Thursday, September 14, 2023

அருணாசலத்தை வலம் வாருங்கள்அருணாசலத்தை வலம் வருவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.v

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய 
அருணாசலத்தை வலம் வாருங்கள்

அருணாசலத்தை வலம் வருவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.

நீராடிவிட்டு மடித் துணியுடுத்தி, விபூதி, ருத்ராட்சம் அணிந்து, உள்ளத்தில் சிவ நாமம் விளங்க, உதட்டில் பஞ்சாட்சரம் துலங்க, நிறைமாத கர்ப்பிணிகள் போல் மெள்ள நடந்து செல்ல வேண்டும்.

கைகளை வீசி நடக்கக் கூடாது. ஏனெனில், அருவமாக வலம் வந்து கொண்டிருக்கும் தேவர்களுக்கும் சித்தர்களுக்கும் அது இடைஞ்சலாக இருக்குமாம்.

குடை பிடித்துக்கொண்டோ கால்களில் மிதியடி அணிந்துகொண்டோ நடக்கக்கூடாது.

வாகனங்களில் செல்லவும் கூடாது.

கிரிவலம் பற்றி அருணாசல புராணம் :

அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும்.

அது மட்டுமா ? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும்.

இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும்.

மூன்றடியில் தான பலன்,

நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.

வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும்.
இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும்.
மூன்றடிக்கு கோயில் கட்டிய பேறு கிடைக்கும்.

அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும்.

மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நாலாவித பாவங்களும் காணாதொழியும்.

பாதத்துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும் என கிரிவலத்தின் மகிமையை பலவாறு கூறுகிறது அருணாச்சல புராணம்.*

ஞாயிறு அன்று வலம் வந்தால் சூரிய மண்டலத்தைப் பிளந்து சிவபதம் அடையலாம்.
திங்கள் அன்று வலம் வந்தால் ஏழு உலகங்களையும் ஆளலாம்.
செவ்வாய் அன்று வலம் வந்தால் கடனையும் தரித்திரத்தையும் தொலைத்து பிறவிப்பிணி நீங்கப்பெறலாம்.
புதன் அன்று வலம் வந்தால் சகல கலைகளும் தெரிந்த தேவர்களாகலாம்.
வியாழன் அன்று வலம் வருவதல், முனிவர்களுக்கும் மேலான பதவியை அடையலாம்.
வெள்ளி அன்று வலம் வந்தால் விஷ்ணுபதமும்
சனி அன்று வலம் வந்தால் நவகிரகங்களின் அருளும் கிடைக்கும்.

அருணாசலத்தை வலம் வந்தவர்கள் கயிலாயத்துக்குள் நுழையும்போது, சந்திரன் வெள்ளைக்குடை பிடிப்பான்.
சூரியன் தன் கைகளில் விளக்கேந்தி வருவான்.
தர்ம தேவதை கைலாகு கொடுப்பாள்.
இந்திரன் மலர்களைத் தூவுவான்.
குபேரன் தண்டனிடுவான்

என்கின்றன புராணங்கள்.

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...