Friday, April 26, 2024

அருள்மிகு வல்லப வெள்ளை விநாயகர் திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்.



  அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில் [Sri vallabha vinayagar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி

அருள்மிகு வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்.
  ஊர்   கீழவாசல்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

*கோயில் சிறப்பு:*
 

*உற்சவ விநாயகர் மனைவி சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள்; அதுவே இந்தத் தலம் என்கிறது ஸ்தல புராணம்.*
 *உற்சவ விநாயகர் மனைவி சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.* *வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள்.* *அனைவரும் சேர்ந்து சிவனாரிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார்.* *அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார்.* *தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை.* 

 *அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி.* *மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள்.* *ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள், அதுவே இந்தத் தலம் என்கிறது ஸ்தல புராணம்.

ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...