தாருகாவனேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன் - தாருகாவனேஸ்வரர்
இறைவி - மயிலாம்பிகை.
ஊர் - திருப்பராய்த்துறை
மாவட்டம் - திருச்சி.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும்.
இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை .
பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது.
இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. பராய் மரம் சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.
இக் கோவிலுள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது, ஏனையோருக்கு வாகனமில்லை.
முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
உடலில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான நோய்களைப் போக்கும் சிறப்பு இந்தப் பராய் மரத்திற்கு உண்டு என்கிறார்கள்.
பராய் மரத்தின் இலையையும் ,
விரலி மஞ்சளையும் சேர்த்துச் செய்த மருந்தினை இங்கே பிரசாதமாகப் பெறுகிறார்கள் பக்தர்கள்.
இதைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் குணமாகின்றன என்பது பலரின் அனுபவம்.
தமிழ் நாடு திருச்சி - கரூர் - குளித்தலை செல்லும் பேருந்து சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம்.
No comments:
Post a Comment