Wednesday, June 12, 2024

63 நாயன்மார்களில் ஒருவரான, சோமாசிமாற நாயனார்.....

63 நாயன்மார்களில் ஒருவரான,  
வேள்விகள் மூலம் பல தான தர்மங்களை செய்தவரான,
ஈசனும் உமையம்மையும் சாதாரண வேடுவர் வேடத்தில் நேரில் வந்து, நான்கு வேதங்களையும் நாய்களாக கட்டி,நந்தியை இறந்த கன்று போல் தோளில் சுமந்து பறையொலி முழங்க சிவபெருமானே நேரில் வந்து சோம யாகத்தின் அவிர்பாகத்தை பெற்றுக் கொண்டு அருள் கிடைக்கப்பெற்ற நாயன்மாரான #சோமாசிமாற_நாயனார் குருபூஜை இன்று: 
(முக்தி நாள்)
(#வைகாசி_ஆயில்யம்)

சோமாசிமாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவர் ஆவார். இவர் எக்குலத்தவராயினும் சிவனடியார்கள் என்றால் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதை கடமையாக கொண்டிருந்தார். வேள்விகள் பல செய்து அதன் மூலம் பல தான தர்மங்களை, சிவனடியார்களுக்கு வழங்கி வந்தார். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் சிவபெருமானை வழிபட்டதனால், சோமாசிமாற நாயனார் எனப் போற்றப்படுகிறார். இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று எந்நேரமும் சிவதரிசனம் செய்து வந்தார். சிவபெருமானின் "நமச்சிவாய" எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் நித்த நியமம் உடையவர்.
சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்”
- திருத்தொண்டத் தொகை.
சோமாசிமாற நாயனார் என்ற சிறப்புப் பெயர்:

சோழ நாட்டிலுள்ள அம்பர் மாகாளம் (தற்போது "கோவில் திருமாளம்' என அழைக்கப்படுகின்றது) என்னும் தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் சோமாசிமாற நாயனார்.
இவர் சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு தேவையான பொருள் உதவிகளையும், அவர்களுக்கு வேண்டிய உணவுகளையும் அளிப்பது என்பது தமது தலையாய கடமையாக கொண்டிருந்தார். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவர் நாவிலே எந்நேரமும் நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். இவர் எப்பொழுதும் சிவபெருமான் வீற்றிருக்கும் சிவத்தலங்களை அடைந்து, சிவதரிசனம் செய்து வந்தார்.
இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் சிவபெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
சுந்தரமூர்த்தி நாயனாரை சந்தித்த சோமாசிமாற நாயனார்:

சோமாசிமாற நாயனார் பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து திருவாரூரை அடைந்தார். பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலுக்கு சென்ற சோமாசிமாற நாயனார் தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். (தாமரை மலரில் வாழ்கின்ற அயனும், இந்திரனும், தாமரைமலரில் உறையும் திருமகளைத் தன் மார்பகத்தே கொண்டி ருக்கும் திருமால் முதலான தேவர்களும் ஆகிய எல்லோரும் நீங்காது நிறைந்து உறைவது தேவாசிரியன் என்னும் திருப்பெயருடைய திருமண்டபம் ஆகும்). அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாரோடு திருவாரூர் திருக்கோவிலுக்கு வந்திருந்தனர், அவர்களைக் கண்டதும் சோமாசிமாற நாயனார் மகிழ்ச்சி அடைந்து சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது.

சுந்தரமூர்த்தி நாயனாரை சந்தித்த சோமாசிமாற நாயனார்:

சோமாசிமாற நாயனார் பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து திருவாரூரை அடைந்தார். பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலுக்கு சென்ற சோமாசிமாற நாயனார் தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். (தாமரை மலரில் வாழ்கின்ற அயனும், இந்திரனும், தாமரைமலரில் உறையும் திருமகளைத் தன் மார்பகத்தே கொண்டி ருக்கும் திருமால் முதலான தேவர்களும் ஆகிய எல்லோரும் நீங்காது நிறைந்து உறைவது தேவாசிரியன் என்னும் திருப்பெயருடைய திருமண்டபம் ஆகும்). அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாரோடு திருவாரூர் திருக்கோவிலுக்கு வந்திருந்தனர், அவர்களைக் கண்டதும் சோமாசிமாற நாயனார் மகிழ்ச்சி அடைந்து சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது.

சிவபெருமானின் திருவிளையாடல்:

ஒருநாள் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் சோமாசிமாற நாயனார், தான் நடத்தும் சோம யாகத்திற்கு சிவபெருமான் நேரில் வந்து அவிர்பாகம் பெற வேண்டும் என்ற மனதில் உள்ள நீண்ட நாள் ஆசையை தெரிவித்தார். அதை ஏற்ற சுந்தரமூர்த்தி நாயனாரும் திருவாரூர் தியாகேசனிடம் சோமாசி நாயனாரின் ஆசை பற்றி முறையிட்டார்.
தியாகேசன் தமது திருவிளையாடல்களையும் துவங்கினார்…
தியாகேசன் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் “நாளை நாம் யாகத்திற்கு எழுந்தருள்வோம். ஆனால் எந்த உருவத்தில் என்று கூற முடியாது, சோமாசிமாற நாயனார் எம்மை சரியாக அடையாளம் கண்டு அவிர்பாகம் அளிக்க வேண்டும்” என்று கூறினார். இதை சுந்தரர் சோமாசிமாற நாயனாரிடம் கூற யாகம், மிக சிறப்பாக நடைபெற தொடங்கியது. தியாகேசனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

அவ்வேளையில் யாகம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக கையில் பிடித்தபடி மகன்கள் இருவரும், மனைவியானவள் இடையிலே கள் நிறைந்த குடத்தை சுமந்தபடியும், தம்பட்டம் அடித்த வண்ணம், நந்தியை இறந்த கன்றாக மாற்றி தோளில் சுமந்துகொண்டு வேடர் உருவில் சிவபெருமான் குடும்பத்தினருடன் எழுந்தருளினார்.
இவர்களை கண்ட அந்தணர்கள் எல்லாம் பயந்து ஓட, சோமாசிமாற நாயனாரும் அவர் மனைவியும் சரியாக இவர்களை அடையாளம் கண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுத்தார்கள்.
அப்போது, தியாகேசன் கமலாம்பாளோடு காட்சி கொடுத்து அருளினார்.
சோமாசி மாற நாயனார் திருவாரூரிலேயே தங்கி தியாகேசர், சுந்தரமூர்த்தி நாயனார் திருவடிகளைப் பணிந்து போற்றி குருவருளும் திருவருளும் பெற்று ஈடு இணையில்லா சிவபதம் அடைந்தார்.

அத்வைதம் என்றால் 'இரண்டு அல்ல' என்று பொருள். 'பரமாத்மா - ஜீவாத்மா என்று இரண்டு இல்லை... எல்லா ஜீவாத்மாக்களுக்குள்ளும் உறைபவன் அந்த பரமாத்மாவே' என்பதுதான் அத்வைதத்தின் சாரம். வேதத்தின் மையமாக விளங்கும் ருத்ரம் இதை மிகவும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. அதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஈசன் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட ஒரு திருவிளையாடலே சோமாசி மாற நாயனாருக்கு அருளிய திருவிளையாடல்.

பிறப்பால் பேதமில்லை என்பதுதான் அத்வைதம் விளக்கும் வாழ்க்கை நெறி. ஆனால் காலப்போக்கில் அது மறைந்து வர்ணங்களும் சாதிகளும் தோன்றி மக்கள் வாழ்வைப் பிளவுபடுத்தத் தொடங்கிவிட்டது. கருணையின் வடிவான ஈசனோ, மக்களுக்கு உண்மையை உணர்த்தப் பல தருணங்களில் நேரில் தோன்றி அறிவுறுத்தினார். சகல ஞானங்களும் கைவரப்பெற்ற ஆதி சங்கரருக்கு, 'மனிதர்களுக்குள் வர்ண பேதம் இல்லை' என்பதை நேரில் தோன்றி விவாதித்து அருளினார். அதேபோன்று ஈசன் நடத்திய மற்றொரு திருவிளையாடலே சோமாசி மாற நாயனாருக்கு அருளியதும்.

சோமாசி மாற நாயனார், திருவாரூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அந்தண குலத்தில் தோன்றிய சோமாசி, உலக நன்மைக்கான வேள்விகளை மட்டுமே செய்பவர். அவர் மனதில் 'சோம யாகம் செய்யவேண்டும்' என்கிற ஆசை இருந்தது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும் செய்யப்படும் யாகமே சோம யாகம். சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகத்தை ஈசனே வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு  ஏற்பட்டது. சுந்தரர், திருவாரூர் தியாகராயப் பெருமானிடம் நட்பு பாராட்டி பழகுபவர் என்பதைச் சோமாசி அறிவார். அவர் பாதம் பணித்தால் ஈசனை அணுகமுடியும் என்ற எண்ணத்தில், சுந்தரரின் நட்பைப் பெற முயன்றார். தினமும் அவருக்கு தூதுவளைக் கீரையைப் பறித்து பரவை நாச்சியாரிடம் தருவார். அவரும் கீரையை சமைத்துப் போட,  "தினமும் உனக்கு இந்தக் கீரையைத் தருபவர் யார் ?" என்று கேட்டார் சுந்தரர். அப்போது பரவை நாச்சியார் சோமாசி மாற நாயனாரை அறிமுகம் செய்துவைத்தார். பணிந்து நின்ற சோமாசி மாற நாயனாரைக் கண்டு மனம் கசிந்த சுந்தரர், "உங்களுக்கு வேண்டுவது என்ன?" என்று கேட்டார். சோமாசி மாற நாயனாரும் 'தான் செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை அந்த ஈசனே வந்து பெற்றுக்கொள்ள வழி செய்யவேண்டும்' என்னும் தன் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார். ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலை மனக்கண்ணில் கண்ட சுந்தரரும், " அவ்வாறே நடைபெறும் " என்று உறுதியளித்தார். வேள்வி செய்யும் நாளும் வந்தது.

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!
யாகம் நிறைவுபெறும் தறுவாய். அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டும். எல்லோரும் ஈசனின் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது, பறை ஒலிக்கிற சத்தம் கேட்டது. எல்லோரும் தெருவில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு வேடன், பறையை இசைத்தபடி வந்துகொண்டிருக்கிறார். அவர் தோளில் இறந்த மானின் உடல் கிடக்கிறது. கைகளில் நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக்கொண்டு வருகிறார். அவருடன் அவர் மனைவியும் வருகிறாள். அவள் தலையில் மதுக்குடம் ஒன்றைச் சுமந்திருந்தாள். அதோடு, தன் முதுகில் இருபிள்ளைகளையும் கட்டிக்கொண்டுள்ளாள். நாய்கள் முன்னோக்கி ஓட, அதைப் பற்றியவாறே அந்த வேடன் ஓடி வருகிறார்.
Advertisement

 ருத்ரம், இறைவனைப் பற்றிக்குறிப்பிடும்போது, அவன் இந்த உலகின் எல்லாமுமாக இருக்கிறான் என்று குறிப்பிடுகிறது. ருத்ரத்தின் நான்காவது அனுவாகத்தின் இறுதி வரிகள், 

"ம்ருத்யுப் ய; ஃசவினிப்ய்ஃச்சவோ நமோ நம (ஃச்)
ஃசவப்ய; ஃச்வபதிப்யஃச்ச வோ நம " என்கின்றது. 

இதன் பொருள்... 'வேடர்களாகவும், நாய்க்கழுத்தில் கயிற்றைப் போட்டுப் பிடித்துக்கொண்டு இருக்கிறவரும், நாய்களின் தலைவராகவும் இருக்கிற ஈசனே  உமக்கு நமஸ்காரம்' என்று பொருள். இந்த உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை. அனைவரும் இறை ரூபம் என்பதுதான் அதன் உள்பொருள்.

ருத்ரத்தை வேதத்தின் ஒரு பாகமாக தினமும் பாராயணம் செய்பவர்கள் அதன் மறைபொருளை உணரவில்லை. சோமாசி மாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடினர். ஆனால் சோமாசி மாற நாயனாரோ, அதை அறிந்திருந்தார். 

`எல்லா உயிர்களிலும் உறைபவன் ஒருவனே...' -வேடனாக வந்து சோமாசி மாற நாயனாருக்கு அருளிய ஈசன்!
அத்வைதத்தின் அரும்பொருள் அறிந்த சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர் பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார். அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும் இரு மழலைகளும் 'விநாயகனும் முருகனும்' என்றும் தெளிந்தார்.   

அவிர்ப்பாகத்தை எடுத்தார். நேரே அந்த வேடனிடம் போனார். அவரை நோக்கி நீட்டினார். சுற்றியிருந்தவர்கள் எல்லாம், 'என்ன பைத்தியக்காரத்தனம்... பரமனுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை இந்தப் பாவிக்குத் தருகிறாரே?' என்று வைதனர். ஆனால் சோமாசியோ பக்தியோடு பணிந்துகொண்டு அவிர்ப்பாகத்தை வேடனின் கைகளில் தந்தார். வேடன் அந்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற கணத்தில் இடப வாகனாக உமையம்மையோடும், விநாயகர் மற்றும் முருகப் பெருமானோடும் காட்சி கொடுத்தார் ஈசன். அந்தக் காட்சியை அந்த ஊரே கண்டு மகிழ்ந்தது. சோமாசிக்குக் காட்சிகொடுத்ததால் அவருக்கு ,'காட்சிகொடுத்த நாயகர்' என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் கோவில்திருமாளம். திருவாரூருக்கு அருகில் இருக்கிறது இந்த ஊர். இங்கு ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இன்று  பறையடித்து அவிர்ப்பாகம் ஏற்க வரும் உற்சவம் நடைபெறும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் காலை 9 மணியளவில், சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர். சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை.

சோமாசி மாற நாயனார் – சோம வேள்வி செய்து சுந்தரரால் சிவப்பேறு கிடைக்கப் பெற்றவர்
சோமாசி மாற நாயனார் உலக நன்மைக்காக சோம வேள்வி செய்து சுந்தரரால் இறையருள் கிடைக்கப் பெற்ற மறையவர்.

இவர் நடத்திய வேள்வியில் இறைவனே நேரில் வந்து தன்னுடைய அவிர்பாகத்தைப் பெற்றுக் கொண்ட நிகழ்ச்சியை போற்றும்விதமாக இன்றும் அம்பர் மாகாளத்தில் திருவிழா நடைபெறுகிறது.

பண்டைய சோழ நாட்டில் திருவம்பர் என்னும் பழமையான தலத்தில் வசித்த வேதியர் ஒருவர் சிவபெருமானிடம் பேரன்பு கொண்டிருந்தார். அவருடைய பெயர் மாறனார் என்பதாகும்.

திருவம்பர் தற்போது அம்பர் மாகாளம் என்றழைக்கப்படுகிறது. அம்பர் மாகாளம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது.

சிவனாரிடம் அன்பு உடையோர் எக்குணத்திரானாலும், எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் தம்மை ஆளுடையும் தன்மை உடையவர்கள் என்று உறுதிப்பாடுடன் வாழ்ந்து வந்தார் மாறனார்.

ஆதலால் சிவனடியார்களிடம் பேரன்பு கொண்டு அவர்களுக்கு தகுந்த முறையில் திருவமுதூட்டி மகிழ்ந்தார். ‘நமசிவாய’ என்ற திருவைந்தெழுத்தை இடைவிடாது உச்சரித்து வாழ்ந்தார்.

இறைவனை போற்றி உலக உயிர்களின் நன்மைக்காக சோம யாகத்தினை அதிகளவு நடத்தி வந்தார்.

ஆதலால் அவ்வேதியரை எல்லோரும் ‘சோமயாஜி’ என்றே அழைக்கலாயினர். ‘சோமாசி மாற நாயனார்’ என்றே சிவனடியார்கள் வழங்குவர்.

சிவபெருமான் உறையும் தலங்களுக்கு சென்று வழிபடும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். அவ்வாறே வீதிவிடங்கரை வழிபட திருவாரூக்குச் சென்றபோது, சுந்தர மூர்த்தி நாயனார் பரவை நாச்சியாருடன் திருவாரூரில் இருப்பதை அறிந்தார்.

இறைவனின் தோழர் என்றழைக்கப்படும் வன்றொண்டர் சிறப்பினை பற்றி சோமாசி மாற நாயனார் ஏற்கனவே அறிந்திருந்ததால், ஆரூராரை தொழுது வழிபட்டார்.

சிவனடியாரிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்த சோமாசி மாற நாயனாரிடம் சுந்தரருக்கு பேரன்பு உண்டானது. கருத்தொத்த அவ்விருவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

இறைவன்மீதும் அவர்தம் அடியார்களிடத்தும் மாறாத அன்பு கொண்டிருந்த சோமாசி மாற நாயனார் தொண்டுகள் பல புரிந்து இறுதியில் நீங்காத இன்பமான வீடுபேற்றினை அடைந்தார்.

சோமாசி மாற நாயனார் குருபூஜை வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

உலக நன்மைக்காக சோம வேள்விகள் செய்து சுந்தரரால் சிவனருள் கிடைக்கப் பெற்ற சோமாசி மாற நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.

