Sunday, March 12, 2023

குழந்தை வரம் கிட்ட இங்கு நடத்தப்படும் வாழைத்தார் வழிபாடு பிரசித்தமானது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆக, இங்கு வந்து வாழைத்தார் வாங்கித் தொட்டில் கட்டுவதாக பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

தாயுமானவர் திருக்கோவில்.

இறைவன் - தாயுமானவர்
இறைவி  -  மட்டுவார்குழலி 
ஊர் - திருச்சி
மாவட்டம் - திருச்சி.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.

எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் 
ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.

இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.

மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்.

வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.

மலையின் உச்சியில் 
உச்சிப் பிள்ளையார் கோவில் உள்ளது.
தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்

குழந்தை வரம் கிட்ட இங்கு நடத்தப்படும் வாழைத்தார் வழிபாடு பிரசித்தமானது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆக, இங்கு வந்து வாழைத்தார் வாங்கித் தொட்டில் கட்டுவதாக பிரார்த்தித்துக் கொள்வார்கள். 

இந்த தலத்தின் பெயரைச் சொன்னாலே முக்தி கிட்டும் என அப்பர் சுவாமிகள் பணிந்து பாடிய திருத்தலம் இது.

தமிழ்நாட்டின் முக்கிய நகரமாகவும், மத்திய நகரமாகவும் விளங்கும் திருச்சிராப்பள்ளிக்கு நாம் வழி சொல்ல தேவையில்லை.

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...