Tuesday, September 5, 2023

"சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை

_"சிவலிங்கத்தின் சூட்சுமம்
அண்டத்தில் உள்ள அனைத்திலும் இறைவன் இருந்தாலும் நாம் சில குறிப்பிட்ட வடிவங்களில் மட்டுமே இறைவனை வணங்கி வருகிறோம். இதிலும் முக்கியமாக சிவலிங்க வடிவம் அதிக அளவில் வழிபடப்படும் பொருளாக உள்ளது. சிவலிங்கத்தின் மேற்புறம் உள்ள கூம்பு வடிவம் சிவமாகவும் நடுப்பகுதியான ஆவுடை விஷ்ணுவாகவும் ஆவுடையைக்கு கீழ்ப்பகுதி பிரம்மா என்றும் சங்க காலத்திற்கு பின் வந்த மதவாதிகளால் உவமை படுத்தப்பட்டுள்ளன. ஆக இதுவரையிலும் மூன்று தெய்வங்களை உள்ளடக்கியது சிவலிங்கம் என்று கூறியுள்ளனர். இதில் சிவம் தனித்து இருப்பது எங்கு? இம் மூன்று தெய்வங்களையும் ஒருசேர வணங்குவது தான் சிவபலிபாடா? இன்னும் சில சமயவாதிகள் சிவலிங்கம் என்பது ஆண் மற்றும் பெண் குறிகள் இணைந்த வடிவமே சிவலிங்க வடிவம் என்று அறியாமையால் கூறி வருகின்றனர். முதலில் இறைவன் (கடவுள்) என்றால் என்ன? தெய்வங்கள் என்றால் என்ன? இதில் உள்ள வேறுபாடு முதலில் அறிந்து கொள்வோம்.

இறைவன் (கடவுள்):
ஒட்டுமொத்த அண்டத்தில் உள்ள ஜடப்பொருள் மற்றும் உயிர் பொருள் அனைத்திலும் சதாசர்வ காலமும் ஓம் என்று இறைந்து கொண்டே இருக்கும் ஒரு மாபெரும் சக்தியை இறைவன் என்பது. இது இறப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை. பிறப்பு இறப்பு அற்ற நிலையில் ஆனால் பிறப்பிற்கும் இறப்பிற்கும் காரணமாக இருந்து அனைத்திலும் சதாசர்வ காலமும் இறைந்து கொண்டே இருப்பதாலும் இதற்கு இறைவன் என்றே பெயர். பரம் என்பது வெட்டவெளி என பொருள்.  பொருள் என்பது இவ்வெட்ட வெளியில் உள்ள ஜடப் பொருள்கள் மற்றும் உயிர் பொருள்கள் என அனைத்திலும் இச்சக்தியே நிறைந்துள்ளதால் இது பரம்பொருள் எனவும் சிவம் எனவும் அழைக்கப்படுகிறது. 

விஞ்ஞானம் கண்டறிந்த அணுவின் தன்மையில் ஈதர் என்னும் ஆகப்பூர்வமான சக்தி பிரபஞ்சம் எங்கும் அணு துகள்களாக நிறைந்துள்ளது என்பதை    E=(MC)2. என்ற கோட்பாடால் தெளிவு படுத்துகிறது.E-energy என்பது மகாசக்தி எனவும், M-matter  என்பது காரியம் எனவும், C-cause என்பது காரணம் என்றும், square என்பது இவ்வணுத்துகளின் பெருக்கத்தையும் குறிப்பிடுகிறது. இதையே நம் ஆதி மெய்ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஈதர் என்பதை ஈசன் என்றும் இவ்ஈசனே காரணம் பொருளாகவும் காரிய பொருளாகவும் அண்டமெங்கும் நீக்கமற்ற நிறைந்துள்ளான் என்று கூறியுள்ளனர்.

"சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை 
புவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரையானே" 
(திருமூலர் திருமந்திரம்)

பொருள்: சிவ பரம்பொருளை போன்ற ஒரு கடவுளை எங்கு தேடினாலும் காண இயலாது. இப்பபரம்பொருளின் தன்மையை ஒத்த இறை பண்புடையவர் வேறு எவருமில்லை. உலகின் எல்லைகளை எல்லாம் கடந்து அகிலத்திற்கும் அண்டத்திற்கும் அப்பாலும் பொன்னொளி வீசித் திகழும் நெருப்புச் (தவனம்) சுடர் போல மின்னும் அவர் பாதம்.

