Wednesday, June 12, 2024

அங்க பிரதட்சணத்தின் மகிமைகள்

அங்க பிரதட்சணத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :*
தலை, நெற்றி, கரங்கள், தோள் பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் போன்ற அவய அங்கங்கள் பூமியில் படும்படியாக வணங்கி வழிபடுவதே "அங்க பிரதட்சணம்" என்று அழைக்கப்படுகிறது. இதை "சாஷ்டாங்க நமஸ்காரம்" என்றும் அழைக்கப்படுகிறது.

எனக்கு சகலமும் நீயே என்று இறைவனை நோக்கி சர்வ அங்கமும் படும்படி கோயில் பிரகாரத்தைச் சுற்றி வருவதே அங்கபிரதட்சணம் ஆகும். எல்லா ஆலயங்களிலுமே அங்கபிரதட்சணம் செய்யலாம்.

அங்க பிரதட்சணம் செய்வதற்கு முன்பு உடலை தூய்மையாக்கி குளித்து முடித்து ஈரத்துணியுடன் பலி பீடம் முன்பு வர வேண்டும். பிறகு கிழக்கு நோக்கி தரையில் உருண்டவாறு மேற்கு பக்கமாக உருண்டு வந்து பலி பீடத்தில் வந்து வேண்டுதலை முடிக்க வேண்டும்.

பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி, பிரதட்சிணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வர வேண்டும். இவ்வாறு பிரதட்சிணம் செய்து வணங்குவது என்பது "இயற்கையோடு இணைந்தது என்று சாஸ்திரம் சொல்லுகிறது."

நாம் வாழுகின்ற பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போதும் சரி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் போதும் சரி இடமிருந்து வலமாகவே சுற்றுகிறது. இயற்கையின் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் நாமும் இடமிருந்து வலமாக சுற்றி வந்து தெய்வங்களை வணங்குகிறோம்.

நம் வாழ்க்கை சக்கரம் சுழல்வதற்கு இயற்கை என்ற ஒரு புள்ளி வேண்டும். அதை மையமாக வைத்தே நம் வாழ்க்கை இயங்குகிறது. நம் தினசரி செயலின் ஆதாரமும், பணிகளின் மையமும் இயற்கையே என்பதை உணர்த்தத்தான், இயற்கையோடு ஒன்றிய கடவுளை மையமாக வைத்து நாம் ஆலயங்களில் சந்நிதியை சுற்றி வருகிறோம்.

எந்த காலத்திலும், எந்த சூழ்நிலைகளிலும், இந்த பூமியில் வசிப்பவர்கள் இடமிருந்து வலமாகத்தான் சுற்றி வணங்க வேண்டுமே தவிர, வலமிருந்து இடமாக சுற்றி வணங்குதல் என்பது தவறு மட்டுமல்ல, இயற்கை நியதிகளுக்கும் மாறானது.

அங்க பிரதட்சணம் செய்யும் போது வேகமாக உருண்டு வரக் கூடாது. இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை உச்சரித்தப்படி அவயங்கள் பூமியில் நன்றாக படும்படி மெதுவாக உருள வேண்டும். அவயங்கள் பூமியில் படும்போது உடலிலுள்ள கர்ம பலன்கள் பூமியில் இறங்கி தெய்வ சக்தியிடம் கலந்து நமது பாவங்கள் தீர்க்கும் என்கிறது புராணங்கள்.

தேவர்களும், ரிஷிகளும், தேவகணங்களும் கூட இன்றும் பல தலங்களில் சூட்சும வடிவில் வந்து இறைவனை தரிசிப்பதாக பல தலங்களில் வரலாறு கூறுகிறது.

நல்ல புனிதமான பக்தர்களின் பாத்துப் மண் அவர்களது ஸ்ரீ பாதம் பட்ட புனிதமான இடங்களில் செய்யப்படும் அங்கப்பிரதட்சணத்துக்கு அதிக நன்மை உண்டு. இதனால் அங்க பிரதட்சணம் செய்பவர்களின் உடலும் உள்ளமும் தூய்மை அடையும் என்பது நம்பிக்கை. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...