Tuesday, May 25, 2021

Lakshmi Narasimman

ஸ்ரீ நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்:-  
1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.  
2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.  
3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.  
4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.  
5. நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.  
.  
6. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.  
7. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.  
8. நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.  
9. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.  
10. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.  
.  
11. நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.  
12. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.  
13. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.  
14.  ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.  
15. நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.  
.  
16. வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.  
17. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.  
18. நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.  
19. நேபாளத்தில் உள்ள ராஜோபாத்யாய பிராமனர்கள், நரசிம்ம அவதாரத்தை கொண்டாடும் வகையில் காட்மண்டு பள்ளத்தாக்கில் ஆவனி மாதம் தேய்பிறை ஐந்தாம் நாள் (பஞ்சமி) ஸ்ரீ நரசிம்ம யாத்திரையை மேற்கொள்கிறார்கள். இந்த மரபு நூறு வருடங்களுக்கு மேலாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.  
20. நரசிம்ம சுவாமி இந்தியா வெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகமாக உள்ளது.  
.  
21. தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோ யால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறியவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.  
22. ஸ்ரீநரசிம்ம அவதாரம் பற்றி கம்பர் தனது ராமாயணத்தில் இரணிய வதை படலம் ஒன்றை தனியாக சேர்த்து உள்ளார். இதை நினைவூட்டவே ஸ்ரீரங்கத்தில் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றியபோது ஸ்ரீரங்க கோவிலில் சிங்கமுக மண்டபம் அமைத்து தரப்பட்டது. இதை இன்றும் காணலாம்.  
23. நரசிம்ம தத்துவத்தை “மத்ஸ்ய” புராணத்திலும் “விஷ்ணு தர்மோத்திர” புராணத்திலும் காணலாம்.  
24. நரசிம்மர் பல நாமங்களில் அர்ச்சிக்கப்படுகின்றார். இரணி யனுக்கு முன்பு தோன்றியபோது வக்ர நரசிம்மராகவும், இரணி யனுடன் போர் செய்தபோது வீர நரசிம்மராகவும் , போர் முடிந்து சாந்த நிலையை பெற்ற போது சாந்த நரசிம்மராகவும் தனது மனைவியான மகாலட்சுமியுடன் அருள் பாலித்த போது ஸ்ரீலட்சுமி நரசிம்மராகவும் யோக நிலையில் அமர்ந்தபோது யோக நரசிம்மர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார்.  
25. ஸ்ரீநரசிம்மர் பெரும்பாலும் மலை உச்சியிலும், குகை பகுதியிலுமே அவதரித்து உள்ளார். ஆலயங்களும் அப்பகுதியிலேயே கட்டப்பட்டு உள்ளன.  
.  
26. சப்த ரிஷிகளுக்கு தனது யோக நிலையை காண்பித்த தலமே திருக்கடிகை என அழைக்கப்படும் சோளிங்கர்.  
27. நாமக்கல் நரசிம்மர் சக்திவாய்ந்தது. இவ்விடத்தில் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.  
28. சென்னை அருகே சிங்க பெருமாள் கோவில் தலத்தில் நரசிம்மர் சாலகிராம கல்மலையுடன் விரலிலும், மார்பிலும் ரத்த கறை போன்ற சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றார்.  
29. ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள நரசிம் மரும், விசாகப்பட்டினம் அருகே ஸ்ரீசிம்மாசலம் என்ற மலை மீது அவதரித்து உள்ள நரசிம்மரும் சக்தி மிக்கவர்கள்.  
30. கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் வலங்கைமான் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷபூஜை இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பூஜையில் கலந்து கொண்டாலும் (அல்லது) பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும் கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன.  
சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...