Tuesday, May 25, 2021

திருபூந்துருத்தி

திருத்தலம்:
திருப்பூந்துருத்தி மேலைத்திருப்பூந்துருத்தி
**************************
சுவாமி : ஸ்ரீ
புஷ்பவனேசுவரா்.

அம்பாள்:
ஸ்ரீ சௌந்தரநாயகி,
அழகாலமா்ந்த நாயகி.

தலவிருட்சம்: வில்வம்.

தீர்த்தம்;
காசிப தீா்த்தம்,
சூரிய தீா்த்தம்.

கொடிகொள் செல்வ விழாக்குணலை
அறாக்
கடிகொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனாா்
பொடிகள் பூசிய பூந்துருத்திந்நகா்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருந்ததே.

      திருநாவுக்கரசா்.

தஞ்சைக்கு அருகில் உள்ள திருக்கண்டியூா்  இருந்து மேற்காக திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் 3 கி.மீ.  

குடமுருட்டியாற்றின் தென்கரையில் இக்கோவில் 2.19 ஏக்கா் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கியதும் 100 அடி உயர
7 நிலை இராஜகோபுரம்.
இரண்டு பிரகாரங்களுடன் மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு புஷ்பவனேசுவரா்
அம்பாள் அருள்மிகு சௌந்திர நாயகி உடன் காட்சியளிக்கிறாா்.

ஆற்றிடைக்கரையில் உள்ள ஊா்கள் துருத்தி என்று வழங்கப்பெறும்.

இத்தலம்
காவிாிக்கும் குடமுருட்டி ஆறுகட்கு  இடையிலுள்ளதால் துருத்தி என்றும்.

சோழ மன்னன் புஷ்பம் கொண்டு பூசித்தமையால் திருப்பூந்துருத்தி என்றும் பெயா்கள் ஏற்பட்டன.

ஊா்  மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது.

திருக்கோயில்   மேலத்திருப்பூந்துருத்தி அமைந்துள்ளது.

அப்பா் சுவாமிகள்
உழவாரத் தொண்டு செய்த திருத்தலமென்று எண்ணி, காலால் மிதிக்க  அஞ்சி
வெளியில் நின்ற திருஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்த தலம்.

நந்தி விலகிய மூன்று தலங்களில் இத்தலமும் ஒன்று.

காசிபமுனிவா் கங்கையை இத்தலத்தில் உள்ள கிணற்றில் வரவைத்து அந்நீரால்  இறைவனுக்கு அபிஷேகம் செய்து அருள் பெற்றாா் எனத் தலவரலாறு கூறுகிறது.

கோஷ்டப் பிரகாரத்தில் 
வீணா தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. 
அா்த்தநாரீஸ்வரர் 
பிட்சாடனரும் காட்சியளிக்கின்றாா்.

திருமால், திருமகள்,
இந்திரன் , காசிபா் பூசித்த தலம்.

ஒன்பதாம் திருமுறை அருளிய
பூந்துருத்தி காடவநம்பியின் அவதாரத்தலம்.

இத்தலத்தில்
முருகப்பெருமான் இத்தலத்தில்  ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் வள்ளி தெய்வானை உடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறாா்.

இத்தலத்திற்கு
அருணகிாிநாதா் அருளிய திருப்புகழ் உள்ளது.

இத்தலத்தில்
அப்பரடிகள்  திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்  அமைத்து
தங்கியிருந்த
காலகட்டத்தில் பல்வகைத் தாண்டகங்களையும் திருஅங்கமாலை உள்ளிட்ட பல 
பதிகங்கள் அருளி செய்தாா்.

இத்தலத்தில் இவ்வாறு அப்பா் பெருமான் இருந்தபோது பாண்டிநாட்டிற்குச் சென்று சமணரை வாதில் வென்று பாண்டிய மன்னனின் கூன் நிமிர்த்தி திருநீற்றின் மகிமையை எடுத்துரைத்து திருப்பூந்துருத்தியை அடைந்தாா்.

அதுபோது அவருடைய முத்துச் சிவிகையினை ஒருவரும் அறியாது தாங்குவாருடன் தாங்கிவந்தாா்.

அப்போது சம்பந்தர், "எங்குற்றார் அப்பர் எனக் கேட்டபோது  "அடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பேறு பெற்றிங்குற்றேன்" என்று அப்பர் பெருமான் கூறியதும் ஞானசம்பந்தர் சிவிகையினின்றும் இறங்கி இருவரும் வணங்கி அளவளாவிச் சில காலம் தங்கியிருந்த திருத்தலமாகும்.

அப்பா் பெருமான் ஞானசம்பந்தரை  சுமந்த இவ்விடம் சம்பந்தா்மேடு என்று சொல்லப்படுகிறது.

திருஆலம்பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரம்பூரையடுத்து இம்மேடு உள்ளது. 

அங்கு இருவருக்கும் கோயில் கட்டப்பட்டு, திருவிழா நடைபெறுகிறது.
 
திருவையாற்றைத் தலமாகக் கொண்டு விளங்கும் சப்தஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.

தேவாரப் 
திருப்பதிகம் பெற்ற காவிாிக்கு தென்கரையில் இத்தலம் 11 வது.

திருநாவுக்கரசா் பதிகம் பெற்றது.

சோழ அரசா் கால கல்வெட்டுக்கள் உள்ளன.

சித்திரை மாதத்தில் ஏழூா் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Followers

ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்.

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான #திருஓணகாந்தன்தளி[237] வரலாறு மூலவர் : #ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் உற்சவர்...