Sunday, December 17, 2023

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இந்த அரிய தகவல் கூறப்பட்டுள்ளது.

தாமிரபரணி புராணத்தில்  கூறப்பட்டுள்ள மார்கழி மாதம் பாபநாசத்தில் நீராடுவது தொடர்பான அரிய தகவல்:
பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இந்த அரிய தகவல் கூறப்பட்டுள்ளது.

 ஆதிகாலத்தில், அகத்தியப் பெருமான் உத்தரவுடன், ஸ்ரீ தாமிரபரணி தேவியானவள், சிவபெருமானை நோக்கி, பூசித்து, தவமிருந்தாள். அப்படி தவம் இருந்த இடம்தான்  திருநெல்வேலியில் இன்றுள்ள பாபநாசம் என்கிற ஊர்.

ஸ்ரீ தாமிரபரணி தாயின் தவத்தில் மகிழ்ந்து, சிவபெருமான் காட்சி கொடுத்து தாமிரபரணித் தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பலவரங்களை கொடுத்து பின் அந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் உறைந்து போனார்.

ஸ்ரீ தாமிரபரணித் தாய் நமக்காக கேட்டு வாங்கித் தந்த வரங்களில் ஒன்று ........

"மார்கழி மாதத்தில் இவ்விடத்தில் எனது தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணி (நீராடி) தங்களை தரிசனம் பண்ணுவோர், மறுபடியும் இந்த பூமியிற் பிறக்ககூடாது" என்றாள்.

சிவபெருமானும் "அங்ஙனமே" என்று வரமளித்தார்.

பிறகு மலயகுமாரியான இம்மகா நதியானவள் சதாசிவத்தினிடமிருந்து இவ்விதம் அனுக்ரஹம் பெற்று அகஸ்திய மாமுனியுடன் அமர்ந்து அவருக்கு குருபூசை முதலியவை செய்து, பின்னர் மார்கழி மாதத்தில் தன் இருப்பிடம் ஏகினாள்.

ஸ்ரீ தாமிரபரணித் தாய் நமக்காக கேட்டு வாங்கித் தந்த வரமான மார்கழி மாதத்தில்  பாபநாச ஸ்நானம் செய்ய வேண்டிய நாட்கள் இந்த வருடம் 17/12/2023முதல் 14/01/2024க்குள் வருகிறது.

குறிப்பிட்ட நாளை மட்டும் கூறாமல், 29 நாட்களை அளித்து இறைவனின் அருளை அள்ளிச்செல்ல அகத்தியப் பெருமான் நமக்கெல்லாம் வழி காட்டுகிறார்.

எனவே அவரவர் வசதிப்படி, 17/12/2023 முதல் 14/01/2024க்குள் ஏதாவது ஒரு நாள் பாபநாசம் சென்று  தாமிரபரணி நதியில்  அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் 
கோவில்முன் உள்ள படித்துறையில் ஸ்நானம் செய்து, பின் இறைவனையும் அம்பாளையும் தரிசித்து, தங்களது வேண்டுதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, இப்பூமியில் மறுபிறவி இல்லாத நிலையை பெற்று வாருங்கள் என்று அனைவரையும் வேண்டி கேட்டு கொள்கிறேன்.

அங்கு செல்பவர்கள், அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் இருக்கும் உரலில் மஞ்சளை போட்டு (அதுவும் அங்கேயே இருக்கும். வாங்கி செல்ல வேண்டும் என்பதில்லை!) இடித்து, அங்கு வருபவர்களுக்கு அளித்து, சிறிது பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு செல்லும் படியும் தெரிவித்துக் கொள்கிறேன்

இப்படிப்பட்ட  மிக மிக அரிதான தகவலை நமக்கு தந்து உதவிய "சித்தன் அருள்" அக்னிலிங்கம் அருணாச்சலம் அவர்களுக்கு கோடானு கோடி நன்றி!

No comments:

Post a Comment

Followers

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் : இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்...