Wednesday, April 16, 2025

தேய்பிறை பஞ்சமி .தடைகள் தீர்க்கும் வராஹி ி வழிபாடு .

.  தேய்பிறை பஞ்சமி
சகல ஐஸ்வர்யங்களையும் தந்து, தடைகள் தீர்க்கும் பஞ்சமி வழிபாடு .

சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடு ங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வை யே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.

சப்த மாதர்களில் வாராஹி தேவியும் ஒருவர். இந்த ஏழுதேவியரிலும் காரியத்திலும் வீரியத் திலும் மகாசக்தி எனப் போற்றப்படுகிறாள் வாராஹி தேவி.பஞ்சமி திதி  வாராஹி தேவி lயை வணங்குவதற்கு உரிய அற்புத நாள். 

பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளை எல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவா ள். காரியம்யாவிலும் துணை யிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.

நம்முடைய அனைத்துச் செயல்களிலும் துணையிருந்து நம்மைக் காத்தருள்வாள்.
வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியமாகப் படைப்பது ரொம்பவே விசேஷம்.

நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து போவாளாம் தேவி! அப்போதும் நாம் வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றி த் தந்திடுவாள்.

மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக ச் செய்து தேவியை வணங்கலாம்.

சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தை யும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ராஜராஜ சோழனின் வியக்க வைக்கும் தஞ்சை பெரிய கோயில்

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது  1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்க...