தருமபுர ஆதீனம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது.
வரலாறு
தருமபுர ஆதீனம் பொ.யு. 16-ம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. குருஞான சம்பந்தர் தன் குருநாதரான 'சிதம்பரநாத மாசிலாமணி கமலை ஞானப்பிரகாசர்' உத்திரவின்படி காவிரித் தென்கரைத் தலமான, வில்வாரண்யம் எனப்பெறும் மயிலாடுதுறை அருகே திருத்தருமபுரம் அடைந்து மடம் ஒன்றை அமைத்தார். இது தருமபுர ஆதீனம் அல்லது தருமை ஆதீனம் என்று அழைக்கப்பட்டது.
கோவில்கள்
தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருபத்தியேழு கோவில்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சமயக்குரவர் மூவரால் பாடப்பெற்ற பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் இடம்பெற்றவை. திருவாரூர் தியாகராஜர் கோவில் (இராஜன் கட்டளை), மயிலாடுதுறை (குமரக்கட்டளை), திருவிடைமருதூர் (பிச்சக்கட்டளை) ஆகிய கட்டளைகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் அமைந்துள்ள மவுன மடம் தருமை ஆதீனத்தின் கிளை மடம். தாயுமானவர் கோவிலுக்குரிய பல கட்டளைகள் மவுன மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு மவுன மட கட்டளை என்று பெயர். தருமபுர ஆதீனத்திற்கு காசி வரை சொத்துக்கள் உள்ளன.
கோவில்கள்
சிவலோகத்தியாகர் கோயில் (ஆச்சாள்புரம்)
முல்லைவன நாதர் கோயில் (தென்திருமுல்லைவாயில்)
சட்டைநாதசுவாமி கோயில் (சீர்காழி)
வைத்தியநாதர் கோயில் (வைத்தீஸ்வரன்கோயில்)
மகாலட்சுமீசர் கோயில் (திருநின்றியூர்)
வீரட்டேஸ்வரர் கோயில் (திருக்குறுக்கை)
வீரட்டேஸ்வரர் கோயில் (கீழப்பரசலூர்)
கம்பகரேஸ்வரர் கோயில் (திருப்புவனம்)
உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் (குத்தாலம்)
உசிரவனேஸ்வரர் கோயில் (திருவிளநகர்)
வீரட்டேஸ்வரர் கோயில் (திருப்பறியலூர்)
அமிர்தகடேஸ்வரர் கோயில் (திருக்கடையூர்)
அருணஜடேஸ்வரர் கோயில் (திருப்பனந்தாள்)
ஐயாறப்பர் கோயில் (திருவையாறு)
உஜ்ஜீவநாதர் கோயில் (உய்யக்கொண்டான் மலை)
கைலாசநாதர் ஆலயம் (கிடாரம்கொண்டான்)
பிரம்மபுரீஸ்வரர் கோயில் (திருக்குவளை)
யாழ்முரிநாதர் கோயில் (தருமபுரம்)
தர்ப்பாரண்யேசுவரர் கோயில் (திருநள்ளாறு)
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment