🌺சோழ மன்னர்களில் ராஜராஜ சோழனுக்கு அடுத்து மிகவும் புகழப்படும் ராஜேந்திரசோழன், தன்னுடைய சிற்றன்னையின் மேலிருந்த அபரிமிதமான அன்பின் காரணமாக அவர் இறந்த பின் அவருடைய நினைவாக எடுப்பித்த ஆலயம் தான் கும்பகோணம் பழையாறை அருகே உள்ள பட்டீஸ்வரம் என்ற ஊரில் அமைந்துள்ள பஞ்சவன் மாதேவிஸ்வரம் ஆகும்.
🌺இக்கோயில் கல்வெட்டில் பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம் என்றும் இறைவன் பஞ்சவன் மாதேவிஸ்வர தேவர் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். பழுவூரை ஆண்ட பழுவேட்டரையரின் மகளான இவர் நக்கன் தில்லையழகி என்றும் தளிச்சேரி பெண்ணாகவும் ,வீராங்கனையாகவும் இருந்துள்ளார். இவரை ராஜராஜன் மணந்துள்ளார், இதை ராஜராஜனின் 27ம் ஆட்சியாண்டு கல்வெட்டின் மூலமாக அறிந்துகொள்கிறோம். இக்கோயிலுள்ள இரு த்வார பாலர் மற்றும் ரிஷபம் பழுவேட்டரையர்களின் கலைப்பாணியிலே அமைந்துள்ளது.
🌺 கருவறை, அர்த்தமண்டபம், மஹா மண்டபம் தேவகோட்டங்களுடன் அழகிய ஏக தள விமானமாகும், முன் பக்கத்தில் ராஜ கோபுரம் உள்ளது.
கருவறை முன்னுள்ள ரிஷபம், தத்ரூபமாக உள்ளது, ஒரு சிறிய கன்று அமர்ந்துள்ளது போன்றே அணிகலன்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
🌺 கிரீவத்திலும், கிரிவ கோஷ்டங்களிலும், மஹா நாசியில் மத்தியிலும் சுதை சிற்பங்கள் உள்ளன. ஒருபக்க சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிக்ஷடனர், மாந்தன் மட்டும் தனியே உள்ளார்.
பின்பக்கம் லிங்கோத்பவர் உள்ளார். மற்றோரு சுவற்றில் பிரம்மா, துர்கை, அர்த்தநாரீஸ்வரர், அன்னையை சமாதானம் செய்யும் கங்காதரராக உள்ளார்.
🌺மகர தோரணங்களின் நடுவே நிருத்த விநாயகர்,கஜ சம்ஹார மூர்த்தி,ராவண அனுக்கிரக மூர்த்தி, பிக்ஷடனார், மஹிஷாசூர மர்த்தினி,கிராதார்ஜுனியம் உள்ளது.
🌺கிரீவத்தில் கண்ணப்பர், யானை லிங்கத்தை வழிபடுவது,கஜ சம்ஹார மூர்த்தி என உள்ளது. ராஜேந்திரன் லிங்கத்தை வணங்குவது போல் உள்ள சிற்பம் ஒன்று மேலே மஹா நாசியின் நடுவேயுள்ளது
உள்ளே மண்டபத்தில் இரு பல்லவர் கால பைரவ சிற்பமும், சூரியன் மற்றும் மிக அழகிய சுந்தரர் சிற்பமும் உள்ளது.
🌺இறைவனுக்கு நெய்யமுது, திருவமுது, பருப்பமுது, கரியமுது, உப்பமுது , மிளகமது,அடைக்காயமுது அளிக்கவும் , நொந்தா விளக்கு, சந்தி விளக்கெரிக்கவும் நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
🌺நன்முறையில் அங்குள்ள குருக்களால் பராமரிக்கப்படுகிறது. தற்போது ராமநாதன் என்று அழைக்கப்படும் இக்கோயில் வாழை தோப்புக்களின் மத்தியில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வர் கோயில் துர்கையை பார்க்க செல்லும் பக்தர்களில் ஒரு 5% மக்களாவது இக்கோயிலுக்கு செல்லலாம். கும்பகோணம் செல்பவர்கள் மறக்காமல் செல்ல வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
#பட்டீஸ்வரம் #ராஜேந்திரன் #பள்ளிப்படை #ராஜராஜன் #பஞ்சவன்_மாதேவி #thirunthudevankudi #கற்கடேஸ்வரர் #கோயில் #கடகம் #temple #காஞ்சிபாபுமனோ #பாபுமனோ #Temple #கும்பகோணம் #kumbakonam #babumano #kanchibabumano #சிவன் #சோழா #சோழர் #தமிழ்நாடு #god #sivan #chola #tamilnadu #கும்பகோணம்_நாட்கள் #patteswaram #rajendiran #rajarajan
Google Map: https://goo.gl/maps/4W2tmZa8UbxMUQTH9
No comments:
Post a Comment