Friday, February 10, 2023

நம் அனைத்து சங்கடங்களையும் தீர்க்கும் சஞ்சீவிராயர்!

நம் அனைத்து சங்கடங்களையும்  தீர்க்கும் சஞ்சீவிராயர்!
ராமாயணப்
போரில், ராவணனின் மகன்களில் இந்திரஜித் தவிர, அதிகாயன், பிரகஸ்தன், திரிசிரன், நராந்தகன், தேவாந்தகன் முதலிய மகன்கள், தம்பி கும்பகர்ணன் மற்றும் பெரும்பாலான படைத்
தலைவர்கள் மடிந்தனர்.

மறுநாள் போருக்கு தன் மகன் இந்திரஜித்தை அனுப்புகிறான் ராவணன்.  மாய வில்வித்தைகளில் சிறந்தவனான இந்திரஜித் எய்த அம்பு அனைவரையும் மயங்கச் செய்கிறது .

இந்திரஜித்தின் நாகாஸ்திரத்திற்கு லட்சுமணன் பலியாகும் நிலை வந்தது. 

ஜாம்பவான் அறிவுறுத்தியபடி, மேரு மலையில் உள்ள சஞ்சீவினி மூலிகைக் குன்றைப் பெயர்த்தெடுத்து வந்தார் அனுமன். 

அவ்வாறு பெயர்த்தெடுத்துவரும்போது, ஓரிடத்தில் சஞ்சீவினி மலையை கீழே வைத்து, மூச்சு வாங்கிக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு அந்த இடம்  பிடித்துப் போக, அதன் அழகையும் சிறப்பையும் மனத்தில் இருத்திக் கொண்டு மீண்டும் பறக்கத் துவங்கும் முன், கையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டார்.

போர் முடிந்து திரும்புகையில், சஞ்சீவினி மலையை வைத்த இடத்தைத் தேடிப் பார்ப்பதற்காகச் சென்ற அனுமன், தன் கையில் ஒட்டியிருந்து தட்டிய சிறிதளவு மண்ணே தொடர் மலையாக உருவாகியிருப்பதைக் கண்டு மகிழ்ந்து, அவ்விடத்தில் தான் விரும்பும் திருமாலை தரிசிக்க வேண்டுமென வேண்டினார். 

திருமாலும், வரதராஜராகக்  காட்சி தந்தார். அனுமனை வாழ்த்தி, "நீ விரும்பிய இவ்விடத்தில் இருந்தே  மக்களுக்கு அருள்வாய்!' என அருளிச் சென்றார்.

நெடுநாள் கழித்து பயணவழி வந்த ஸ்ரீவியாசராயர் இந்த வரலாற்றைக் கேள்விப்பட்டார். 

மகரிஷி ஸ்ரீவியாசராயர் பல இடங்களில் ஆஞ்சநேயரின் சிலைகளை தென்னிந்தியாவில் நிறுவினார். 

அவர் நிறுவிய  732 அனுமன் விக்ரகங்கள் தலைக்கு மேல் கையை தூக்கிக் கொண்டும், சஞ்சீவி மூலிகையை கையில் வைத்துக் கொண்டும், வேகமாக நடக்கும் பாவனையில் அமைக்கப்பட்டிருக்கும். வாலில் மணி கட்டி தொங்க விடப்பட்டிருக்கும். 

அப்படி நிறுவப்பட்ட விக்ரகம் உடைய ஆலயங்களில் ஒன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம், ராவுத்த
நல்லூரில் அமைந்துள்ள சஞ்சீவிராயர் திருக்
கோயிலாகும்.

சஞ்சீவிராயர் சஞ்சீவினி மருந்தை பகல் இரவு என்று பாராமல் தேடி அலைந்து, இறைவன் அருள் பெற்றதால்  "இரவு அற்ற நல்லூர்' என்று இத்தலத்திற்கு பெயர் உண்டாயிற்று. 

பேச்சு வழக்கில் "ராவு அற்ற நல்லூர்' என்றாகி, பின்னர் "ராவுத்தநல்லூர்' என மருவியது.
பரிகாரத் தலம்: மேற்கூரை மூடப்படாமல் திறந்த மண்டபத்தில் காட்சி தரும்  ஸ்ரீ சஞ்சீவிராயரின் ஒரு கண் கிழக்கு நோக்கியும், இன்னொரு கண் தெற்கு நோக்கியும் பார்த்த வண்ணம் உள்ளது. 

இவரை கிழக்குப் பகுதியில் நின்று வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பில்லி, சூனியம், செய்வினை, வழக்கு பிரச்னை போன்றவை நீங்கும். தெற்கில் நின்று வழிபட்டால் நோய்கள் தீர்ந்து, உடல் வலிமை பெறும்;

தொழில் விருத்தியடையும், மனக் கஷ்டங்கள் அகலும் என்பதும் ஐதீகம். காரிய சித்திக்காக "தேங்காய் உருட்டுதல்' என்னும் வேண்டுதல் முக்கியமான பிரார்த்தனையாகக் கருதப்படுகிறது. 

அமைவிடம்:   கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், பாக்கம் புதூர் கூட்டு ரோடு அருகே கல்வராயன் மலையடி
வாரத்தில் இத்திருக்
கோயில் அமைந்துள்ளது.

சங்கராபுரத்திலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...