Tuesday, March 14, 2023

இலங்கை நாட்டில் உள்ள புகழ்பெற்ற #நல்லூர் #கைலாசநாதர்#கமலாம்பிகைதிருக்கோயில்

இலங்கை நாட்டில் உள்ள புகழ்பெற்ற  #நல்லூர் #கைலாசநாதர்
#கமலாம்பிகை
திருக்கோயில்
நல்லூர் கைலாசநாதர் கோயில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ள சிவனுக்கு உரிய கோவில் ஆகும்.

மூலவர் : கைலாசநாதர்

அம்மன்: கமலாம்பிகை

ஊர் : நல்லூர்

மாவட்டம் : யாழ்ப்பாணம்

நாடு : இலங்கை

வரலாறு :

யாழ்ப்பாண வரலாற்று நூற் சான்றுகளின் படி யாழ்ப்பாண அரசை நிறுவியவனாகிய சிங்கை ஆரியன் தலைநகரான நல்லூரிலே அரண்மனையையும், அதன் அயலிலே முருகன் கோயிலையும், கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், வடக்கே சட்டநாதர் ஆலயம் மேற்கிலே வீரமாகாளி அம்மன் கோயில் தெற்கிலே கைலாசபிள்ளையார் கோயில், கைலாசநாதர் கோயில், கைலைநாயகி கோயில் ஆகியவற்றைக் கட்டினார் என அறியப்படுகின்றது.

யாழ்ப்பாண வரலாற்றின் மூல நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் கைலாயமாலை இக் கோயில் தொடர்பில் எழுந்த ஒரு நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதாகம முறைப்படி நித்திய நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன. நாடோறும் ஆறுகாலப்பூசைகள் நடைபெறுகின்றன. மகோற்சவங்கள் பிள்ளையாருக்கு சித்திரையிலும் சிவனுக்கு ஆனியிலும் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

வரலாற்றில் புகழ்பெற்ற நல்லூரில் ஆகம மரபை அடியொற்றி எழுச்சி பெற்றதே ஸ்ரீ கைலாஸநாதர் கோயிலாகும். நல்லூர் யாழ்ப்பாணத்துத் தமிழ் மன்னர்களின் காலத்தில் சிறப்புப்பெற்ற தலம் என்பதை ‘ஈழநன்மண்டலஞ்சேர் பொன்னுலகம்’ என்றும் ‘பிறவிப்புன்மை இருள் நீக்கும்பதி’ என்றும் சேனாதிராசா முதலியார் தமது ‘நல்லூர் வெண்பாவில்’ புகழ்ந்து கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லையம்பதி ஒரு கோயில் நகரமாகும். நல்லையம்பதியில் கீழ்த்திசைக்கண் வெயிலுகந்த பிள்ளையார் கோவிலும், தென்திசைக்கண் கைலாசபிள்ளையார் கோயிலும், மேற்றிசைக்கண் வீரமாகாளி அம்மன் கோவிலும், வடதிசைக்கண் சட்டநாதர் கோவிலும் அணிசெய்கின்றன. இவற்றின் நடுவே கந்தப்பெருமானது ஆலயம் உள்ளது. இவ்வாலயங்கள் சூழவிளங்கும் நல்லையம்பதியில் எழுச்சிபெற்றதே ஸ்ரீகைலாஸநாதர் ஆலயம் என்ற நல்லூர் சிவன் கோவிலாகும். இக்கோயில் இருக்கும் வளவு தமிழ் மன்னர் காலத்தில் ‘மின்னெறிஞ்சான் வளவு’ என்று அழைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விடம் ஒரு காலத்திற் போர்க்களமாகவும் விளங்கியதென அறியமுடிகின்றது. இவ்வாலய வரலாறு பற்றியறிவதற்கு வட்டுக்கோட்டை ‘நாவன்னா’ என அழைக்கப்படும் நாவன்மைமிக்க சிவஸ்ரீ நா.சிவசுப்பிரமணிய சிவாசாரியார் (1848-1929) ஆயிரத்து அறுநூறு விருத்தப்பாக்களிற் பதினேழு சர்க்கங்களையுள்ளடக்கி உருவாக்கிய ‘ஸ்ரீகைலாஸநாதர் புராணம்’ எனும் இக்கோயிற்றலபுராணமும், இவ்வாலய ஸ்தாபகர் சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்களின் தருமசாதனமும் ஆதாரங்களாக அமைகின்றன.

ஆலயத்தின் அமைப்பு :

நல்லூர் கைலாசநாதர் கோயில் அமைப்பு முறையைக் கருத்திற் கொள்ளுமிடத்திற் கிழக்கு மேற்காக உள்ள பழைய பருத்தித்துறை வீதியை முன்புறமாகக் கொண்டதும், கல்வளவின் நடுவிற் கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கு நோக்கிய வாசல்களையுடையதாகவும் ஆலயத்தின் கருவறை, அர்த்த மண்டபம், ஆகியனவற்றையும் உள்ளடக்கியதுமான இவ்வாலய மையப் பகுதி விளங்குகின்றது. கிழக்கிலிருந்து மேற்காக விநாயகர், ஸ்ரீ கமலாம்பிகை. சிவகாமி சமேத நடராஜர், ஸ்ரீகைலாசநாதர் சுவாமி, வள்ளிதேவசேனா சகித சுப்பிரமணியர் ஆலயங்கள் ஒழுங்காக வடக்கு நோக்கியதாகக் காட்சி தருகின்றன. கைலாசநாத சுவாமியின் கருவறையின் விமானம் வட்டமாகவும், மூலலிங்கத்தின் ஆவுடையார் வட்டவடிவமாகவும் விளங்குகின்றது. ஸ்ரீகமலாம்பிகையின் கருவறையின் விமானம் சதுரவடிவமாக இரண்டு கைகளையுடைய அம்பிகையை மையமாகவும் கொண்டு விளங்குகின்றது. இரு கருவறைகளுக்கும் தனித்தனியாக அர்த்த மண்டபமும் உண்டு. கிழக்கு நோக்கிய கருங்கல் வேலைப்பாடுகள் நிறைந்த கோமுகைகள் மூலாலயத்தை நன்கு அலங்கரிக்கின்றன. ஸ்ரீ கமலாம்பிகை, ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆகிய இரு மூலஸ்தானங்களினதும் நடுப்புறம் நடரரிர் சன்னிதியும், அம்பாள் மூலாலய அர்த்த மண்டபத்தின் இடப்புறமாகச் சுப்பிரமணியரின் கருவறையும் விளங்குகின்றன. சிவன் அம்பாள் கருவறையின் அர்த்த மண்டபத்தையடுத்து ஜந்து சந்நிதிகளையும் இணைக்கின்றதாக ஸ்நபன மண்டபத்தின் ஒரு பகுதியாக மஹா மண்டபம் விளங்குகின்றது. ஸ்நபன மண்டபம் வடக்கு நோக்கியதாக மூன்று வாசல்களையும், விநாயகர் சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளினைத் தரிசிப்பதற்குரிய பிலத்துவாரங்களையும் கொண்டதோடு கிழக்கு நோக்கிய ஒரு வாசலையும் கொண்டு விளங்குகின்றது. ஸ்நபன மண்டபத்தின் மேற்குப்புறம் கிழக்கு நோக்கியதாகப் பரிவார உற்சவ மூர்த்திகள் விளங்குகின்றன.
தர்சன மண்டபம், கிழக்கு மேற்குத் திக்குகளிற் சுவர்களுடையதாக விளங்குகின்றது. மேற்குப்புறச் சுவருக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கியுள்ள மூன்று மாடங்களில் தெற்கிலிருந்து வடக்காக விஷ;ணு ரூபமான சந்தான கோபாலர், வீரபத்ரர் ஷேத்ரபாலர் ஆகிய மூர்த்திகளும் அதே போற் கிழக்குச் சுவருக்கு அண்மையாக உள்ள மேற்கு நோக்கிய மூன்று மாடங்களில் தெற்கிலிருந்து வடக்காகச் சண்டேஸ்வரர். ஸ்ரீ மஹஷரமர்த்தினி, விநாயகர் அகிய மூர்த்திகளும் விளங்குகின்றன. மூல ஆலயப்பகுதிக்கு ஈசான திக்கில் முதலாம் பிரகாரத்தில் இரு திருமஞ்சனக்கிணறுகளும், நவக்கிரக கோவிலும் விளங்குகின்றது. அம்பாளின் கோஷ;டங்களில் முறையே துர்க்கை, தகூஷpணாமூர்த்தி, இலிங்கோற்பவர் ஆகிய மூர்த்திகளம் அபிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளன. தென்மேற்குத் திக்கில் வடக்கு நோக்கியதாக நின்ற கொலு மண்டபமும், வட கிழக்கில் பாகசாலை களஞ்சியம், திருமண நிகழ்விற்குரிய சாப்பாட்டு மண்டபம், வாகன சாலை, கோசாலை என்பனவும் அமைந்தள்ளது. மேற்குப்பக்கத்தில் குருவாசம், கைலாஸநாதக் குருக்கள் அய்வு மையம், நூல் நிலையம், அலுவலகம் என்பனவும் அமைந்துள்ளது. ஆலய வாசலானது சிவனுக்கும் அம்பிகைக்கும் தனித்தனியாகப் பஞ்சதள இராஜகோபுரங்களும் அமைந்து மணிக்கூட்டு கோபுரமும் அமைந்ததாகவும் உள்ளது. ஆலய வாயிலுக்கு கிழக்குப் பக்க வாசலிலிருந்து மேற்கு வசந்த மண்டபம் வரையான நிலப்பகுதிகளும் சீமெந்து இடப்பட்டு மேற்கூரைகளும் அமைக்கப்பட்டு ஆலய உட் கட்டுமான வேலைகள் பெரிதளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சமய குரவர்கள் நால்வருடைய விக்கிரகங்களும் பிரதிஷ;டை செய்யப்பட்டு தற்போது காலசம்ஹர மூர்;த்தியின் சுதை விக்கிரமும் பின் வீதியில் தெற்கு நோக்கிப் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது.
உறுதியும் கனதியும் கொண்ட பித்தளைத் தனட்டு உருளைகளின் உட்புறத்தே செறிந்த வலிய கருங்கற்கலவையாகிய கொங்கிறீற் கலவையால் இறுக்கி உருவாக்கப்படடள்ளன. எப்பொழுதும் பளபளக்கும் தன்மை வாய்ந்த எட்டுத் தூண்களுடன், ஸ்நபன மண்டபமும் அதே போலத் தர்சன மண்டபத்தினுடைய பண்டிகையைப் பன்னிரு தூண்களும் தாங்கி நிற்கின்றன. செப்புத்தூண் சிவன்கோவில் எனச்சிறப்பாக அழைக்கப்படும் இக்கோவிலின் ஆரம்ப காலத்தில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் பெருவீதிப் பிரகாரம் என முப்பெரும் பிரகாரங்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கோவிலைச்சற்றியுள்ள பிரகாரத்தையடுத்து கிழக்குப் புறமாக இன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலப்பரப்பும், தெற்குப்புறமாக அமைந்திருந்த முன்னைய பூங்காவும், மேற்குப் பறமாக அமைந்துள்ள நந்தவனம் காரியாலயம் என்பன அமைந்துள்ள பகுதியே வெளிப்பறமாகும். வடக்குப் பமாக அமைந்துள்ள கோயில் வீதி, தென்திசையில் அமைந்துள்ள வைமன் வீதி எனும் நாற்பெரும் வீதிகளே அன்றைய பெருவீதிப் பிரகாரமாக அமைந்து விளங்கீற்று. இன்று இறைவனுடைய திருவுலா இரு வீதிகளில் மட்டும் வலம் வருகிறது. ஒன்று உட்பிரகாரம், மற்றையது ஆலயத்திற்கு பின்புறம் அமைந்துள்ள புதிய பருத்தித்துறை வீதி ஆகியவற்றுடன் கூடிய வெளிப்பிரகாரமாகும்.
நல்லூர் சிவன் கோயில் அநாவர்த்தன நிர்மாண வேலைகளைப் பொறுப்பேற்று காரணாகமதத்தில் அதிவிஷேட புலமையும் பயிற்சியும் கொண்ட ஸ்தாபகர் சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் காரணகமம் கூறும் விதிப்படி நிர்மாணித்த கைங்கரியத்தில் ஈடுபட்டவர்களுள் தலைமை வகித்தவர் இத்துறையிற் சிறந்த அனுபவம் பெற்ற இவ்வாலய சரவணை ஸ்தபதி அவர்களாவார். எண்பதுகளில் இடம்பெற்ற இவ்வாலய புனருத்தாரணம் செய்யப் பொறுப்பாக இருந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதகோட்டை நாகலிங்கம் ஸ்ததியும் அவர்களது மைந்தர்களும் ஏனைய சிற்பக் கலைஞரரும் ஆவார். 2006 இடம் பெற்ற இராஜகோபுரம், மணிக்கோபுரம், கொலு மண்டபம், பின் வாசல்வளைவு முதலான புனருத்தாராண வேலைகளுக்குப் பொநுப்பாக விளங்கியவர் இந்தியா கும்பகோணத்தைச் சேர்ந்த புருஷேhத்தமன் ஜ்தபதி குழுவினராவர்.
நல்லூர் கைலாசநாதர் கோவிலில், கோவில் அமைப்பு,மூர்த்திகள் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ள தன்மை, வழிபாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தவரை தனித்துவமும் சிறப்பும் காணப்படுகின்றது. கோவில் வடதிசை நோக்கியதாக அமைக்கப்பட்டதற்கேற்ப ஏனைய அம்சங்கும் இடம்பெற்றுள்ளன. வடக்கு நோக்கி அமைய வேண்டிய கோமுகைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. திருக்கோயிலின் இடது புறத்தில் வடகீழ்த்திசையில் அமைய வேண்டிய நவக்கிரக மூர்த்திகளின் கோயில் கோயிலுக்கு வலது புறத்தில் வடக்கே உள்ளது. வசந்த மண்டபமும் கோயில் அமைப்புக்கேற்ப கிழக்கே நோக்குவதாயிற்று . பரிவாரக் கோயிலாகிய ஆறுமுக சுவாமியின் கோயில் அமைவுக் கேற்ற வகையில் இடம் பெற்றுள்ளது. பஞ்சமூர்த்திகள் ஒருங்கே விளங்கும் இவ்வாலயத்தில் தேவி சந்நிதி வடக்கு நோக்கியதாக சிவனக்கு வலது புறமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மதுரையில் மீனாட்சியம்மையின் சந்நிதி சுந்தரேசுவரப் பெருமானுக்கு வலப்பக்கமாக அமைந்து
விளங்கும் ஐதீகம் இங்கும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, நல்லூர் கைலாசநாதர் கோயில் யாழ்ப்பாணத்தரசர்கால கைலாசநாதர் கோவிலின் சின்னமாக கருதப்படத்தக்க வகையில் பண்பாட்டின் வளர்ச்சிக்கு அரிய பணியாற்றி வருகின்றது. ஆலய தாபகர் கார்த்திகேயக் குருக்கள் அவர்களது தரும சாதனத்தின் வழிப்படியும் அவரது புத்திரர்கள் ஓய்வுபெற்ற முதுநிலைப் பேராசிரியர் இலக்கிய கலாநிதி, அமரர், பிரம்மஸ்ரீ கா.கைலாசநாதக்குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ இரத்தின கைலாசநாதக்குருக்கள் ஆகியோரால் பேணிவரப்பட்ட மரபுப்படியும் தற்போதைய பரிபாலகர் கிருஷ;ணானந்தசர்மா அவர்களால் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக பராமரிக்கப்பட்டு வருகின்ற இவ்வாலயம் நல்லூரில் சிறந்ததொரு சமய நிறுவனமாக விளங்கி இந்துப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு அரும்பெரும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...