Sunday, December 17, 2023

திருவாண்டார்கோயில்_பஞ்சநதீசுவரர்_கோயில்

#திருவாண்டார்கோயில்_பஞ்சநதீசுவரர்_கோயில் 
🌺 புதுச்சேரி அருகே விழுப்புரம்-பாண்டிச்சேரி பேருந்து சாலையில் கோலியனூர், வளவனூரை அடுத்து   சிறிது தூரத்தில்  ஆண்டார் கோயில் என்றும், திருவாண்டார் கோயில் என்ற ஊரில் உள்ள இக்கோயில் தற்போது பஞ்சநதீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பபடுகிறது. இக்கோயில் சம்பந்தரால்  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.  
🌺இவ்வூரானது முதலாம் பராந்தகன் காலத்தில் அவருடைய மனைவியின் பெயரால் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் இவ்இறைவன் பரம சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. முதலாம் ராஜேந்திரன் காலத்திலிருந்து திருவைய்யாருடைய மஹா தேவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
🌺இக்கோயில் கருவறை, மகாமண்டபம்,திருச்சுற்று என்று பெரிய அளவில் அமைந்துள்ளது. இரு துவார பாலர்கள், பிக்ஷடானர்,துர்கை, விநாயகர்,அர்த்த நாரீஸ்வர் ,ரிஷபாந்திகர், பிரம்மா, லிங்கோத்பவர்,தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர்  போன்ற இறை உருவங்களும் , கண்ட பாதங்களில் பல்வேறு குறுஞ்சிற்பங்களும் உள்ளன.   பைரவரும், ஜேஷ்டா தேவி சிற்பமும், ஸப்த மாதர்களில் சிலரது தனி சிற்பங்களும் உள்ளது.
#கல்வெட்டுகள் 
🌺இங்குள்ள கல்வெட்டுகளில் முதலாம் பராந்தகனின் கல்வெட்டே பழமையானது,947ம் ஆண்டு கல்வெட்டு இக்கோயிலில் விளக்கெரிக்க 90 ஆடுகள் வழங்கியதை குறிக்கிறது.

🌺உத்தம சோழன் காலக்  கல்வெட்டு ஒன்று நிலம் வழங்கியமையும், மேலும் மூன்றாம் கிருஷ்னனின் 25ம் ஆட்சி யாண்டில் தந்த ஆடு கொடையை இவருடைய  16ம் ஆண்டில் கல்வெட்டில் வெட்ட பட்டத்தையும் தெரிவிக்கிறது.
🌺கன்னர தேவனின் காலத்தில் இக்கோயில் இறைவனின் வெள்ளி தளிகை, வெள்ளி முண்டம், பொற்பூக்கள், பட்டங்கள், கண்ட நாண் , பண்டாரத்திலிருந்த பொன் ஆகியவற்றை இவ்வூர் பெருமக்கள் அழித்ததற்கு பதில் நிலம் தந்ததை ராஜராஜன் காலத்திய கல்வெட்டு குறிப்பிடுகிறது.  

🌺மேலும் 12ம் ஆட்சியாண்டில் நிலம் கொடுத்ததையும், திருவமுது செய்ய, சந்தன காப்பு செய்ய,விளக்கெரிக்க, பதியம் பாடுவருக்கு ஆடை தரவும்,நந்தவனத்தில் நீர் இறைக்கும் இருவருக்கு ஆடை அளிக்க, மடை விடுவானுக்கு நெல் அளிக்க,திருச்சுற்றில் இருந்த சூர்ய தேவர்க்கு அமுது, அடியார்க்கு அமுதளிக்க ஏற்பாடு செய்ததையும் குறிப்பிடுகிறது.

🌺முதலாம் ராஜேந்திரன் ,முதலாம்  ராசாதி ராசன்,முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் 
 குலோத்துங்கன்விக்கிரமசோழன், கோப்பெருஞ்சிங்கன்  ,விருப்பன்ண உடையார்,வீர புக்கன்,சாளுவ நரசிம்மன்,கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்றவர்களின் காலத்திய பல்வேறு தானங்களை குறிப்பிடும் கல்வெட்டுகள் பல உள்ளன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் : இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்...