Monday, December 18, 2023

சுதர்சனம் பொருள் என்ன ?விஷ்ணுவின் சக்கரத்தை "சுதர்சனம்' என்பர்.

_சுதர்சன சக்கரம்..!_

சுதர்சனம் பொருள் என்ன ?
விஷ்ணுவின் சக்கரத்தை "சுதர்சனம்' என்பர். இதற்கு "நல்ல காட்சி' என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும் (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருப்பது இதன் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும். தலையில் அக்னி கிரீடம் தாங்கி, பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார்.

சுதர்சன சக்கரம்..!

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் `சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.

சாதாரணமாக `சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால். விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன் இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை `ரன்ஸகதி' என்பர். சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய உருவம்/வடிவம் எத்தகையது என்றால்.சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

மன நோய்கள் நீங்க ஓர்  மாமருந்து: "சூலம்" என்று ஒரு வகை  யோக நேரம் உண்டு.  பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருக்கும் அந்த நேரத்தில்  ஸ்ரீ சுதர்சனர் /ஸ்ரீ சக்ரதாழ்வார்  சன்னதிகளில்  குறைந்தது  108 முறை  ஸ்ரீ சுதர்ஷன காயத்ரி ஜெபித்து, தேன்குழல் பலகாரம்  பிரசாதமாக படைத்து  தானம்  செய்துவந்தால் எத்தகைய மனநோயால் பதிக்கபட்டோரும்  வேதனை நீங்கி விரைவில் குணம் பெறுவர். ஸ்ரீ சுதர்ஷன காயத்ரி: " ஒம் தத்  புருஷாய   வித்மஹே  ஜ்வாலாசக்ராய  தீமஹி  தந்நோ  சுதர்ஷன  ப்ரசோதயாத்"

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

சிவபெருமான் சுயம்பு வடிவமாகவும், சிவலிங்க வடிவமாகவும் நமக்கு காட்சியளிக்கிறார்....

கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவின் மிக உயர்ந்த சிகரம் (1615 மீ) மேல்முடி. ஒரு நாள் மலையேற்றத்திற்கு ஒரு நல்ல இடம்.  புரட்டாசி மாதத்...