நவகிரகத் தலம் கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர்,
கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். இங்கு சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு.‘காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா?’ என்பது ஒரு பாடல். ‘ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும்’ என்பது ஒரு பழமொழி. ‘ஒன்னாம் தேதி கொண்டாட்டம், முப்பத்தியொன்னாம் தேதி திண்டாட்டம்’ என்பது பணத்தின் அருமை பற்றி கவிஞர் ஒருவர் பாடிய பாடல். இப்படி பணத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை நாம் குவித்து வைத்துப் பார்க்க வேண்டுமானால் லட்சுமி கடாட்சம் நமக்கு வேண்டும். சுக்ர திசை நடப்பவர்களுக்கு, பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். ஆனால் கடக ராசிக்கு சுக்ரன் பாவி, தனுசு ராசி, மீனராசிக்கு ராசிநாதன், குருவிற்கு சுக்ரன் பகை கிரகம். பகைவனாக இருந்தாலும் அண்டி வந்தவர்களுக்கு அள்ளி வழங்குகின்ற ஆற்றல் சுக்ர பகவானுக்கு உண்டு.
அதனால்தான் ‘வெள்ளி சுக்ரன் வேந்தா உன்போல் அள்ளிக் கொடுப்பதற்கு யாரும் உண்டோ’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பிருகு மாமுனிவரின் மகன் ஆங்கீரஸ முனிவரிடம் பாடம் பயின்றவர் சுக்ரன். நாம் சுக போகங்களை அனுபவிக்கவும், செல்வச் செழிப்பில் மிதக்கவும் வழி வகுத்துக் கொடுப்பவர்.
கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு. வெள்ளை ஆடை, மொச்சை, வெண்தாமரை இவருக்குப் பிரியமானது. இறைவன் - இறைவியின் திருமணக் கோலத்தை காண பிரம்ம தேவர் விரும்பினார். அதற்காக இந்த ஸ்தலத்தில் தவமிருந்தார். பிரம்மா விருப்பப்படி திருமண கோலத்தை இறைவன் காட்டி அருளினார். எனவே நாமும் திருமணக்கோலம் காணவும், செல்வ வளம் பெருகவும் யோகபலம் பெற்ற நாளில் சென்று முறையாக வழிபாடு செய்ய வேண்டும்தலங்களுள் சுக்கிரன் தலம் இது. இக்கோயிலின் மூலவரான அக்னீஸ்வரர், திருநாமத்துடன் சற்று பெரிய வடிவமாகக் காட்சி தருகிறார். சிவபெருமான் அருகே அம்பிகை கற்பக நாயகி திருநாமத்துடன் அருள்புரிகிறார். சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் காட்சி தருகிறார்கள். இவ்விருவருக்கும் இடையில் சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. இத்தகைய காட்சி சோமாஸ்கந்த தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
ஹரதத்த சிவாச்சாரியார் தீயில் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின் மீது அமர்ந்து சைவ சமயத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய தலம் இந்த கஞ்சனூர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் முக்தி அடைந்த திருத்தலம் இது.
இத்தலம் தான் பிரம்மா, அக்னி, கம்சன் ஆகியோர் வந்து வழிபட்ட கோயில். கஞ்சனூர் கோயில் குறித்து திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடி உள்ளார். கஞ்சனூர் திருக்கோவில் அக்னீஸ்வரருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில். வழக்கமான சிவன் கோயில் போன்று அத்தனை விழாக்களும் இங்குச் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி விழா அதைவிடச் சிறப்பாக நடைபெறுகிறது
மேலும் சிவனை வருடம் தொடங்கும் பொழுது வந்து வழிபடுவது சிறப்பான ஒன்றாக இப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இந்த கோயில் வெள்ளி அதாவது சுக்கிரன் கிரகத்தை வழிபடுவதற்கான முக்கிய தலமாக விளங்குகிறது. காவிரி டெல்டா மாகாணத்தில் புகழ்பெற்ற 9 நவகிரக கோயில்களில் இதுவும் ஒன்று.
இக்கோயிலில் சிவபெருமானே வெள்ளி கிரகத்தைக் குறித்து, அதாவது சுக்கிரனைக் குறித்து சுருக்கமாகச் சொற்பொழிவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். இந்த புனித கோயில், சூரியானார் கோயிலின் அருகே இருக்கிறது. தெற்கு வாசல் வழியாகத்தான் பக்தர்கள் இந்த கோயிலுக்குள் நுழைய வேண்டும்.
சிவன் மற்றும் பார்வதி தெய்வங்களின் சிலைகள் வலது பக்கத்திலும், விநாயகர் சிலை இடது பக்கத்திலும் இருக்கிறது. மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன் என நவக்கிரகங்களில் நால்வர் சன்னதி ஆகிய அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment