Wednesday, June 19, 2024

பூரி ஜகன்னாதர் அதிசயங்களும் அற்புதங்களும்...

பூரி ஜகன்னாத் :
பல அதிசயங்களையும், அற்புதங்களையும், மர்மங்களையும், தனக்குள் அடக்கி வைத்திருக்கும் ஆலயம் இந்த பூரி ஜகன்னாதர் ஆலயம்.
இந்த ஆலயம் ஓடிசா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. 

துவாபர யுகம் முடிவில் கிருஷ்ணர், பூத உடலில் இருந்து தனது ஆன்மாவைப் பிரிந்து வைகுந்தம் அடைந்தார்.

அந்த உடலுக்கு அங்கு இருந்தவர்கள் இறுதிச் சடங்குகளை முடித்து உடலுக்கு தீ வைத்தனர்.

உடலில் அனைத்துப் பகுதிகளும் சாம்பலானது ஆனால் தொப்புள் பகுதி மட்டும் அப்படியே இருந்தது. 

அவர்கள் அதை அப்படியே கடலில் கரைத்தனர். 

ஆச்சர்யம் என்ன என்றால் தொப்புள் பகுதி மட்டும் கடலில் கரையாமல் நீல நிறக்கல்லாக மாறி, பின் கொஞ்சம், கொஞ்சமாக பகவான் விஷ்ணுவின் உருவமாக மாறியது.

அந்தச் சிலையை கண்ட பழங்குடி இனத்தை சார்ந்த விஸ்வவசனன், அந்த சிலையை அங்கு இருந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று, யாரும் அறியாத வண்ணம் காட்டு மலர்களால் தினமும் அர்ச்சனை செய்து வந்தார்.

இந்த விஷயம்  எப்படியோ, அங்கு ஆட்சி செய்த இந்திரதுய்மன் காதுக்கு எட்டியது. 

விஷயத்தை அறிந்து வரும்படி ராஜா, வித்யாபதி என்ற பிராமணனை அனுப்பி வைத்தார். 

அவரும் விஸ்வவசனனை சந்தித்தார்.
அவர் மகள் மீது காதல் கொண்டு,  திருமணமும் செய்துகொண்டார். 
அதன் பிறகு அந்த காட்டுக்குள் இருக்கும் சிற்பத்தை தனக்கு காட்டுமாறு வற்புறுத்தி வேண்டினார்!

அவரும் வித்யாபதிக்கு காட்டுவதாகக் கூறி, வித்யாபதியின் கண்களைக் கட்டி அழைத்துச் சென்றார்.

வித்யாபதியும் வழிஎங்கும் கடுகுகளை போட்டுக் கொண்டே சென்றார். 

பின் சிலையைக் கண்டு வணங்கி,  பூஜைகளை முடித்து வீடு திரும்பினர். 

குறிப்பிட்ட காலத்துக்குப்பின், அந்த கடுகுகள் துளிர் விட ஆரம்பித்தது.

வழி துல்லியமாக தெரியத் தொடங்கியது. அதைக் கண்டு வித்யாபதி ராஜாவிற்குத்   தகவல் கொடுத்தார். 

தகவல் அறிந்த இந்திரத்துய்மன், தன் படையினருடன் அந்த காட்டுப்பகுதிக்கு சென்றான் 

ஆனால் அதிசயமாக  அந்த சிலையானது மறைந்து போகிறது. 

அதைக் கண்டு மனம் உடைந்த ராஜா, உண்ணாவிரதம் மேற்கொண்டு ஒரு மண்டலத்தில், அசுவமேத யாகத்தை துவங்குகிறான்.

ஒருநாள் மகாவிஷ்ணு, அவன் கனவில் தோன்றி கடலில் ஒரு பெரிய மரக்கட்டை ஒன்று மிதந்து வந்து, கரை ஒதுங்கும் என்றும், அதை வைத்து சிலை செய்து கோவில் எழுப்புமாறும் கூறுகிறார். 

அதே போல் கரை ஒதுங்கிய மரத்தை கொண்டு வந்து, சிலை செதுக்குமாறு ஆணை இடுகிறான், அரசன். 

அனால் அதிசயமாக எந்த சிற்பியாலும் செதுக்க முடியாமல் போகவே, ராஜா வருத்தமடைகிறார். 

அந்த நேரத்தில், வயதான பிராமணர் ஒருவர் அங்கு வந்து, தான் அந்த சிலைகளை செதுக்குவதாகவும், ஆனால் தான் மட்டும் தனி அறையில், ஒரே ஆளாக 21 நாட்களில்  சிலைகளை வடிவமைப்பேன் என்றும், அந்த நேரத்தில் தண்ணீர் கூட அருந்த மாட்டேன் என்றும், தனக்கு யாரும் தொல்லை தரக்கூடாது என்றும் கூறுகிறார். 

அதற்கு மன்னனும் சம்மதிக்கிறார்.
முதல் பதினைந்து நாட்கள் செதுக்கும் சத்தம் வந்த நிலையில், பிறகு அந்த அறையில் இருந்து சத்தம் ஏதும் கேட்காததால் மகாராணிக்கு உள்ளே என்னதான் நடக்கிறது அந்த சிலைகளைக் காண ஆவல் ஏற்பட்டு, தன் கணவரிடம் கூற, ராஜாவும் அந்த அறையை திறக்க சம்மதித்து, திறந்து பார்த்தால் அந்த அறையில் யாரும் இல்லை!!!! 

அங்கு கிருஷ்ணர், பலராமர், சுபத்ரா ஆகியோரின் சிலைகள் பாதி செதுக்கிய வண்ணமாக அறையும், குறையுமாக, காட்சி அளிக்கிறது. 

அதைக் கண்ட இந்திரதுய்மன், தான் செய்த  தவற்றை உணர்ந்து, பெரும் வேதனை அடைகிறான்.

பின் அந்த அறையில் ஒரு அசரீரி கேட்கிறது. 

ராஜா! கவலைப்படாதே! அனைத்தும் நன்மையாகவே நடக்கும். இந்த பாதி செதுக்கிய சிலைகளைக் கொண்டு கோவில் எழுப்பு!
இந்தக் கோவிலை நாடி வரும் பக்தர்கள் கிரக தோஷத்தால் சூழ்ந்திருந்தாலோ, எந்த ஒரு பாவத்தினால் அல்லது பழியினால் பாதித்திருந்தாலோ, ஒருமுறை இந்த திருவடிவத்தை தரிசித்து வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி, நிலையான, நிம்மதியான வாழ்வு அமையும் என்று சொன்னது.

அப்படி உருவானதுதான் இந்த பூரி ஜகந்நாதர் ஆலயம்.

 இந்தக் கோவிலில் உள்ள ஆச்சர்யமூட்டும் ரகசியங்களை காண்போம்:

அறிவியல் கூட இங்கு நடக்கும் விசித்திரமான சம்பவங்களுக்கு பதில் கூறத் தடுமாறுகிறது.

கோவிலில் இருக்கும் மடப்பள்ளி உலகிலேயே பெரிய மடப்பள்ளியாக விளங்குகிறது. 

இந்த கோவிலில் சமைக்கும் பிரசாதம் எப்போதும் ஒரே 
அளவில்தான்  இருக்கும் ஆனால் பக்தர்களின்   வருகை கூடினாலும், குறைந்தாலும், தயாராகும் பிரசாதம் ஒரு போதும் பக்தர்களுக்குப் பற்றாமல் போனதில்லை;
அது போல மீதமும் ஆவதில்லை !!

இந்த அதிசயம் யாருக்கும் விளங்கவில்லை.

இந்தக் கோவிலில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில இருந்து பார்த்தாலும், அந்த சுதர்சன சக்கரம் உங்களை நோக்கி பார்ப்பது போலவே காட்சி அளிக்கும்.

அப்படி ஏன் தெரிகிறது, என்பது இன்று வரை புதிராகவே இருக்கிறது.

அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும். 

இது சாதரணக்கொடி அல்ல, ஏன் என்றால் இந்தக் கொடியானது காற்று எந்த பக்கம் வீசுகிறதோ அதற்கு எதிர் திசையில் பறக்கும் 

அது ஏன் என்று கண்டுபிடிக்க, மிகப்பெரிய விஞ்ஞானிகளால் கூட முடியவில்லை.

இந்த ஜகன்னநாதர் கோபுரத்தின் நிழல் எந்த நேரத்திலும் தரையில் படுவதில்லை. 

இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மேல் விமானங்களோ, பறவைகளோ, பறப்பதில்லை. சாதாரணமாகப் பறவைகள் கோவில் கோபுரங்களில் கூடு கட்டி வாழும். 
பல பறவைகள் கோவில் கோபுரத்தில் அமரும். ஆனால் இந்தக் கோவிலில் நேர்மறையாக ஒரு பறவையை கூட பார்க்க முடியாது 

அப்படி ஏன் பறவைகள் கோவில் பகுதியில் பறப்பதில்லை என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்.

கடற்கரையை ஒட்டி ஜெகந்நாதர் இருந்தாலும் கோவிலின் முதல் படியை தாண்டினால் கொஞ்சமும் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை.

மடப்பள்ளியில் இன்று வரை, விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளைக் 
கொண்டுதான் சமைக்கிறார்கள். 

இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து, கீழே தீ மூட்டுகிறார்கள். இதி என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும், மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும், வேகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்... 

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...