கால பைரவரை வழிப்பட்டு இன்னல்களில் இருந்து விடுபடுவோம்!"
கால பைரவரின் வழிபாடு கால தேசங்களைக் கடந்த அனுகிரக சக்திகளை அளிக்க வல்லது என்னும் கோட்பாட்டை வலியுறுத்தவே சிவபெருமான் நான்கு நாய்களுடன் காசித்தல கங்கைக் கரையில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தார். ”பெத்த மனம் பித்து” என்றபடி பிள்ளைகள் பெற்றோர்களை மறந்து நன்றி இல்லாதவர்களாக எதிர்காலத்தில் மாறுவார்கள் என்பதை உரைப்பதற்காக நாய்களுடன் காட்சி தந்தார் எம்பெருமான்."
🔱🔱🌹🌿"இதற்காகவே கால பைரவ மூர்த்தியும் நாயை வாகனமாகப் பெற்று நன்றி கெட்ட நிலை வராதிருக்க இறைவனை என்றும் மறக்காதிருக்க வரம் தரும் மூர்த்தியாக திருக்கோயில்களில் எழுந்தருளி உள்ளார். நாய்கள் நன்றி மறவாத பிராணிகள் என்பதோடு மட்டும் அல்லாமல் விதியை முன் கூட்டி உரைக்கும் வல்லமையும் இறையருளால் படைத்துள்ளன. நமக்கு வரக் கூடிய ஆபத்துக்கள். பிரச்னைகளையும் முன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டுவதே கால பைரவர் வழிபாடாகும்.
🔱🔱🌹🌿"கால பைரவ வழிபாட்டை முறையாக நிறைவேற்றி மக்களுக்கு நல்வாழ்வு அளித்த மகானே பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆவார்கள். சித்த மரபில் வந்த இப்பெருமான் நாய்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணாதவர். நாம் மனிதர்களுக்கு உணவிடுவதைப் போலவே இவர் நாய்களுக்கு முழு வாழை இலையைப் போட்டு சாதம், சாம்பார், இனிப்பு, அப்பளம், பாயசம் என அனைத்து வகையான உணவு வகைகளையும் அன்புடன் பரிமாறி அனைத்து நாய்களையும் அழைப்பார்."
🔱🔱🌹🌿"அவருடைய வழிபாட்டில் நிகழ்ந்த அதிசயம் என்னவென்றால் இவர் உணவு பரிமாறும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது. வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் இவர் கால பைரவரை பிரார்த்தித்த பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலையின் முன் அமர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்குக் குறையாமல் அன்னதானம் அளிப்பது வழக்கம். இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் சுவாமிகள் அன்புடன் உணவை ஏற்குமாறு அந்த நாய்களை வேண்டுவார். அதன் பின்னரே இவர் அழைத்த பைரவ மூர்த்திகள் உணவை அமைதியாக ஏற்பர். அதன் பின்னர் வரும்போது வரிசையாக வந்த அதே பாணியில் வரிசையாக ஒவ்வொரு நாயாக வெளியே சென்று விடும்.
🔱🔱🌹🌿"எங்கிருந்து அத்தனை நாய்கள் வந்தன, மீண்டும் அந்த நாய்கள் எங்கு சென்றன என்பது இன்று வரை எவருக்கும் புரியாத ஆன்மீக ரகசியம். மேலும் ஓரிடத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்தாலே அவை ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு அங்கு கூச்சலும் சண்டையும் வந்து விடும். ஆனால், ராமலிங்க சுவாமிகளின் பைரவ பூஜையில் குறைந்தது 300 நாய்கள் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட எழாது என்பதே பேரதிசயமாகும்."
🔱🔱🌹🌿"இவ்வாறு மகான்கள் பைரவ மூர்த்தியின் வாகனமான நாய்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது தெளிவாகின்றது அல்லவா? இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரைக்கவே பைரவ மூர்த்திகள் நாய் வாகனத்தில் எழுந்தருளி உள்ளனர் என்பது அவர்களுடைய பற்பல அவதார ரகசியங்களுள் ஒன்றாகும்."
🔱🔱🌹🌿"பைரவ மூர்த்தியின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாயின் வாலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆத்ம விசாரம் செய்தாலே அதன் இரகசியத்தை உணர ரிஷிகளுக்கே எட்டு சதுர்யுக காலம் தேவைப்படும் என்றால் சாதாரண மனிதர்கள் அந்த ரகசியத்தை உணர எத்தனை யுகங்கள் ஆகும்?
🌿"ஓம் கால காலாய வித்மஹே! காலஹஸ்தாய தீமஹி!
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்."
🌿"நிர்வாணம் ஸ்வாந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம் வந்தே பூத பிசாச நாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்!"
இன்றைய தினம் மாலையில் கால பைரவர் சன்னதியில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிப்பது தைரியத்தையும், பாதுகாப்பையும், தெளிவையும் அளிக்கும்
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment