Saturday, December 16, 2023

மார்கழி என்பது தமிழ் மாதங்களில் சிறப்பான ஒன்று



*மார்கழி என்பது தமிழ் மாதங்களில் சிறப்பான ஒன்று. மார்' என்பது மாரி*' *என்ற வார்த்தையிலிருந்து உண்டானது . *'மாரி'* *என்றால் மழை என்று பொருள். *'கழி'* *என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, *மழைக்காலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.!*

*பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம் அதனால்தான் மாதங்களில் நான் *"மார்கழியாக இருக்கிறேன். என்று *ஸ்ரீகிருஷ்ணரே* *கூறியிருக்கிறார்*

*மார்கழியில் பாடப்படும்*
..
*திருப்பாவை* *மற்றும்* 
*திருவெண்பாவை* 

*ஆண்டாள்* *திருமால் மீது இயற்றிய திருப்பாவையும், *னமாணிக்க வாசகர்* *சிவ பெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப் பாட்டுக்களில் சிறந்தவை.* 

*திருப்பாவை *முப்பது பாடல்களைக் கொண்டது.* *திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் *'திருப்பள்ளியெழுச்சியில் உள்ள *பத்து பாடல்களும் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக *மார்கழி மாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.* 

*இப்பாடல்களில் பக்திப் பெருக்கும், தன்னலமற்ற இறைசேவை ஆகியவை தவிர வேறு நோக்கம் எதுவும் இல்லாமலிருப்பதையும் காணலாம்*. 

*பாவை தந்த பாவலர்கள்.!*

*மாணிக்கவாசகர் திருவண்ணாமலை*யில் அருளியது திருவெம்பாவை அதேபோல் ஆண்டாள் ஸ்ரீவல்லிபுத்தூரில்* *அருளியது* *திருப்பாவை.* 

*திருவெம்பாவையில் *20* *செஞ்சொற்சித்திரங்களும், திருப்பாவையில் *30* *செஞ்சொற் சித்திரங்களும் ஒளிர்கின்றன.* 

*மாணிக்கவாசகர் திருவாதவூர்* *தந்த அருட்செல்வர்;* *பாண்டிய நாட்டு அமைச்சராகப் பணியாற்றியவர்* 

*ஆண்டாள்*
*ஸ்ரீவில்லிபுத்தூர்* *தந்த அருட்செல்வி; *விஷ்ணு சித்தர்* *என்னும் *பெரியாழ்வார்* *அவர்களால் நந்தவனத் துளசிச் செடியருகே காணப்பட்ட அற்புதக் குழந்தை*.

*இருவருமே மற்றவர்கள் கண்களில் நோக்கிடில் குற்றம் புரிந்தவர்கள்*

*மன்னருக்காக குதிரைகள் வாங்கச் சென்று, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவருள் பெற்றார் மாணிக்கவாசகர். குதிரைக்குரிய பணத்தில் அறச்செயல் புரிந்து ~அரசுப் பணியில் பிழைபட்டார்.*~ 

*கோதையோ கடவுளுக்கான மாலையைத் தானே சூடி அழகு பார்த்த பின் கோயிலுக்குத் தந்து ~சமயாச்சாரத்தில் பிழைப்பட்டாள்.!*

*ஆனால் தங்கள் மீது கொண்ட பக்தியால் மட்டுமே இச்சர்களை செய்த இருவரில் மாணிக்க வாசகரை சிவபிரான் ஆட்கொண்டார்.!* 

*சூடிக் கொடுத்த *நாச்சியாரைப் பெருமாள் ஆட்கொண்டார்.!* 

*ஆக, இருவருமே இறை ஒளியில் கலந்த பெருமையினர்.!* 

*மேலும் இறை ஒளியைத் தம்தம் அழகிய பாடல்கள் வழங்கிய அற்புதமான திவ்ய ஞானதீபங்கள்.*

*திருவாசகத்தின் அங்கமாகப் *பன்னிரு திருமுறையில் குடியேறியது* *திருவெம்பாவை.!* 

*நாச்சியார் திருமொழியுடன் *நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் குடியேறியது திருப்பாவை.!* 

*பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழகத்தின் ஆன்மிகப் பண்பாட்டு விழிகள். பாவைப் பாட்டுகளோ அந்த இரு விழிகளை பாவைகளாக ஒளிர்பவை*.

*ஓம் நமச்சிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...