Wednesday, March 15, 2023

ஒருவனுக்கு ஒருத்தி தான் பிறகு முருகனுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர்கள் என்று தவறான எண்ணத்துடன் சித்தரித்து பேசுபவர்களுக்கான தெளிவுரை இது!!!

_*முருகனுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர்கள்*_ 
ஒருவனுக்கு ஒருத்தி தான் பிறகு முருகனுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர்கள் 
என்று தவறான எண்ணத்துடன் 
சித்தரித்து பேசுபவர்களுக்கான தெளிவுரை இது!!!

 தமிழ் கடவுள் முருக பெருமானின் துணைவியர்கள் இருவர் 1. தெய்வானை அம்மன்  2. வள்ளி அம்மன்.

1. தெய்வானை அம்மன் : தேவலோக பெண்ணான தெய்வானை அம்மனின் கையில் உள்ள மலர் குமுத மலர். குமுத மலர் சந்திரனை பார்த்து தான் மலரும். இது தேவலோகத்திற்கு உரிய மலர். முருகப் பெருமானின் இடதுகண் சந்திரன்.

தெய்வானை இச்சா சக்தி ஆவார்.

2. வள்ளி அம்மன் : வேடர் குலத்தில் பிறந்த வள்ளி அம்மனின் கையில் உள்ளமலர் தாமரை மலர். தாமரை மலர் சூரியனை தான் பார்த்து மலரும். இது பூலோகத்திற்கு உரிய மலர். முருக பெருமானின் வலது கண் சூரியன்.

வள்ளி அம்மன் கிரியா சக்தி ஆவார்.

3. முருக பெருமான் கையில் உள்ள வேல் ஞான சக்தி ஆகும். இது அறியாமையை அகற்றுவதற்கு.

வேட குறமகளை மணந்து பூலோக மனிதர்களையும்,  தேவலோக தெய்வானையை மணந்து
விண்ணுலகையும் காக்கின்றார். வள்ளி அம்மன் குறவர் இனம் ,தெய்வானை தேவரினத்து பெண். 

மனித , தேவர் இனங்களுக்கு அப்பாற்பட்டவர் இறைவன் என்பதை உணர்த்துகிறார். 

ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் மனிதனிடம் இருக்குமே தவிர, இறைவனிடத்தில் இல்லை.

முருகப்பெருமான் அனைவரிடத்தும் கருணை கொண்டவர்.

முருகப் பெருமானை 1. களவு 2. காமம் 
3. பொய் 4. பொறாமை 5. அகந்தை 6. ஆசை இத்தகைய ஆறு தீய குணங்களை அறவே அழித்து "சரவண பவா" என்ற ஆறெழுத்து மந்திரத்தை நினைத்து உள்ளன்போடு உருகி முருகனை வணங்குபவர்களுக்கு இச்ச சக்தி+ஞான சக்தி+கிரியா சக்தி கொண்டு இம்மையிலும், மறுமையிலும் சகல செளபாக்கியங்களையும் தருவார் என்பதை உணர்த்தவே இரண்டு தேவியர்களுடன் காட்சி தருகிறார்.

ஐயம் என்றால் திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையில் பாருங்கள் முருகனின் இருபுறத்திலும் சூரிய சந்திரர்கள் (இடது  வலது கண்களாக) இருக்கிறார்கள். 

இது தெரியாமல் பலர் தவறான கருத்துகளை பதிவுசெய்கின்றனர். தயவு செய்து இனிமேலாவது இரண்டு மனைவியர்கள் ஏன்?? ஏன்?? என்று வினாவுகின்றவர்களுக்கு இந்த உகந்த விளக்கத்தை தந்து புரியவையுங்கள்.✍🏼🌹

No comments:

Post a Comment

Followers

மருதமலை முருகன் கோயில் கோவை...

*மருதமலை* *முருகன் கோயில்...*  கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக...