Saturday, April 27, 2024

திருநாவுக்கரசர் (அ)அப்பர்வாழ்க்கை குறிப்பு:

திருநாவுக்கரசர் (அ)அப்பர்

வாழ்க்கை குறிப்பு:

இயற்பெயர்  : மருள்நீக்கியார்

பெற்றோர்  :   புகழனார், மாதினியார்

ஊர்  : தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர்

சகோதரி  : திலகவதி

வாழ்ந்த காலம்  :  81 ஆண்டுகள்

மார்க்கம்  : சரியை என்னும் தாச மார்க்கம்

நெறி  : தொண்டு நெறி

ஆட்கொள்ளட்பாட

இடம்  :  திருவதிகை

இறைவனடி

சேர்ந்த இடம்  : திருப்புகலூர்

இவரின் தமிழ்  :  கெஞ்சு தமிழ்


படைப்புகள்:

· இவர் அளித்தது 4,5,6 ஆம் திருமுறை

· 4ஆம் திருமுறை = திருநேரிசை

· 5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை

· 6ஆம் திருமுறை = திருந்தான்டகம்


வேறு பெயர்கள்:

· மருள்நீக்கியார்(இயற் பெயர்)

· தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)

· அப்பர்(ஞானசம்பந்தர்)

· வாகீசர்

· தாண்டகவேந்தர்

· ஆளுடைய அரசு

· திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)

· சைவ உலகின் செஞ்ஞாயிறு


செய்த அற்புதங்கள்:

· “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்.

· “மகேந்திரவர்மப் பல்லவனை” சைவராக்கினார்

· திருமறைக்காட்டில் பாடியே கதவை திறக்கச் செய்தார்.

· பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார்.

· திருவையாற்றில் மூழ்கி எழுந்து, கயிலாயக் காட்சியை கண்டார்.

· மகேந்திரவர்மப் பல்லவன் இவரை கல்லில் கட்டி கடலில் வீசிய போதும், “கடலில் பாய்ச்சினும் நல்துணை ஆவது நமச்சி வாயவே” எனப் பாடி கடலில் கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்.


சிறப்பு:

· சிவபெருமானே இவரை “நாவுக்கரசர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.

· “உழவாரப்படை” கொண்டு கோயில் தோறும் உழவாரப்பணி(புல் செதுக்கி சுத்தம் செய்தல்) மேற்கொண்டார்.

· திருஞானசம்பந்தரை தன் தோலில் சுமந்து பல தலங்கள் சென்றுள்ளார்.

· “என் கடன் பணி செய்து கிடபதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்

· இறைவனை கணவனாகவும், ஆன்மாவை மனைவியாகவும் உருவகித்து பாடியவர்.

· இவர் சமண சமயத்தில் இருந்து தன் சகோதரியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார்.

· இவர் சமண சமயத்தில் இருந்த பொது இவரின் பெயர் = தருமசேனர்

· இவர் 4900 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.

· ஆனால் இன்று கிடைப்பதோ 313 பதிகங்கள் மட்டுமே சங்கம் என்னும் வார்த்தை முதன் முதலில் இவரது திருப்பத்தூர்த் தேவாரத்தில், “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக் கருளினோன் காண்” என்ற பாடலில் வருகிறது. 


 ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 

இரா இளங்கோவன்

 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...