சிவம் என்பது ஒட்டுமொத்த அண்டத்தையும் உள்ளடக்கிய ஒரு நிலை சிவத்திற்கு மேலான நிலை என்று ஒன்றும் இல்லை. முதலும் முடிவும் அவன் ஒருவனே. இப்படி அண்டசராசரங்களை இயக்கும் ஒரு மாபெரும் ஆற்றல். பூமியில் இதன் ஆற்றல் எவ்வாறு செயல்படுகிறது என்ற சூட்சும இயக்கமே சிவலிங்க வடிவம். இயக்குவது சிவம் இயங்குவது சக்தி.

சிவலிங்க வடிவ சூட்சுமம்: நாம் வாழும் சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களில் இருக்கும் அணு துகள்கள் ஆகாயத்தில் கடல் போல் பறந்து விரிந்து வந்தாலும் பூமியின் மேல் படந்துள்ள ஓசோன் படலத்தை கடக்கும் போது ஒரு கூம்பின் வடிவம் போல் செங்குத்தாக பூமியின் மேற்பரப்பில் படர்கிறது. உதாரணமாக: ஒரு அணைக்கட்டில் பரவலாக விரிந்திருக்கும் நீரை ஒரு மதகுவழியே திறந்தாள் எப்படி அந்த மதகின் இடைவெளியை பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவு நீர் வெளியேறுகிறதோ அதைப்போன்று கடல் போல பறந்து விரிந்து வரும் அணுத்துகள்கள் ஒரு கிரகத்திற்குள் (பூமி) நுழையும் போது ஓசோன் படலத்தால் தீங்கு விளைவிக்கும் புறா ஊதா கதிர்கள் தடுக்கப்பட்டு மீதமுள்ள அணு துகள்கள் கூம்பு போன்ற வடிவத்தில் பூமியை வந்தடைகின்றன. இந்த செயல்பாட்டை உணர்த்துவது லிங்கத்தின் மேற்புறம் அமைந்துள்ள கூம்பு வடிவம். இப்படி பூமியின் மேற்பரப்பில் படரும் அணுத்துகள்கள் பூமியின் உட்புறத்திற்கு சென்று அங்கு மண்ணில் உள்ள தனிமங்களின் சத்துவங்களை ஈர்க்கத் தொடங்குகின்றன. எப்படி பூமிக்கு மேல் காற்று சுழற்ச்சியாக இருக்கிறதோ இதைப் போல் பூமியின் மண்ணுக்குள் வெப்பம் சுழற்ச்சியாக இருக்கும் இந்த வெப்ப சுழற்ச்சியே மண்ணுக்குள் இருக்கும் நீரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துகிறது. இப்படி தனிமங்களின் ஆற்றல்களை ஈர்க்க துவங்கும் அணு துகள்கள் இந்த வெப்ப சுழற்சியில் இணைந்து சுழல ஆரம்பிக்கும். இந்தத் தொடர் சுழற்சியில் ஒரே மாதிரியான தனிமங்களை ஈர்க்கும் அணுத்துகள்கள் ஒன்றை ஒன்று எதிரெதிராக சந்திக்கும் போது ஒன்றை ஒன்று இணைத்துக்கொள்கிறது. இந்நிகழ்வு நடந்ததும் இவ் அணுக்கள் ஜீவாத்மாவாகும் நிலையை பெறுகின்றன. இவ்வணுத்துகள்கள் எந்தெந்த தனிமத்தின் ஆற்றல்களை எந்த அளவு தன்னுள் ஈர்த்துக் கொள்கிறதோ அதை பொறுத்து உயிரினங்கள் உருவம் மாறுபடுகிறது. உதாரணமாக: அணுக்கள் என்ற தலைப்பில் கொடுத்துள்ள 58 வகையான தனிமங்களில் குறிப்பிட்ட அளவு ஆற்றலை ஈர்க்கும் அணுக்கள் மனித உடலான பிறப்பு எடுக்கிறது. இதுபோல் 58 தனிமங்களுக்கு குறைவான அல்லது அதிகமான தனிமங்களை குறிப்பிட்ட அளவுகளில் ஈர்க்கும் அணுக்கள் வெவ்வேறு வகை உயிரினங்களாக பிறக்கின்றனர். இந்த பிறப்பிற்கான செயல்பாடு அனைத்தும் மண்ணுக்குள் நடப்பதை உணர்த்துவது இலிங்கத்தின் அடிப்பாகம்.

இப்படி உயிர் உடல் எடுத்ததும் அவ்வுடல்  வாழ்வதற்குமான தகவல்களை அகாரமாக (சிவம உள்ள புரோட்டான் அணு புரதத்தின் மூலம் தகவல்களை கடத்தி அத்தகவல்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு விஷ்ணுவாகவும் இத்தகவல்களின் படி இயக்கும் இயக்கத்தை சக்தியாகவும் உருவகப்படுத்தி உள்ளனர். இந்த உவமையின் காரணமாக விஷ்ணுவின் தங்கை சக்தி என்றும் சக்தி இல்லையேல் சிவமில்லை என்றும் அதாவது சிவமாகிய (அகாரம்) புரோட்டான் அணுவில் உள்ள தகவல்களை எலக்ட்ரான் (உகாரம்) அணுக்கள் இயக்கி வெளிப்படுத்துவதால் தான் சிவம் என்ற ஒன்று இருப்பது உணரப்படுகிறது. ஆகையால் தான் சக்தி இல்லையேல் சிவமில்லை என்று கூறப்பட்டது. பிரபஞ்சத்தில் இருக்கும் 95% மறை ஆற்றலும் விஷ்ணுவாக சித்தரிக்கப்பட்டதும் இந்த மேற்கண்ட இயக்கத்தை வைத்து கூறப்பட்டுள்ளது.

இந்த அடிபாகத்தை சிறிது மண்ணுக்குள் இருக்கும் படியே அமைத்திருப்பார்கள். இந்த படைப்பிற்கு தேவையான காரியங்கள் அனைத்தும் மண்ணுக்குள் நடந்து முடிந்ததும் இவற்றில் உள்ள அணுக்கள் மண்ணில் விளையும் தாவரங்களாகி. இத்தாவரங்களை உட்கொள்ளும் உயிரினங்களின் உயிர் (செல்கள்) வளர்ச்சிக்கு உதவுகிறது. பல லட்ச வருடங்களாக இத்தொடர் பரிணாம செயல்பாடு நடந்து உயிரினத்தின் உச்சமாக மனிதன் பிறக்கிறான். அதாவது பூமியின் மேற்பரப்பில் பிறப்பெடுக்கிறது. இதை உணர்த்தவே  இலிங்கத்தின் நடுப்பகுதியில் லிங்கத்தின் வடக்கு பாகத்தில் வாய் அமைக்கப்பட்டு பிறப்பிற்கான இடமாக உணர்த்தப்படுகிறது. ஒட்டுமொத்த பூமியின் வடக்கு பகுதி பணி பிரதேசம் அதாவது நீர் பகுதி உயிர்கள் முதலில் நீரில் உருவானதை உணர்த்த இந்த நீர் இருக்கும் பகுதியை நோக்கி லிங்கத்தின் வாய் வெளிப்படுவது) அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் பூமியின் தெற்கு பகுதி வெப்பமானது வெப்பத்தால் சிவன் அளித்தல் தொழிலை செய்கிறார் என்பதால், இறந்த உடல்களை புதைக்கும் இடுகாடு அந்தந்த ஊரின் தெற்குப் பகுதியில் பழங்காலத்தில் அமைக்கப்பட்டது. இன்று ஊரின் நாகரீகம் என்ற பெயரில் இது சில ஊர்களில் மாறி இருக்கிறது. இதுவே சிவனின் படைப்பாற்றல் இதை மக்களுக்கு எளிமையாக உணர்த்தும் பொருட்டு இந்த இயக்கத்தை சிவலிங்கமாக ஊமைப்படுத்தி உள்ளனர்.

"தானே தனக்குத் தகுநட்டந் தானாகுந்
  தானே அகார உகாரம தாய்நிற்குந் 
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் 
தானே உலகில் தனிநடம் தானே" 
       (திருமந்திரம்)

தானே தனக்கு தலைவனாக தானாகவே தோன்றிய பரம்பொருள் தானே தன்னில் இருந்து அகார, உகார, மகார, சக்தியை வெளிப்படுத்தி தான் வேறாக அதாவது ஓங்கார தத்துவமான ஓம் ரீங்காரத் தத்துவமாக தனித்து இருக்கும். தானே ஐந்தொழில் புரியும் ஆற்றலாகவும் உலக ஒடுக்கத்தின் ஊழித் தாண்டவ மூர்த்தியாகவும் விளங்குவான் என்று திருமூலர் கூறுகிறார்.