அம்பர் மாகாளத் திருவிழா
அம்பர் மாகாளத்தில் ஆண்டுதோறும் வைகாசி ஆயில்யத்தில், சிவனார் உமையம்மையுடன் சோமாசி மாற நாயனாரிடம் நேரில் அவிர்பாகம் பெறும் சோமயாக திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சோம வேள்விகள் பல செய்து வந்த சோமாசி மாற நாயனாருக்கு, தாம் நடத்தும் வேள்வியில் சிவனாரே நேரில் வந்து அவிர்பாகத்தை பெற வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.

அவர் தம்முடைய விருப்பத்தை திருவாரூரில் தங்கியிருந்த தன் நண்பரான சுந்தரரிடம் தெரிவித்தார்.

இறைவனின் தோழரான சுந்தரர் சோமாசியாரின் விருப்பத்தை தியாகேசரிடம் முறையிட்டார்.

இறைவனார் உலக நன்மைக்காக வேள்விகள் செய்யும் தம்முடைய பக்தரான சோமாசியாரின் விருப்பதை நிறைவேற்ற சம்மதித்தார்.

ஆனால் நிபந்தனை ஒன்றையும் இறைவனார் விதித்தார். அதாவது சோம யாகத்திற்கு தாம் எந்த ரூபத்திலும் வரலாம். மாறனாரே இறைவனை உணர்ந்து அவருக்கு அவிர்பாகம் அளிக்க வேண்டும் என்பதே அது.

வன்தொண்டரும் இறையாணை பற்றி சோமாசியாரிடம் தெரிவித்தார். இறைவனின் சம்மதம் கிடைத்ததை எண்ணி ஆனந்தக் கூத்தாடினார் சோமாசியார்.

சோமயாகத்திற்காக மிகவும் பிரம்மாண்டமான வேள்விச் சாலையை உண்டாக்கினார் சோமாசியார். ஆயிரக்கணக்கான வேதியர்கள் அமர்ந்து வேள்வியைத் தொடங்கினர். இறைவன் வரப்போகிறார் என்றறிந்த மக்கள் ஆயிரக்கணக்கில் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

வேள்வி நடந்து கொண்டிருந்தபோது பறையொலியும் எக்காள சத்தமும் விண்ணதிரக் கேட்டது.

அப்போது திடகாத்திரமான இளைஞன் ஒருவன் இறந்த கன்றினை தோளில் சுமந்து கொண்டு, இடுப்பில் பறையை அணிந்து, இடக்கையில் நான்கு நாய்களை பிணைந்த கயிற்றினைப் பிடித்துக் கொண்டு, வலக்கையில் குச்சியால் பறையை அறைந்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவன் அருகில் அவனுடைய இருகுழந்தைகளும், கள் பானையைச் சுமந்தபடி மனைவியும் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டதும் வேள்விகள் செய்து கொண்டிருந்தோர் மற்றும் அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடினர்.

அப்போது சோமாசி மாற நாயனார் வேள்வி தடைப்படாமல் காக்குமாறு விநாயகப் பெருமானை வேண்டினார். விநாயகரும் வந்திருப்பது ‘பரம்பொருள்’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.

உடனே சோமாசி மாற நாயனார் வந்து கொண்டிருந்த புலையனின் காலில் விழுந்து வணங்கி, வேள்விச் சாலைக்கு அழைத்துச் சென்று அவிர்பாகத்தை வழங்கினார்.

அவற்றைப் பெற்றுக் கொண்டதும் இளைஞன், அவனுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் நாய்கள் மறைந்தனர். நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக மாறின. சிவனார் உமையம்மையுடன் இடப வாகனத்தில் காட்சி அளித்தார்.

இறைவனை குறிப்பால் உணர்த்திய விநாயகர் அச்சந்தீர்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

அம்பர் மாகாளத்திற்கும் அம்பர் பெருந்திருக்கோவில் ஆகிய இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசி மாற நாயனார் நடத்திய வேள்வி குண்டம் உள்ளது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறுகிறது.

குருபூஜை நாள்:

சிவத்தலம் தோறும் சிவதொண்டு பல புரிந்து, திருவைந்தெழுத்து மகிமையால் திருவாரூரில் தங்கி சிவபதம் அடைந்த சோமாசி மாற நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவர் அவதாரம் செய்த ஸ்தலமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில் திருமாளம்(திருமாகாளம்) அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...