் போனான் ஒருவன். போகும் போது வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே போனான்.  

வெற்றிலை பாக்கு போட்ட பிறகு, விரலில் கொஞ்சம் சுண்ணாம்பு இருந்தது. அதை வழியிலிருந்த சிவன் கோவில் சுவரில் தடவி விட்டுப் போனான். ஆனால், அதுவே பெரும் புண்ணியமாகி விட்டது. இவன் தடவிய சுண்ணாம்பு, மதில் சுவரில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை அடைத்து விட்டது.

உடனே, சிவன் கோவிலில், கைங்கரியம் செய்த புண்ணியம் இவனுக்கு சேர்ந்து விட்டது. இப்படியாக சிவ கைங்கர்யம், வழிபாடு எல்லாவற்றுக்குமே புண்ணியம் சொல்லப்படுகிறது.

சிவன் கோவிலில், “சோம சூத்ர பிரதட்சணம்’ என்று ஒன்று உண்டு. இது, கொஞ்சம் சிக்கலானது. புரிந்து கொள்வது கூட சிரமம்; புரிந்து செய்தால் புண்ணியம். *பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது புண்ணியம்.*

*நாளை_துன்பம்_போக்கும் சனி_மஹா_பிரதோஷம்.*
☘☘☘☘☘☘☘☘
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று
சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம்
மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
*சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி மஹா பிரதோஷம்.*
இன்று ஈஸ்வரனையும்,
சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
*இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று . “ஓம் ஆம் ஹவும் சவும் ” என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.*
எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபித்து வந்தால் தகுந்த பலன் கிடைக்கும். .
ஆகவே, சனிப்பிரதோஷ தினமான இன்றைய நாளில் சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
சொல்லப்போனால், ஈசனை வணங்குவதற்காக அப்படியான நாட்களாக இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!
*சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள். சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்..*

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...