நாம் வாழும் பூமியில் உயிர்களை உருவாக்கி (பூமியில் மட்டுமே உயிரினங்கள் உள்ளன) அவற்றை காத்தல், மற்றும் அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் பூமியில் இயக்கும் சூட்சும வடிவமே சிவலிங்க வடிவம். இது புற வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்டது. இதே இயக்கத்தை அகத்தில் உணர்ந்தால் அது ஆத்ம லிங்கம் வழிபாடு.

"ஆதியோடு அந்தம் இலாத பராபரம் 
போதம தாகப் புணரும் பராபரை 
சோதி அதனில் பரந்தோன்றத் தோன்றுமாம் 
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே"
(திருமூலர் திருமந்திரம்)

ஆதியும் அந்தமும் இல்லாமல் எதிலும் என்றும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் பரம் என்பது வெட்ட வெளியாகவும் பொருள் என்பது அவ்வெட்ட வெளியில் உள்ள அனைத்து பொருள்களாகவும் இவை அனைத்தும் அணுக்களால் நிறைந்திருப்பதையே பரம்பொருள் என்கிறோம். இப்படி இருக்கும் அந்த பரம் பொருள் (அணு) அதாவது அணுக்களில் இருந்து உருவான ஆற்றல் மூலம் (சக்தி) பெரும் வெடிப்பு (ஒலி, ஜோதி) உருவாகி அந்த ஒளியிலிருந்து அண்டங்கள் உருவாவதும் மற்றும் அண்டங்கள் ஒளியில் ஒடுங்கும்போது அழிந்தும் மீண்டும் ஒளியில் தோன்றும் படி விளங்குவது நாதமே (ஒலி). இதுவே படத்தின் முதல் படியாக உள்ளது.

சிவாலயங்களில் சிவலிங்கத்தின் மேல் ஒரு வெண்கல செம்பில் நீரை நிரப்பி அந்நீர் துளி துளியாக சிவலிங்கத்தின் மேல் விழும்படி (தாரா பாத்திரம்) கட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். இது எதற்காக என்பதை பார்ப்போம். ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் சூரியனை வைத்து நேரத்தை கணக்கிட்டனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. பணி மற்றும் மழைக்காலங்களில் பகலில் சூரியன் தெளிவாக தெரியாத போது நீரைக் கொண்டு நேரத்தை கணக்கிடும் முறையினை கையாண்டனர். அதாவது வட்டு என்ற ஒரு பொருளில் (வட்டமான தட்டு போன்ற அமைப்பு இதை கற்களிலும், உலோகத்திலும் அமைத்திருந்தனர்) சிறு கோடுகள் போட்டு அதை சிறு சிறு கட்டங்களாக அமைத்து அதை கீழே வைத்து அதன் மேலே வெண்கலத்தால் ஆன (ஆதி காலத்தில் வெண்கலம் அதிக புழக்கத்தில் இருந்தது) செம்பில் நீரை நிரப்பி இந்நீர் துளி துளியாக அந்த வட்டில் விழும்படி அமைத்திருந்தனர். இதை சராசரியாக சூரியன் உதிக்கும் நேரத்தில் (காலை) வைத்து அந்த வட்டுவில் எத்தனை துளி நீர் நிறைந்துள்ளது என்று கணக்கிடுவார். ஒரு நொடிக்கு ஒரு துளி என்ற விதத்தில் அந்த செம்பில் இருந்து நீர் வெளியேறும். வட்டுவில் 10 துளி நீருக்கு ஒரு கட்டம் என்ற கணக்கில் இருக்கும் ஆக இந்த வட்டுவில் எத்தனை கட்டங்கள் நீர் நிறைந்துள்ளதோ சூரிய உதயத்திலிருந்து இத்தனை நொடிகள் என்று எளிமையாக காலத்தை கணக்கிட்டனர். சிவன் என்பது காலத்தை நடத்தி கொண்டிருப்பவர் அல்லது கணக்கிடுபவர். கால புருஷர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அமைப்பு அப்படியே சிவலிங்கத்திற்கு கொடுக்கப்பட்டது.

உயிரினங்கள் எப்படி உயிர் வாழ்கின்றன என்பதை குறிக்கும் பொருட்டு இதை நம் மெய்ஞானிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பேச்சு வழக்கப்படி (‌‌நம்அச்சு ஆய ) என்று குறிப்பிட்டனர். உதாரணமாக ஆதி காலங்களில் வாகனம் என்றால் மாட்டுவண்டி தான் வாகனம் என்றால் மாட்டு வண்டி தான் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஒரு மாட்டு வண்டி நிலத்தில் கவிழாமல் ஓடுவதற்கு (இரண்டு சக்கரங்கள்) இருக்கும்.  இச்சக்கரங்கள் கவிழாமல் இருக்க சக்கரத்தையும் வண்டியையும் இணைத்து ஒரு அச்சு இருக்கும் அதாவது (அச்சாணி) வண்டியை இயக்க பயன்பட்டிருக்கும். அதுபோல் பூமியின் மேற்பரப்பான நிலத்தில் வாழும் ஒரு மனிதன் கவிழ்ந்து விடாமல் ( இறந்து விடாமல்) இருக்க இரு நாசிகள் இடங்களைப் பின்களை சுவாசம் இரண்டு சக்கரங்கள் போல் இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை உள்ளெழுத்து மற்றும் வெளியிட்டு நம் உடலையும் சுவாசத்தையும் இணைத்து ஓட வைக்கும் ஒரு அச்சு தான் உயிர் அதாவது நம் உள்ளிருந்து இயக்கும் இறைவன் எப்படி ஒரு மாட்டு வண்டியின் அச்சாணி துணை இல்லாமல் வண்டி ஓடாதோ அதுபோல் நம் உள்ளிருக்கும் இந்த அச்சு ஆகிய ஜீவன் (சிவன்) இல்லையேல் மனித உடலும் ஓடாமல் கவிழ்ந்து விடும். இறந்துவிடும் என்பதை உணர்த்தும் பொருட்டு (நம் அச்சு ஆய) என்று உவமையாக கூறியுள்ளனர். அதாவது நம்மை இயக்கும் சுழல வைக்கும் ( நம் அச்சு ஆய) என்பது நமக்குள் இருக்கிறது என்று பொருள் நம்மை இயக்கும் சக்தி நமக்குள் இருந்து செயல்படுகிறது என்பதை நம்முள் இறைவன் இருந்து இயக்குகிறான் என்பதை நமது ஆதி தமிழ் மொழி பேச்சு வழக்கம் மூலமாக வழக்கமாக சிறிது சிறிதாக மாற்றமடைந்து நமது ஞானிகளால் இது மந்திரமாக உருமாறியது (ஓம் நமச்சிவாய ) ஓம் எனும் இறைவன் நமச்சிவாயமாக மந்திர பரிணாமம் ஆனார். 
ஆதிகாலத்தில் மனித இனம் பஞ்சபூதங்களை அரூபமாக வழிபட்டார்கள். பின்பு வேத காலத்தில் இவற்றை எல்லாம் ஒரு நெறிப்படுத்தி பக்தி வழிபாட்டிற்காக உருவங்களையும் மந்திரங்களையும் முறைப்படுத்தி இவ் வழிபாட்டு முறைகளை அடுத்தடுத்த பரிணாமங்களுக்கு எடுத்துச் சென்று உலகறையே செய்து அதன் மூலம் பக்தியையும் வளர்த்தனர்.

ஆறஎழஉத் தோதும் அறிவார் அறிகிலார்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள் வேறெழுத் தின்றி விளம்ப வல்லார்கட்கு ஓரெழுத் தாலே உயிர் பெறலாமே..
( திருமூலர் திருமந்திரம்)

ஓம் நமசிவாய எனும் ஆறு எழுத்து ஓதுகின்ற அறிவுடையவர்கள் ஓர் உண்மையை உணராது இருக்கிறார்கள் இந்த ஆறு எழுத்தையும் ஓம் என்று ஓர் எழுத்தாக உச்சரிக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை பிரணவமான ( இறைவனான ) ஓம் என்னும் மந்திரம் உடன் வேறு எழுத்துக்களை சேர்க்காமல் ஓம் பிரணவ தியானத்தில் ஒன்றி இருப்பவர்கள் உயிர் விளக்கமுற பெறுவார்கள் என்று திருமூலர் கூறுகிறார்.

பாடல் பொருள்....
அண்டமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவ பரம்பொருளின் இருப்பிடம் என்று கைலாய மலையை கூறியதும் சூட்சமமே அண்டமெங்கும் நிறைந்திருக்கும் சிவத்திற்கு தனியாக இருப்பிடம் என்று ஏதுமில்லாத போது மனிதன் அதற்கு இருப்பிடத்தை நிர்ணயிக்க முடியுமா?. கைலாயத்தின் தோற்றம் எப்படி இருக்கும் கைலாய மலை முழுவதும் பணி படர்ந்து பார்ப்பதற்கு படிக்க நேரத்தில் காட்சியளிக்கும் மனித இனத்தின் படைப்பு என்பது ஒரு ஆணின் விந்து மூலமே உருவாகிறது இந்த விந்துவின் நிறம் படிக நிறத்தில் கைலாய மலையின் நிறத்திலேயே அமைந்துள்ளது இந்த விந்துவில் உள்ள சிவத்தை உணர்ந்து தன் மூச்சால் ஊதி மேலே ஏற்றி அதாவது குண்டலினி சக்தி மேல் ஏற்றி இரு புருவ மத்தியில் கொண்டு செல்லும்போது அங்கு சிவ சக்தியாக காட்சி கிடைப்பதை உணர்ந்து சிவனின் இருப்பிடம் கைலாய மலை மனிதனின் புருவ மத்தி என்பது சிகரம் அதாவது மலை அதாவது நமது தலை ப்பகுதி மனித உடலின் சிகரம் அங்கு உள்ள மனித மூளையின் நிறமும் படிக நேரத்தில் இருப்பதை இங்கு நினைவு கூறுகிறேன் இதைத்தான் சித்தர்கள் சூட்சமமாக உணர்த்தியுள்ளார்கள்.

ஆடுகின்ற எம்பெருமானை அங்கு மெங்கும் என்று நீர் தேடுகின்ற பாவிகாள் தெளிந்த தொன்றை ஓர்கிலீர் காடு நாடு வீடு விண் கலந்து நின்ற கள்வனை நாடியோடி உம்முளே நயந்துணர்ந்து பாடுமே...
( சிவவாக்கியம் சிவவாக்கியர்)

சிவ வழிபாட்டின் போது சங்கு நாதம் ஓதுவதும் சூட்சமமே
அதாவது சங்கை ஊதுவது என்பது பகத்தில் சங்கின் காற்றை நன்றாக இழுத்து ஆசனவாயை மூடி அடி வயிற்றில் இருந்து மூச்சை மேல் நோக்கி ஊதும் போது நமது தொண்டைக் குழியை அதாவது தொண்டைக் குழியை சங்கு என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம் அந்த பகுதியை காற்று கடந்து சங்கின் நாதமாக புருவமத்திக்கு கொண்டு செல்லும்போது அங்கு சிவம் வெளிப்படும் என்று சூட்சுமமாக கூறப்பட்டது அகத்தில் இறைவனை காண்பதற்கு உவமையாக கூறப்பட்ட உதாரணங்களை வைத்து புறத்தில் வணங்கிக் கொண்டிருக்கிறோம் இது அனைத்தும் புற வழிபாட்டில் உள்ள சூட்சும ரகசியங்களை தெரிந்து கொள்ளத்தான் என்பதை நாம் உணர வேண்டும் இது உணர்ந்தாள் நம் இந்துக்கள் வழிபாட்டு ரகசியங்கள் ஒவ்வொன்றாக நமக்கு வெளிப்பட்டு தெளிவு கிடைக்கும்.

எது சிவ வழிபாடு என்று திருவள்ளுவர் கூறும் பாடல்...

வாசிக்கு திரைமேலேறிக் கேசரத்தின் வழியோடே சென்றுச் சுழியறியாமலும் வேசிக்குளாசை விரகத்துடனேயான் வெறும் பூசைமணியாட்டி வீணுக்கேயான் ஆசித்து சற்குரு தெய்வமிதுவென்று அர்ச்சித்து ஆத்துமந் தன்னையறியாமல் நேசித்துப் பூசை நிஷ்டையறியாமலும் நின்றே நிமித்தமாய்க் கண்டுருச்செய்தேன்யான் பூசை...
(திருவள்ளுவரின் ...ஞானவெட்டியான் நூல்)

திருவள்ளுவர் தான் செய்த சிவ பூஜை பற்றி கூறுகையில் மூச்சு என்கின்ற குதிரையின் மேரி கேசார மார்க்கமாக சென்று சுழிமுனையை அறியாமல் வேசியர் விரகத்துட் சிக்கி வெறும் பூசை மணியை ஆட்டி வீணுக்குருவும் தெய்வமும் இதுவே என்று அர்ச்சனை செய்து நிஷ்டையை உணராமல் குருட்டு பூசை செய்தேன் என்று தனது ஞானவெட்டியான் நூலில் மேற்கண்ட பாடல் மூலம் கூறுகிறார்..

(சிவத்தில் சிதைதல் நூலிலிருந்து)
ஓம் நமசிவாய சம்போ மகாதேவா

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...